Monthly Archives: ஜூலை 2010

அனைத்து; உயிர் சுமந்த நட்புறவிற்கும் – வித்யாசாகர்!

காதலின் காதலை பகிர்ந்தும் காதலை கலக்காத நட்பில், அண்ணன் தங்கை ராக்கி கட்டாத நட்பில் இறுகிய மனதில்; சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில், உதவிக்கு முன்னிலாவிட்டாலும் ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்; வாழ்வின் சுவரெல்லாம் இதயத்தின் பலமாக பூசிய உறவில், உயிர் பதிக்கும் அன்பின் நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 60

உனக்கு விரல் வத்தல் பிடிக்குமென்று நிறைய வாங்கிவந்தேன் போதுமானதை தின்று விட்டு மீதியை வீடெல்லாம் கொட்டி இரைத்தாய் அளவுக்கு அதிகமானால் எல்லாமே இப்படித் தான் என்றதில்; எனக்கும் நீ ஞானமானாய்!! ———————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 59

உனக்கு முகம் கழுவி வாசனை மாவு பூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன் என் அம்மா உன் பாட்டி எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உனை பார்த்து உன் நேர்வகிடு முடியழகு பார்த்து என்னையும் பார்த்து இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய் நினைத்தாயோ … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 58

உன் கால்சட்டை ஈரமானதில் மண் பூசி வந்து நின்றாய். ஐயோயெனப் பதறி மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்; மீண்டும் நீ சென்று நீரில் மூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்றே குளிருமோ என்று அதையும் மாற்றி விட்டேன் சோறெடுத்து சட்டையிலெல்லாம் பூசிக் கொண்டாய் – அதையும் மாற்றி விட்டேன் அடுத்து மீண்டும் கால் சட்டை ஈரமானது அதையும் மாற்றி … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 57

எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக