Daily Archives: ஓகஸ்ட் 14, 2010

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!

விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்! உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்! அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 5

ஞானம் என்பது அறிவென்று பொருள் கொள்; அறிவு சிந்தித்தலில் மட்டுமல்ல செயலோடு சிந்தித்தலில் சிந்தித்து செயல் படுவதில் செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் இடையே முடிவுறாத ஒன்றாய் மீண்டும் முளைக்கிறது. முடிவுற்ற அறிவு அதாவது முடிவுற்ற ஞானம் பேசுவதில்லை, பேசக் கிடைப்பதில்லை செயல்களாய் செயல்களில் கலந்துகொள்கிறது! கலக்காதவரை சப்தமிடுகின்றன அரைகுடத்தின் நீரலைகள்! ———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 4

உனக்கும் எனக்குமிடையே ஆயிரம் மைல்கள் தூரமிருக்கட்டும் நினைத்த உடன் நினைக்கும் நீ ஆயிரம் மைல்களை கொன்றாய் என்று தானே அர்த்தம்! ——————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 3

மனிதர்களின் மனசாக என்றோ எங்கோ பிரிந்து போன உறவின் மறுதோன்றலாகவே நீயும் நானும் இருக்கிறோமென்பது தெரியாதவரை – இதையத்தை கொடுப்பதாகயெல்லாம் பிதற்றுகிறது தான் மனசு! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 2

போர்வீரர்கள் யாருமே சாகாதவர்கள் நமக்காக உயிர்தியாகம் செய்து நம்மோடு – வாழ்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் எப்படியோ எதிரி நாட்டின் வீரர்களை மட்டும் கொண்று விட்டதாகவே சொல்லி வெற்றிக் கொடி ஏற்றுகிறோம்! கொடியில் தெரியாத ஒரு உயிர் வண்ணங்களுக்கிடையே கலந்து இறந்த எல்லோரையுமே நினைவில் கொண்டுக் கொள்கிறது!! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்