Daily Archives: ஓகஸ்ட் 17, 2010

அரைகுடத்தின் நீரலைகள் – 20

மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 19

உலகம் கொட்டக கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காண்பதற்கும் ஒரு கண் வேண்டும் தெளிவெனும் கண்; அல்லாது யாருக்கும் தெரியாதெனத் தோண்டும் குழிகள் நாளை நமக்காகவும் திறந்தே இருக்கும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 18

ஒரு சின்ன ஊரில் தெருவில் வீட்டில் பிறக்கிறது ஒரு தேசத்திற்கான வன்முறை. வீடுகள் சரியெனில் நாடும் சரி! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 17

மதம் ஜாதி ஏன் இனம் கூட உன்னை தாண்டி பிறரையும் வளர்க்குமெனில் வைத்துக் கொள்; அது உன்னையல்ல பிறரை பிறர் உணர்வை பிறர் வாழ்வை ஒடுக்குமெனில் உன்னையும் சேர்த்துக் கூட கொன்று முடி மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே அவைகளில் பற்று கொள்!! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 16

மதம் தேவையென்று நான் எழுதியதுண்டு, அதனால் என் கைகளை இப்போது முறித்துக் கொள்ள முடியவில்லை, நான் சொன்ன தேவை; மனிதனை மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும், அல்லது வைத்திருக்க மட்டும் – மதங் கொள்ளும் வரை’க்கல்ல! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக