Daily Archives: ஓகஸ்ட் 16, 2010

அரைகுடத்தின் நீரலைகள் – 10

உறக்கம் சொக்கும் கண்களுக்குள் காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த இருட்டையும் புகுத்தும் ஒரு பொழுதாகவே இரவை எண்ணுகிறது மனசு; வெற்றியாளனின் உழைப்பில் இரவும் பகலும் பெயரற்றுக் கிடக்கிறது! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 9

தளும்பும் நீராகவே அலைகிறது மனசு உள்ளே வலியோ கவலையோ சிரிப்போ மரணமெனும் ஒன்றோ தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறது! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 8

உண்ணக் கொடுப்பதில் பிறர் தின்னக் கிடைத்தலும் தொந்தி ஒழித்தலும் புலன்கள் புரிதலும் வாழ்க்கை நெறி படுதலும் உண்டென்பது பட்டினியில் உள்ளவர்க்கும் ஈயாத புத்திக்கும் – ஒருகாலும் விளங்குவதில்லை! —————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 7

வாழ்க்கையை உலகை வெற்றிகளை யெல்லாம் சுண்டி ஒரு விரல் நுனியில் வைக்க மனசு போதும் என்று தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தவர் தான் முன்னே நிற்கிறார்; புரியாதவர்கள் வாயை மூடிக் கொண்டு மனதை திறப்போம்; நாளையாவது – பின்னிருந்து முன் செல்லலாம்! ——————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 6

எத்தனை சாமி வந்தும் தன்னை நான் தான் சாமி என்று அடையாளப் படுத்திக் கொள்ள இயலாமையிலும் எப்படியோ நம்புகிறது மனசு சாமியை! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக