அரைகுடத்தின் நீரலைகள் – 25

ரு மனிதன் பிறக்கையில்
பிறக்கிறது மரணமும்
மனிதனோடு வளர்கிறது மரணமும்
மரணத்தை கொன்று கொன்று
வென்று விட்டதாய் எண்ணும் நாளில்
மரணம் மனிதனை நெருங்குவதை
மனிதன் அறிவதுமில்லை,
மனிதன் அடங்குவதுமில்லை!
————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரைகுடத்தின் நீரலைகள் – 25

  1. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    அரு​மையான​தொரு கருத்​தை கவி​தை​யாக ​செப்புகின்றீர்கள்

    //மரணத்தை கொன்று கொன்று
    வென்று விட்டதாய் எண்ணும் நாளில்
    மரணம் மனிதனை நெருங்குவதை
    மனிதன் அறிவதுமில்லை,
    மனிதன் அடங்குவதுமில்லை!//

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      இன்னும் நிறைய எழுதும் எண்ணமுண்டு விஜய். ஆனால் புரிபவர்கள் விரும்புபவர்கள் படிப்பவர்கள் எப்படி எதிர் பார்க்கிறார்கள் என்று பார்க்கையில், ‘இதுபோன்ற கவிதைகள் கசந்து விடுகிறதோ என்றொரு பயம்.

      நாம் பிறக்கும் போதே தொண்ணூறு சதவிகிதம் பெற்றோரின் எண்ணங்களை குணநலன்களை செய்கைகளை உடையவர்களாகவே அதிகபட்சம் பேர் பிறக்கிறோமாம்.

      பிறகெங்கு உலகிற்கான புதுமையை கொண்டு வர? அதன் பின், நாளடைவில் பெற்றோர் சார்ந்து, சுற்றியுள்ள உறவுகள் சார்ந்து, உலகம் சார்ந்து தன்னை மாற்றியும் வளர்த்தும் கொள்கிறோம்.

      அங்ஙனம் வளர்பவர்களில் நல்லவர்களாகவும் தீயவராகவும் வளரப் படுகிறோம். ஆக, நம் வினை பொறுத்தே நமக்கு எல்லாம் வருகிறது கிடைக்கிறது. மரணமும் அங்ஙனமே.

      எனில் நம்மை நாம் எவ்வளவிற்கு சீர் தூக்கிப் பார்த்து, திருத்தி, தக்க நல்வழியில் வாழ, பிறரை வாழ வைக்கக் கடமை பட்டுள்ளோம்’ என்பதை, அவரவர் அவரவர் இடத்தில் நின்று சிந்தித்து, தன்னை தானே சீர் படுத்திக்கொள்ள சொல்லமுனைவதே ‘இக்கவிதையின் நோக்கம்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக