33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!!

றந்த போராளிகளின்
உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு
நெஞ்சு பிளந்தது,

அருகே நின்று பார்த்தவன் சொன்னான்
அதலாம் பிணங்களென்று;

இல்லை.
பிணங்கள் இல்லை அவர்கள்;

உயிர் விட்டெரியும் எம்
விடுதலை தீபங்கள்,

நாளைய எங்கள் வாழ்வின்
ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும்
தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு

அவன் இவ்வுலக மனிதரைப் போலவே
சிரித்துக் கொண்டே போனான் –
எனக்குள்ளிருந்த விடுதலையின் தீ
சுடர்விட்டு எரிந்தது அந்த சிரிப்பில்;

எரிந்து அனல் பரப்பியது……………

அதன் அனலில் தகித்து –
சுதந்திர விளக்குகள் ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் சேர்ந்து – ஒவ்வொன்றாய் கூடி
மிக ஒய்யாரமாய் ஒட்டுமொத்தமும் எரியத் துவங்கின;

பரவிய வெளிச்சத்தில் புரிந்தது – நம் வேகத்தை
எதிராளிதான் வைத்திருக்கிறான் என்று;

இதோ, இன்று விடுதலைக்கான வெற்றிநெருப்பு
என் கண்களில் மட்டுமல்ல –
எல்லோரின் கண்களிலும் மிக நன்றாகவே சுடர்விட்டெரிகிறது!!
————————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!!

  1. lakshminathan's avatar lakshminathan சொல்கிறார்:

    ஆம் வித்யா உண்மை தான்

    இதற்கு உதாரணம் ராஜபக்சேவை லண்டன் யுனிவர்சிட்டியில் பேசவிடாமல் தடுத்தது.

    தமிழன் மடியிறான்னு வருத்தப்பட்ட சீமான், இது வரி உள்ளிருக்கும் சீமான் வெளியே வரமுடியவில்லை.

    ஆயிரம் தமிழனை கொன்று குவித்த ராஜபக்ஷே ஊறு ஊரை சுற்றி கொண்டிருக்கிறான்

    உயிர் பேச்சுக் கொடுத்தவன் உள்ளே

    உயிர் மூச்சு எடுத்தவன் வெளியே

    என்ன்ன நியாயம்?

    என்று தனியும் என் பாரதியின் தாகம்?

    லக்ஷ்மிநாதன்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      சீமானை உள்ளே வைப்பார்களா!!!!!!!! வைத்தால் அவ்வளவுதான் உலக தமிழர்களெல்லாம் கிளர்த்தெழுந்துவிடுவார்கள் என்று கற்பனை செய்துக் கொண்டிருந்த எனக்கெல்லாம் ஏமாற்றம் தான் கிடைத்தது.

      மாறாக, அவர் தன் சுயநலத்திற்காக அரசியல் செய்வதாக அவதூறு சொற்கள் வேறு, கேட்க கொடுமையானது.

      அவரோடு பழகியவருக்க்த் தான உண்மையில்; அவரின் ஈழப் பற்றும், நேர்மை குணமும் தெரியும். அரசியல் பினந்தின்னிகளுக்கு மத்தியில் அவர் சுத்தமானவர் என்பது மட்டும்; நாங்கள் அவரோடு பழகியதில் அறிட்ன்ஹா உணமி லக்ஷ்மி.

      காலம் எல்லாவற்றிற்குமான பதிலை வைத்திருக்கும்.. பார்ப்போம்!!

      Like

  2. Mangal's avatar Mangal சொல்கிறார்:

    அவர்கள் பிணங்கள் இல்லை.
    நாளை மலரபோகும் நம் ஈழத்தின்
    தீப சுடர்கள்

    மங்கள் துரை
    குவைத்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மங்கள், நிகழும் வரைதான் எதுவும் வியப்பாக இருந்து நம்மை மலைக்க வைக்கிறது. நடந்து முடிந்தபின் இவ்வளவு தானா என்று தோன்றும்.

      அங்ஙனம் ஓர்தினம், நம் மக்களும் ஓர் சுதந்திர தேசத்தில் வசிக்கத் தான் போகிறார்கள். அப்படி அவர்கள் வசிக்கும் அந்த சுதந்திரக் காற்றில்; அணையா தீபமாக இந்த விடுதலை சுடர்கள் பட்டொளி வீசி ஜொளிக்கத் தான் போகின்றன..

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி