கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

ன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி திருமதி. சின்னப் பொண்ணு அம்மா, இசையமைப்பாளர் சகோதரர் திரு. ஆதி என எல்லோருமே தன் உறவு போல வளம் வந்தார்கள் இவ்விழா நடந்திருந்த ஓரிரு நாட்களில்.

மொத்தத்தில் நன்றிக்குரியவர் விழா ஏற்பாடு செய்திருந்த சேது ஐயா என்றாலும், ஒளிஒலி பதிவு செய்த ஜெஸ்ஸி வீடியோ சகோதரர் சலாம் மற்றும் ஒலி எழுப்பி உதவிய சகோதரர் ஏசுரத்தினம் ஆகியோரும் பெருத்த நன்றிக்குரியவர்களே..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    சென்ற மாதம் பத்தொன்பதாம் நாள் பதியப் பட்டது இக்காணொளி.

    என் புகைபடங்களுக்குக் கீழே, நான் எத்தனையோ முறை சொல்வேன், புகைப்படங்கள் பொய் சொல்லும் என்று. நாட்கள் கடந்து வயோதிகம் முற்றினாலும் அழகென்றே காட்டும் புகைப்படம் என்று.

    எனவே அப்போது இருந்த மலர்ச்சியை வயது கடத்திவிட்டது என்பதற்கு இதோ இக்காணொளி சாட்சி…

    உண்மை உண்மையாகவே இருக்கட்டும். சில புகை படங்கள் அழகு படுத்தப் பட்டது அல்லது புத்தக தேவைக்காக அழகாயிருந்த போது எடுக்கப் பட்டது என்பதை தங்களுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை என் எண்ணம்.

    தற்போது அதில் பாதியை கணினி தந்த கண்ணாடி மறைத்துக் கொண்டது. மீதியை எழுத்திற்காக விழிதிருக்கும் இரவு கொண்டு போகிறது!

    பெருத்த நன்றிகளுடன்..

    வித்யாசாகர்
    http://vidhyasaagar.com/2010/12/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/

    Like

  2. கோவை கவி's avatar கோவை கவி சொல்கிறார்:

    என் புகைபடங்களுக்குக் கீழே, நான் எத்தனையோ முறை சொல்வேன், புகைப்படங்கள் பொய் சொல்லும் என்று. நாட்கள் கடந்து வயோதிகம் முற்றினாலும் அழகென்றே காட்டும் புகைப்படம் என்று.

    எனவே அப்போது இருந்த மலர்ச்சியை வயது கடத்திவிட்டது என்பதற்கு இதோ இக்காணொளி சாட்சி…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உண்மையை உண்மையாகவே ஏற்றதற்கு நன்றி சகோதரி. நம் புகைப்படம் பார்த்து விட்டு தொலைபேசியில் அழைத்தவர்கள் மடல் செய்தவர்கள் பேசியவர்கள் நிறைய பேருண்டு. அவர்களிடம் அத்தனை எல்லாம் இப்போது இல்லை என்பேன். நம்ப மறுப்பார்கள்.. அதனால் தான் இந்த மடலும்..

      Like

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி