Monthly Archives: பிப்ரவரி 2011

GTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி!!

எனக்கான அங்கீகாரத்தை தன் மகிழ்வாகக் கொண்டு  பூரிக்கும், என்னன்பு உறவுகளுக்கும், என் படைப்புக்களை எனைகாட்டிலும் பெரிதாக மதித்து, என் உழைப்பினை தலைமேல் சுமந்து; எனை உலகமெலாம் கொண்டுபோய் சேர்க்கும் GTV  தொலைக்காட்சிக்கும், குறிப்பாக பெரும் அன்பிற்குரிய தோழமை உறவு றேனுகா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பு வணக்கமும்!! வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!

மணமகன்: ராமநாதன்  ரவி தமிழ்வாணன் மணமகள்: சிந்தாமணி நாராயணன் நாள்: 07.02.2011 நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து!! வெள்ளை வானத்தில் – வீழாநட்சத்திரங்கள் இன்று இவர்களை எண்ணி மின்னுமோ.. அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை வெளிச்சம் நோக்கித் திறக்குமா… … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

68) முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

போராட்டத்தின் – ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில்; உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை; ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை – சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே – கடக்கிறோம்; எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் – நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா!!

வாழ்வின் மௌனமான வாய்பேசா தருணத்திலும் வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை உணரும்  தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை.. வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும்,  பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்