Monthly Archives: ஒக்ரோபர் 2012

42, உடல்நெய்யும் சாபக்காரி..

அவள் பாவம்.. அவளின் உடம்புதான் அவளுக்கு சோறுபோடும் எந்திரம் அவளின் உடம்பு தான் அவளின் உயிர்குடிக்கும் சாபமும்., உடம்பை உடம்போடு எரித்துதான் சோறு சமைக்கிறாள் உடல்நெய்துதான் ஆடை அணிகிறாள் குழந்தை வளர்க்கவும் கணவன் குடிக்கவும் உடல்தான் அவளுக்குப் பணமாகிறது., இரவின் அழகை உடுத்தி உடம்பின் வெளிச்சத்தில் மயக்கி குவியும் பணத்தில் சோகந் தாங்கி சொர்கத்தின் வாசலைத் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின் மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான சிநேகம்.. இருட்டை உடைத்துப் பிறக்கும் கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்.. கொட்டித் தீர்க்கும் ஆசைகளை வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில் பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்.. எழுதிக் கரையாத உணர்வுகளாய் ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்