கலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)

ண்ணு பொன்னு கலங்காதே
காலம் மாறும்மா; நீ
வெற்றி நோக்கி நடந்தாலே
எல்லாம் மாறும்மா..

நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும்
சொல்லிப்பாரும்மா
உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும்
நிமிர்ந்து நில்லம்மா..

(கண்ணு பொன்னு கலங்காதே..)

விதவைன்னு சொன்னது யாரு
வரதட்சணை கேட்டது யாரு
மலடின்னு பழிச்சதாரு
மருமக(ள்)ன்னு கொன்னது யாரு
அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு?
எல்லாம் பெண்ணே நீயும்தானே
மாத்தி யோசிம்மா;
இந்தக் காலம் உனக்கு’ உனக்காக
திருப்பிப் போடும்மா..

(கண்ணு பொன்னு கலங்காதே..)

விண்வெளியெட்டி தொட்டுட்ட
ஸ்டெதாஸ்கோப் மாட்டிட்ட
அரசியலில் அறிவியலில்
முன்னேநடக்கத் துவங்கிட்ட
நீதிமன்றம் காவல்நிலையம் – உன்னைச்
சேர்க்குது; நீ எழுந்துநடக்க நினைத்தாலே
சலாம் போடுது;
உனக்கு சலாம் போடுது..

(கண்ணு பொன்னு கலங்காதே..)

கலாச்சாரச் சர்க்கரை – தேவைறிந்துப்
போட்டுக்கோ
சாதிமதம் ஏற்றத் தாழ்வை – அடியோட
நீக்கிக்கோ, நீயும்நானும் ஒண்ணுதான்னு
தோழமையில் காட்டிக்கோ –
தொங்குந்தாலி நெஞ்சிமேல உறவைச் சேர்க்கட்டும்
உன்னைக் கண்ணுக்குள்ள கண்ணா வச்சு
காலம் தாங்கட்டும்…
உன்னைக் காலம் தாங்கட்டும்…

(கண்ணு பொன்னு கலங்காதே..)
————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)

  1. /// கலாச்சாரச் சர்க்கரை – தேவைறிந்துப்
    போட்டுக்கோ
    சாதிமதம் ஏற்றத் தாழ்வை – அடியோட
    நீக்கிக்கோ, நீயும்நானும் ஒண்ணுதான்னு
    தோழமையில் காட்டிக்கோ ///

    கருத்துள்ள வரிகள் ஐயா…

    Like

பின்னூட்டமொன்றை இடுக