இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

ட்புறவுகளுக்கு வணக்கம்,

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”

ன் கன்னித் தமிழுக்கும்
தாயிற்கும்
ஆசிரியைக்கும்
அன்பு மனைவிக்கும்
தோழிகளுக்கும்
தங்கைகளுக்கும்
முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்..

த்தனை ஆங்கிலத்தையும்
அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும்
நெஞ்சுநிமிர்ந்து நடந்தே –
ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட
எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்..

தோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும்
எனது அன்னையர் தந்தையர்
அண்ணன் தம்பிகள்
அக்காத் தங்கைகளுக்கும்
தோழியர் தோழர்களாகிய
தமிழோசைக் குடும்பத்திற்கும்,

வைத் தலைமை ஏற்றுள்ள அன்புச் சகோதரி
திருமதி அமுதா கோபால் அவர்களுக்கும்,
முன்னிலை வகுத்து நமக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்
திருமதி செல்லம்மா வித்யாசாகர் அவர்களுக்கும்
எனது அன்புநிறை வணக்கம்..

முட்களை மிதித்து நடந்தாலும்
நம்பிக்கை ரத்தத்தைத் தீர்த்துக் கொள்ளாதவள்,
நிந்தனை ஆயிரம் வரினும்
கண்டவர் மனதுள் அன்பாகவே அணைபவள்,
கொடூர விதியது திருப்பி திருப்பிப் போட்டாலும்
தனது தீரத்தாலும் திறத்தாலும் நன்னடத்தையாலும் மட்டுமே
தனது வாழ்க்கையை
நேரே நேரே மாற்றிக்கொண்டவள்;

எனது அதீத அன்பின் மதிப்பின் உச்சம்
தாய்மைக் குறையாதக் கவிதாயினி
எங்களின் கவியரங்கத் தலைமை திருமதி. பாரதிக் கண்ணம்மா
அவர்களுக்கும் எனது மதிப்பான முதன்மை வணக்கம்..

றுதியாக, எனது தோளோடு தோள் நின்று
தோழமையோடு கவிதை வாசிக்க வந்திருக்கும்
எனது சகோதரக் கவிஞர்களையும் வணங்கி
எனது கவிதைக்கு வருகிறேன்..

தலைப்பு – பெண்கள் நம் கண்கள்..

பெண்வழியே புவியைக் கண்டோர் நாம்
பெண்வழியே பூமிப் பந்துமிதித்தோர் நாம்
பெண் இட்ட முதல் எழுத்தில் பாடத்தைத் துவங்கியோர் நாம்
நமக்குப் பெண்கள் கண்களாக இருப்பதில்
பெரிய ஆச்சர்யமில்லை;

கும்பிட்ட சாமி நேரில் வந்துநின்றதும்
கேட்டிட்ட சாமி கேட்டதைத் தந்ததும்
வாங்கிய வரத்தையும் நமக்கென வாங்கியதும்
பெண்களே பெண்களே..

வரலாறில் இல்லாமலே வாழ்வதும்
வாழ்வதைக் காட்டிக்கொள்ளாமளே நமக்காக மடிவதும்
கண்ணீராய் வியர்வையாய் ரத்தமாய்
அன்பூறிக் கரைவதும்,
கண்முன்னே கைதொழக் கிடைப்பதும்
பெண்களே பெண்களே..

கருப் பொருளாகி
காட்சிப் பிழையாகி
காய்ந்த மலரென வீழ்ந்தும்’ உள்ளத்துள்
நினைவுகளாய் மணத்து –
நாம் கைதொட்ட இடத்திலெல்லாம் வளைந்து
நமை நிமிர்த்திக் கொண்டிருக்கும் நேர்மை’
கண்ணியம்’
அன்பு’
நாகரீகம் கற்பித்த முதலெழுத்தும்
பெண்களே பெண்களே..

அவர்களை ஒரு கல்வியுள் அடக்கப்
பணித்த தமிழோசையின் கட்டளையை ஏற்பினும்
கல்வியில் பெண்டிரின் பெரும்பங்கைக் காட்டிட
என்னொரு விரல் போதாது;

அவர்கள் ஆற்றிய பெரும்பணியின்
வியர்வை ஆறாகி ஓடும்; சிந்திய ரத்தம்
இன்னும் பல தலைமுறையை
நன்னிலத்தில் வார்க்கும்..

இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற
தமிழக சட்ட மேலவையில்
முதல் உறுப்பினரான
முத்துலெட்சுமி அம்மையாராகட்டும்..

கருந்துளைக்கு
உச்சவரம்பு நிறை கூறிய
முதல் தமிழ் விஞ்ஞானி
முனைவர் பிரியா நடராஜனாகட்டும்..

எச் ஐ வி தொற்று பற்றி
விழிப்புணர்வு பாடம் புகட்டி
இந்தியாவில் இதுவரை
இருபதாயிரம் உறுப்பினர்களைச் சேர்த்த
பாசிட்டிவ் விமன் அமைப்பின் நிறுவனர்
கௌசல்யாவாகட்டும்..

வெறிகொண்டு படித்தாலே தேர்ச்சிபெறும்
சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பில்
இந்திய அளவில் முதல்வந்த
தங்கை பிரேமாவாகட்டும்..

மருத்துவம் அறிவியல் கலைத்துறை
சட்டக்கல்வி கலைமேன்மை
விளையாட்டுப் பாடமென எங்கும் வியாபித்து
எல்லாம் சாதித்து
எமக்குத் தாயாகவும் தோழியாகவும்
சகோதரிகளாகவும் உற்ற உறவாகவும்
மகளாகவும் இருக்கும் பெண்கள் – வெறும்
கண்கள் மட்டுமல்ல;
அதனினும் முன்’ னெனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி..
—————————————————————————–
வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)

டுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..
ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..

அத்தனையும் கனக்குது
வாழ்க்கையா இனிக்குது,
அத்தனையும் கனக்குது – நாளைய
வாழ்க்கையா இனிக்குது..,

தூக்கத்தை தொலைக்குறேன்
கல்லுமுள்ளு கடக்குறேன்,
உண்ட வயிற் மீதிய
பாடத்தால நிறைக்கிறேன்..

(அத்தனையும் கனக்குது..)

கூட்டத்துல கலையுறேன்
கனவுகளை மறக்குறேன்
அம்மாத் தந்த முத்தத்தையும்
அப்போ அப்போ நினைக்கிறேன்

(அத்தனையும் கனக்குது..)

ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..

அப்பாக் கண்ணு கலங்கினா
அம்மா கண்ணும் கலங்குமுன்னு
தேர்ச்சிப் பெறத் துடிக்கிறேன்
என் ஆசைகளை இழக்கிறேன்..

சட்டைப்பையும் கிழியுது
புத்தகமோ கூடுது
ஆசிரியர் அடிக்கையிலப்
பெத்த வயிறு வலிக்குது..

எல்லாத்தையும் தாங்குறேன் – என்
சிலுவையை நான் சுமக்கிறேன்
எல்லாத்தையும் தாங்குறேன் நான்
சிலுவையை தினம் சுமக்கிறேன்..

ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..

புதுப் பள்ளிக் கூடம் – புதுப்
பசங்கக்கூட பூதம்
ஆசிரியரைக் கண்டாப் போதும்
இதயம் நில்லாமலே ஓடும்

பள்ளிக்கூடம் தப்பில்ல ஆனா
தூக்கத் தோளு தாங்கலை…
கண்திறந்தச் சாமிதான்
ஆனா கையுங் காலு ஓயலே..

ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..

ஓடியாட நேரமில்லை
உடன் பசங்களையும் காணலை,
காலத்தைக் கணினியிலக்
கற்பனையோடு தொலைக்குது

நொண்டிக்காலு குதிரையாட்டம்
எல்லாங் கூட மறக்குது
எழுதிவெச்ச கணக்குல
வாழ்க்கை யோட்டம் ஓடுது..

அத்தனையும் கனக்குது
வாழ்க்கையா இனிக்குது,
அத்தனையும் கனக்குது – நாளைய
வாழ்க்கையா இனிக்குது..,
————————————-
வித்யாசாகர்

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)

குச்சிமிட்டாய் வாங்கலாம்
கொடிகுத்திப் போகலாம்
வீரம் விளைந்த மண்ணுல
விடுதலையைப் பாடலாம்…

(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)

சோகத்தை மாற்றலாம்
சொகுசு நிலமாக்கலாம்
கண்திறக்கும் அறிவியலால்
விண்கடந்தும் போகலாம்,

சத்தியத்தைப் பாடலாம்
சங்கெடுத்து ஊதலாம்
நித்தமும் மகிழ்ச்சியில்
மற்றவரையும் போற்றலாம்,

(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)

ஆண்டப் பரம்பரையை
படிக்கலாம், அவன் பட்ட வலியை
நினைக்கலாம், எட்டுத் திக்குமெமது வீரத்தை
பின் கண்ணியத்தோடு காட்டலாம்,

பட்டிதொட்டி மாற்றலாம்
படிக்கப் படிக்க பண்பைக் கூட்டலாம்
மூடதனத்துக் குப்பைகளை
மூட்டைகட்டிப் போடலாம்,

(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)

குடிசைகளை அகற்றலாம்
குறைந்தது பொத்தல்களையேனும் மூடலாம்
மூடியவீட்டில் அன்புநிறைத்து
முதியோரில்லாம் ஒழிக்கலாம்,

சட்டை பத்து வாங்கலாம்
அதில் இல்லார்க்கிரெண்டென நீக்கலாம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க
ஆனந்தக் கூத்தாடலாம்,

அக்கம்பக்கத்துப் பசி அறியலாம்
அவரை ஒரு பருக்கைச் சோற்றாலே
அணைக்கலாம், கூடியுண்ணும்
ஒற்றுமைருசியில் நாட்டை நித்தமும் நித்தமும் காக்கலாம்..

(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)
————————————————————-
வித்யாசாகர்

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

செய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)

ப்ஸ் தின்னாதே
பாப்பா பெப்சி தொடாதே
ஜீன்சு போட்டுக்கோ
பாப்பா சிக்கன் தின்னாதே

வால்மார்ட்டு வாழ்க்கையில
விழுந்துவிடாதே;

(பப்ஸ் தின்னாதே…)

தட்டுநிறைய இட்டிலி
தொட்டுக்கொள்ளச் சட்டினி
கல்லப்பருப்பு உப்புமா
தேங்காய்..ப்பால் இடியாப்பம் மறந்துவிடாதே;

(பப்ஸ் தின்னாதே…)

பச்சைக் கறி தின்னலாம்
பழவகைங்க சேர்க்கலாம்
டாப்ச்கூட மாட்டலாம்
பாப்முடியா வெட்டலாம்

பர்கர்னு பீசான்னு
மறபு மாறவேண்டாமே..

(பப்ஸ் தின்னாதே…)

பாவாடைச் சட்டை போட்டுக்கோ
கால்சட்டையை மாட்டிக்கோ
கேழ்வரகு வாங்கிக்கோ
சத்துமாவு சேர்த்துக்கோ

வடகம் வத்தல்
குழம்பு வெச்சா ஓட்டல் வெறுக்குமே; நம்ம
காலம் இனிக்குமே..

(பப்ஸ் தின்னாதே…)
——————————————–
வித்யாசாகர்

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்