மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)

காலம் போகுது வா வா வா..
மெல்ல மெல்லப்போகுது எழுந்து வா..
காற்றைப் போலக்கிளம்புவோம் வா வா
உலகமெங்கும் பரவுவோம் வா வா வா..

(காலம் போகுது..)

ஊழல் லஞ்சம் ஒழியனும்
பேரு நிலைக்க வாழனும்
ஏழைமக்கள் வருத்தமெண்ணி
வாழ்க்கை நமக்கு அமையனும்!

(காலம் போகுது..)

ஊட்டச்சத்துச் சோறுண்ணு
இரவுநேரம் உறங்கனும்
விடியும் காலை விளையாடி – நம்
தமிழர் வீரம் மீட்டனும்!

(காலம் போகுது..)

ஆங்கிலமும் கற்கனும்
அடுத்த மொழிகள் தெரியனும்
தாயை வணங்கும் பிள்ளைப்போல
தமிழை உயிராய் மதிக்கணும்!

(காலம் போகுது..)

சங்கக காலம் தெரியனும்
தமிழர் வரலாறும் படிக்கனும்
ஆண்டத் தமிழன் வீரத்தோட
விட்ட மண்ணைப் பறிக்கனும்!

(காலம் போகுது..)

வாழ்க்கை யொன்னும் நிலையில்லை
போகும் பாதை கொடிதில்லை
கொடுத்து வாழப் பழகிட்டா
மனிதம் நிலைக்க மகிழலாம்!!

(காலம் போகுது..)
—————————————
வித்யாசாகர்

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)

நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது
நெஞ்சு துடிக்குது நெஞ்சு..
எம் – செல்வச்செழிப்பினில் வந்தப்
புழுக்களைக் கொல்லத் துடிக்குது நெஞ்சு!

(நெஞ்சு துடிக்குது..)

கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது
கண்டு வலிக்குது நெஞ்சு..
எம் – செம்மொழி சொல்லிடும்
சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி!

(நெஞ்சு துடிக்குது..)

வீரம் மலிந்தது மாண்பு திரிந்தது
காமம் குத்துது நெஞ்சு..
எம் பிள்ளையர் பாவையர் – காதல் சதியிலே
வீழ்ந்திட வாடுது நெஞ்சு!

(நெஞ்சு துடிக்குது..)

கள்ளு குடிக்குது கல்வி மறக்குது
பணக்கொள்ளையி லெரியுது நெஞ்சு..
எந் தமிழர்பரம்பரை – தடுக்கி
விழாதொரு தடமதைத் தேடுது நெஞ்சு!

(நெஞ்சு துடிக்குது..)

பொங்கியெழுந்திடு.. போர்க்கொடி ஏந்திடு..
பெரும் படையெனச்சேர்ந்திடு நெஞ்சே; இனி
தவறெனில் களைவதும் சரியெனில் ஏற்பதும்
சத்தியமாகனும் நெஞ்சே..!!

(நெஞ்சு துடிக்குது..)
—————————————————–
வித்யாசாகர்

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

ங்கே எங்கே ஓடுற
யாரைப் பார்த்து ஓடுற
பேயைக் கண்டு நடுங்குற; நீ
சின்னப்பொய்யில் அடங்குற,

சுட்டிபையன் காதுல
சுத்தினது பேயிதான்
பெரியவனா ஆனதும்
பயத்தைமூட்டும் பேயிதான்.,

கண்ணைமூடி காட்டுல
கயிறுகட்டில் வீட்டுல
அடுப்புமூளை முடங்கின
பூனை கூட பேயிதான்.,

கட்டுக்கதைய விட்டுடு
கண்ணைத் திறந்து பார்த்திடு
இருட்டில் விளக்கை ஏற்றிடு
வெளிச்சத்தையே நம்பிடு..

வெள்ளிக்கொம்பு பல்லில்ல
வெளிய நீட்டும் நாக்கில்ல
அத்தனையும் பொய்யுடா; இது
அந்தக் காலமில்லைடா..

யாரு சொன்னா என்னடா
நீ எதிர்த்துநின்னு யோசிடா
அப்புறமா பாரடா – அட
அசைந்தது உன் நிழலுடா..
———————————
வித்யாசாகர்

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கதை சொல்கிறார் கேளுங்கள்..

ப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்..

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar

கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்;

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poems

நன்றி நட்புறவுகள் அனைவருக்கும்..

பெருமிதத்துடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனது இறவாமை ரகசியம்.. (48)

1
ரவு எனக்கு எதிரி
இரவு எனக்குத் தோழன்
இரவு எனக்கு எல்லாம்
இரவில்தான் எனக்கு வாழ்க்கை
படிக்கக் கிடைக்கிறது;

ஆனால்
பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை
பகலில் நான் தொலைந்துப் போகிறேன்
என்பதே கவலை;

பகல் தொலைவதால்
இரவு எனது மூடாவிழியில் கசிந்து
எல்லோருக்குமாய் விடிகையில்
மரணம் பற்றி எனக்கு
பயமெல்லாமிருப்பதில்லை

ஆனால் –
மரணத்தின் சொட்டு சொட்டான வலி
மாத்திரைகளின் உயிர்தின்னும் ரணம்
மருந்துக்கசப்பின் இனிக்காத வாழ்க்கை
என இதெல்லாம் வந்துவந்து போவதுதானோ (?) என்று
சிலநேரம் யோசிக்கிறேன்,

வேறு.. ?
வந்தவர்கள் செல்பவர்கள் தானே?

நான் மட்டுமென்ன (?)

வந்தவன் ஒரு நாள்
போவேன்,
அன்று எல்லாம் அற்றுப் போகும்..

மரணம் இனிக்கும் அந்தத் தருவாயிலும்
இரவு வரும்
பகல் வரும்
நான்… ?

நான் இரவாகவோ பகலாகவோ
இருப்பேன்;
எனது கவிதைகள் அன்று
யாராலோ எழுதவோ படிக்கவோப் படும்

இன்று மாத்திரை தின்னும் உடம்பை
அன்று மண் தின்று தீர்க்கலாம்
ஆயினும் நான் –
இந்தக் கவிதையாக உயிர்த்திருப்பேன்…
————————————————–

2
னக்கு விடிகாலைச் சிட்டுக்குருவியின்
சப்தம் போல
உள்ளே குறுகுறுக்கும் வார்த்தைகளின்
உணர்வுகளும் பிடிக்கும்;

வலியோடு
வலியற்று விடியும் இரவு எனக்கு
ஒருநாள்
விடியாமலும் போகலாம்
முடியும் நாளின் துளியை மெல்லும்
எனது எழுத்துக்கள் முற்றுப்புள்ளியைப்
பெறலாம்;

ஆனாலும் நான் இரவினூடே
கவிதைத் தேடி
அன்றும்
அலைந்துக் கொண்டிருப்பேன்

நான் அலைந்துப் போன தடம்
அன்று யாருக்கும் தெரியப் போவதில்லை
ஏதோ காற்றடித்துவிட்டு நின்றதாய்
உணர்ந்தவர்கள்
நினைத்துக்கொள்வார்கள்;

அதனால் தான்
இப்போதே எழுதி வைக்கிறேன் – எனது
மரணத்தைக் குடிக்கும்
இரவுக் கோப்பையில் வழியும்
யாரோ சிலரின் சாபத்தோடு’ நான் சாகாத எனது
எழுத்தின் ரகசியத்தையும்..
————————————————–

3
வா
ழ்க்கை எத்தனை இனிப்பானது.. (?)

அன்பு
நட்பு
காதலென நீளும்
உறவுகளின் நேர்மையில்
வாழ்தல் ரசிப்பேறி விடுகிறது;

குழந்தை தரும் முத்தம்
தாய் கோதும் தலைமுடி
மனைவி காட்டும் நேசம்
நண்பர்களின் அரவணைப்பு
அண்ணன் தம்பிகளின் நட்பு
அக்காத் தங்கையின் கண்ணீர்
தெருவில் வரும் போகும் மனிதர்களின் நேயம்
இன்னப்பிற உயிர்களின் ஈர்ப்பு
என எல்லாமே –
இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்கையில்
அருகே வரும் மரணம் தான்
பிறந்ததன் காரணத்தை சாகும்வரை
தேடவைக்கிறது..

இயற்கையை அலசி அலசிப்
பார்க்கையில்
மிஞ்சுவது மரணத்தைத் தவிர
வேறில்லை;

மரணம்
நம் கையில் எரியும்
விளக்குப் போல
அது சட்டென ஒருநாள்
அணைந்துப் போகலாம்..

அணையும் முன்
வாழ்ந்துக் காட்டுங்கள்;

வாழ்வோரே
உணருங்கள்’

வாழ்க்கை மிகச் சிறிது
மரணத்தினுள் சிக்கிய ஒன்று
மரணத்திற்குப் பின் வாழ்வதன் உயிர்ப்பை
வாழும்நாளில் உண்டாக்குங்கள்;

வாழ்ந்துவிட்டுப் போகையில்
விழும் மலர்களாக
நம் நினைவுகளும் இம்மண்ணில்
விழுந்திருக்கட்டும்..

அந்த நினைவுகள்
வாழ்வோருக்கு நல்வழியை காட்டட்டும்…
————————————————–
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்