எனது கவிதைகளுக்கு உயிர் தரும் வானொலி..

னது கவிதைகளுக்கு செவி சாயப் பெற்றோர் வாழ்க; இடம் தந்த ‘எஸ்.பி.எஸ். ஆஸ்திரேலிய வானொலி’க்கும் அன்புத் தோழர் திரு. றைசல் அவர்களுக்கும் நன்றி!!

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poems

பேரன்புடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவிதைகள், நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆஸ்திரேலிய வானொலியில் எனது நேர்காணல்

இனிய நட்புறவுகளுக்கு வணக்கம்,

வாரத்தின் நான்கு நாட்களில், தமிழுக்குக் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில், ஆஸ்திரேலியா வானொலி என்னிடம் கண்ட சிறிய நேர்காணல் ஒலிபரப்பு..

நேர்காணல் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/

ஆங்கிலத்தில் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/in/english

நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை
காதல் அன்று,

ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து
வெளியில் தொங்கும் நாக்கில்
வாஞ்சை தடவி
கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம்
எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்;

தெருவில் ஐஸ்வண்டி வரும்
காய்கறி காரர் வருவார்
மாம்பழக்காரி வந்துபோவாள்
கீரை விற்கும்
மீன்வண்டி வரும் போகும்
நாங்கள் காதல் வாங்கமட்டுமே தேவதை தேடி
தெருவெங்கும் அலைவோம்..

புதுப்படம் பழசாகி
ஊர் கொட்டகைக்கு வரும்
கோவில் திருவிழா மின்வண்ண விளக்குகளில்
ஊரெங்கும் ஜொலிக்கும்
அக்கம்பக்கத்துச் சண்டை
கூசாமல் தெருவில் நடக்கும்
நாங்கள் காதலுக்காக இதயத்தைக் கூறுபோட்டு
இடையே பெண்தேடி அலைந்துக் கொண்டிருப்போம்..

பள்ளிக்கூட பாதினாட்களில்
நாங்க அடிவாங்காமல் கற்ற பாடம் கூட
காதல் தான்,
காதலென்றால் அத்தனை இனிப்பு,
வீட்டில் அடித்தாலும்
அம்மா அப்பா அழுதாலும்
ஊரே சேர்ந்து காரி முகத்தில் உமிழ்ந்தாலும்
எல்லாவற்றையுமே பெருமையோடு
காதலுக்கு அர்ப்பணித்த அந்த நாட்கள்தான்
நாங்கள் எங்களுக்காக வாழ்ந்த நாட்கள்..

தலைசீவிக்கொள்ள ஆசைப் பட்டதும்
பவுடர் மணக்கப் பூசிக்கொன்டதும்
வெள்ளையாய் உடுத்திக் கொண்டு
ஊரெல்லாம் எங்களையேப் பார்ப்பதைபோல்
எண்ணி
தலைகோதி நடந்த அந்த நாட்கள்
அவள் பேசிச் சிரித்த தருணத்தைப் போலவே
மனதுள் பத்திரமாகப் பதிந்துக்கொண்ட
பசுமை நாட்களாகும்..

தேசியக் கீதம் பாடுகையில் எட்டிப்பார்த்து
தாகம் எடுக்கையில் தண்ணீர் கொடுத்து
வீட்டிற்குப் போகையில் சைகை காட்டி
இரவுதோறும் தூங்கக் கிடக்கையில் மனதுள் மெச்சி
என்னவென்றே அறியமுயன்றிடாத அந்தக் காதலை
வாழ்வின் கடைதூரத்திற்கும்
நிரப்பிக்கொண்ட பொழுதுகளை
அன்றையப் பாடல்கள் இன்று ஒலிக்கையிலும்
ரகசியமாய் புதிப்பித்துக் கொண்டே நகர்கிறோம்..

மறைக்காமல் சொல்வதெனில்
புத்தகப் பையினுள் படித்த பாடத்தைக் காட்டிலும்
வீட்டிற்குத் தெரியாமல்
எழுதிவைத்த அவள் பெயரும்,
அவளுக்கே தெரியாமல் சேகரித்த அவளின்
கூந்தல் உதிர்த்தப் பூக்களும்,
அவள் திரும்பிப் பார்த்த பார்வையின்
நினைவுகளுமே’ இதோ இப்போதுவரை
இனிக்கிறது..

அது எப்போதைக்கும் தவறாமல் இனிக்கும்..
————————————————–
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தெளிந்து தெரியும் நீரோடை..

லக்கின்றி ஒரு பயணம்
இமையம் தொடும் ஏக்கம்
எதற்கோ விசும்பும் வாழ்க்கை
எல்லாமிருந்தும் வெறுமை
கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும்
மயானமொன்றில் –
தனியே பறக்கும் பறவை;

கூடுகட்டும் ஆசை
குடும்பம் விரும்பும் மனசு
பாடித் திரியும் பாதையில்
பட்டதும் சுருங்கும் கைகள்
காதடைத்துத் தூங்கி –
கனவில் உடையும் நாட்கள்
காத்திருப்பில் வலித்து வலித்து
காலத்தால் நோகும் பிறப்பு;

சுட்டு சுட்டு வேகும் மனிதம்
பிற உயிர்கள் சுடாதிருக்க
வேண்டும் ஆசை
எழுதத் துடிக்கும் விரலில்
எரியூட்டும் மிருகக் கற்றை
சலிக்கவொண்ணா அத்தனையையும்
ஏற்றுக்கொண்டே ஓடி ஓடி
திரும்பிப் பார்த்துப் பார்த்து அழும்
சிறுபிள்ளை தோற்றம்;

படிக்கும் பருவமில்லை
இது வாழும் தருணம் என்றால்
கிடைக்கக் கிடைக்க அடையும் அறிவில்
கிடைத்திடாத இடம் கேட்டு
துடித்து துடித்து நகரும் நகர்வை
வரமென்றோ
சாபமென்றோ
தானே வாஞ்சை பூசிக்கொள்ளும்
வாழ்க்கை;

முடியும் தருணம் அருகில்
நீட்டிக் கொள்ளமுடியா மரணம்
இயற்கை ஊட்டும் அன்னம்
யாரும் மறுக்கமுடியா நியதி
எதற்கும் எதிர்ப்பு இல்லை
எதுவும் முடியா கதியில்
எல்லாம் போதல் போதல்
யதார்த்தம் –
இருப்பில் உள்ளது மட்டுமே;

அதை
வாழ்ந்து வாழ்ந்து தீர்ப்போம்
தீராதவை தொடரும்..
—————————————————-
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லாமே என் ராசாத்தி..

ன் பேச்செல்லாம் என் பேச்சு
உன் நடையெல்லாம் என் நடை
நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு
ஆனா நீமட்டும் போறியேடி..

உன் கனவெல்லாம் என் கனவு
உன் ஆசையெல்லாம் என் வரைக்கும்
நீ நிற்குமிடமெல்லாம் என் கூட
இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி;

நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம்
கேட்டதெல்லாம் உன் சொத்து
நான் வாங்கன்னு நினச்சதெல்லாம் உனக்காக
இப்போ நீ போகும் பாதையில என் உசிரும் போகுதடி;

நீ சிரிச்சாலே பூக்கும் வீடு
நீ பேசினாதான் நிறையும் மனசு
நீ இல்லைன்னு நினைச்சாலே அழுகிற உறவு
இன்று நீயில்லா வீடுதாண்டி’ நீ வரும்பாதைப் பார்க்குதடி;

நீ ஒருநேரம் பிரிந்தாலே
உயிர் இரண்டா உடையும்,
நீ ஒரு நாள் இல்லாத வீடு நெருப்பா தகிக்கும்,
நீயின்றி உண்ணும் ஒருவாய்ச் சோறும்
நஞ்சா உள்ளிறங்கும்;

இப்போ மொத்தமா பிரியிரியே; வாழ்க்கையை
வெறும்வீட்டில் விட்டுட்டியே..,

நான்கூட்டி வந்தப்பாவம் – உனைக்
கூட்டிப் போகுதோடி,
நானன்று வெச்ச நெருப்பு
என் வயிற்றில் எரியுதோடி,

பாட்டன் முப்பாட்டன் பறிச்சுவெச்சப்
பள்ளத்தில
என் கண்ணீர் நிரம்புதடி,
அது விதி அது நோகட்டும்’ நீ போ போ மகளே,

அப்பன் முகம் கண்ணில் நின்னா
கனவன் முகம் பார்த்துக்கோடி,

இனி கனவிலாவது வந்து வந்து
எனை அப்பான்னு அழைச்சுக்கோடி..
அதுவரையும் காத்திருப்பேன்; நீ
வரும்வரைக்கும் வாழ்ந்திருப்பேன்; வாழ்க்கை
கசப்புன்னுத் தெரிந்தாலும் நீ
வரும்பாதைப் பார்த்திருப்பேன்!!
———————————————–
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்