இன்று சம்பளம்!
வாங்கிய உடனே உனக்கனுப்பினேன்
அம்மாவிற்கு அனுப்பினேன்
அக்கா வீட்டிற்கும் –
தங்கச்சி சீதன பணமும் அனுப்பினேன்
அண்ணன் குழந்தைகளுக்கு ஏதேதோ
கேட்டிருந்தார் வாங்கியனுப்பினேன்
எல்லாம் முடித்துவிட்டு வந்து
படுக்கையில் வீழ்கையில் –
அப்பாடா என்றொரு நிம்மதி;
அவைகளை எல்லாம் தாண்டி –
தனிமை இரவின் தவிப்பில் –
தலையணை நனைத்த ஒரு சொட்டுக் கண்ணீரில்
உனை விட்டுப் –
பிரிந்திருப்பதும் தெரியாமலில்லை!
























