Daily Archives: பிப்ரவரி 15, 2010

10. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் தாவணியின் மேல் மேயும் நிறைய கண்களை பற்றி நான் – கவலை கொள்வதேயில்லை நீ என்னை பார்க்கிறாயா என்பதை தவிர!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

9. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ – என்னைத் தொட்டு நிற்கையில்; முன்னே நகர்ந்து வேகமாக ஓடும் பேருந்து சற்று – நின்றுவிட்டாலெனென்ன!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

8. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

வெளியிலிருந்து கதவை உள்ளே திறக்கும் போதும் உள்ளிருந்து கதவை வெளியே திறக்கும் போதும்; இடித்துக் கொள்ளும் யாரோ ஒருவரில் – என்றேனும் ஓர்நாள் நீயாக இருக்கமாட்டாயா!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

7. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உனக்கும் எனக்கும் திருமணமாகிவிட்டது; குழந்தைகளும் உண்டு பல வருடங்களுக்குப் பின் இன்று ஏனோ – நேருக்கு நேர் பார்க்க நேர்ந்ததில் – நம் குழந்தைகளையும் குடும்பத்தையும் மறந்து தான் போனது நம் பார்வை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

6. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நான் – வாசலில் நின்றிருப்பேனென உனக்குத் தெரியும்; நீ – வீட்டிற்குள் நின்று எனக்காகக் – காத்திருப்பாயென எனக்கும் தெரியும்; தெரிந்தும் – நான் காத்திருக்கட்டுமேயென நீ – வீட்டிற்குள்ளேயே இருப்பாய்; வெளியே – ஊர் எனை மட்டும் கிறுக்கனென சொல்லி காரி உமிழ்ந்துப் போகும் நம் காதலை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக