Daily Archives: பிப்ரவரி 16, 2010

24. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் – காது தோடு தொட்டு கன்னம் தொட்டு கழுத்து தொட்டு உள் புகும் காற்றை சபிக்கிறேன்; ஏ காற்றே, இனி நானாக இருக்கக் கடவாய்!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

23. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ – நடந்து சென்ற வேகத்தில் காற்று – இதர அத்தனை சப்தங்களையும் மறைத்துக் கொண்டு ஒன்றை மட்டுமே எனக்குள் பதித்துச் செல்கிறது; உன் கொலுசு சப்தம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

22. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னை காதலிக்கிறாயாமே; இல்லை இல்லை காதலிக்கிறாய்……….. இல்லை………………. காத.. லிக்கி…றாய்…. இல்.. இல்.. லை.. (அவள் இல்லை எனும் போதே அவள் கையிலுள்ள என் பெயரை பார்த்துவிட்டேன்) சரி விடு நான் போகிறேன் எங்கு போவாய்? எங்கோ.. போவதற்கு பிறகேன் என்னை இங்கு அழைத்தாய்? நீ தான் காதலிக்க வில்லை என்றாயே; சரி போ, … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

21. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

கல்லூரியின் சுவரெங்கும் காதலன் காதலியின் பெயர்கள்; நம் பெயரில்லாத இடத்திலிருந்து துளிர்க்கிறது உன் பெயரையும் எழுதுவதற்கான ஆசை; உன்னை எழுதி ஏன் அங்கு வைக்கவேண்டுமென; எழுதாமலேயே வந்து விடுகிறேன், நான் கல்லூரியின் சுவர்களில் எழுதிடாத உன் பெயர் – எனக்குள் காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக