45. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

து ஏனோ
உனக்கு அப்படி ஒரு
வெட்கம் –
சிரித்துக் கொண்டே வெளியே
ஓடி வந்தாய்
வாசலில் நான் நிற்பதை
கண்டதும் –
நின்று – தயங்கி –
நிமிர்ந்தென்னைப் பார்த்து
திரும்பி வீட்டிற்குள்ளேயே ஓடுகையில்
சத்தமில்லாமல் சிரித்தாயே
அந்த சிரிப்பும் பார்வையும் தவிர
வேறொன்றுமே இல்லை
நீஎன்னை காதலிப்பதற்கான
சாட்சி!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 45. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. munusivasankaran's avatar munusivasankaran சொல்கிறார்:

    ம்ம்ம்… அப்புரம்?

    Like

  2. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    அழகாக வர்ணித்துள்ளீர்கள், அருமை

    Like

பின்னூட்டமொன்றை இடுக