Monthly Archives: பிப்ரவரி 2010

38. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

சரிவிடு – நீயும் நானும் காதலிக்கிறோமென்று வைத்துக் கொள்; ஏன்???? இல்லையேல் இறந்து போவேனென பயந்துப் போனாயோ? இல்லை இல்லை காதலுக்கு முடிவு இறப்பில்லை என்பதை புரிந்தவன் நீ. வேறென்ன? உன்னை பார்த்துக் கொண்டே செல்லும் வேறு நிறைய கண்களை வேறு எந்த தீயிட்டு எரிப்பது? இதற்கென்ன அர்த்தம்? அக்கறை. காதலால் அக்கறை கொள்கிறாய்??? ஆம்; … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

37. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

இத்தனை SMS – ஆ அனுப்புவாய், நான் – ஒவ்வொன்றையாய் நிராகரித்துக் கொண்டே வருகிறேன்; அது – ஒவ்வொன்றாய் என்னை ஆட்கொண்டே செல்கிறது!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

36. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

சின்ன சின்னதாய் தான் ஆசை – உன்னை தொட்டுப் பார்க்க, உன்னை – பார்த்துக் கொண்டேயிருக்க, உன்னிடம் – நிறைய பேச, உன்னோடு வாழ, என் காலம் முழுதும் உன்னோடு மட்டுமே கழிய; இதத்தனைக்கும் – நீ ஒன்று சேய் போதும் என்னை காதலி!

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

35. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ – கை தொட்டுக் கொடுத்த அத்தனை – புத்தகத்திலும் மணக்கிறது உன் நினைவின் வாசம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

34. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

மழை வந்து சென்றுவிடுகிறது ஈரத்தையும் ஈரத்தின் வாசத்தையும் மிச்சம் வைத்துவிட்டு; நீயும் – வந்தாய்.. சென்றாய்.. மிச்ச நினைவுகளில் வலுக் கொள்கிறது மரணம்!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்