Monthly Archives: பிப்ரவரி 2010

26. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நில் – கவனித்திருப்பாய் இல்லையென்று சொன்னால் நான் ஏற்கப் போவதில்லை; ஆமென்று சொல்வதிலும் அடங்கப் போவதில்லை; வா.. அதோ நமக்காக வானமேறிக் காத்திருக்கும் அந்த கற்பனை தேர் ஏறி – உலகம் முழுக்கச் சொல்வோம் நாம் காதலர்களென்று!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

25. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் – மலர் கூந்தலின் வாசமும் அழகும் சண்டையிட்டுக் கொண்டன – யாரால் உனக்குப் பெருமை என்று; உன்னால் – அவைகளுக்குப் பெருமையென்று சொல்லவே இக்கவிதை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

24. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உன் – காது தோடு தொட்டு கன்னம் தொட்டு கழுத்து தொட்டு உள் புகும் காற்றை சபிக்கிறேன்; ஏ காற்றே, இனி நானாக இருக்கக் கடவாய்!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

23. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ – நடந்து சென்ற வேகத்தில் காற்று – இதர அத்தனை சப்தங்களையும் மறைத்துக் கொண்டு ஒன்றை மட்டுமே எனக்குள் பதித்துச் செல்கிறது; உன் கொலுசு சப்தம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

22. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னை காதலிக்கிறாயாமே; இல்லை இல்லை காதலிக்கிறாய்……….. இல்லை………………. காத.. லிக்கி…றாய்…. இல்.. இல்.. லை.. (அவள் இல்லை எனும் போதே அவள் கையிலுள்ள என் பெயரை பார்த்துவிட்டேன்) சரி விடு நான் போகிறேன் எங்கு போவாய்? எங்கோ.. போவதற்கு பிறகேன் என்னை இங்கு அழைத்தாய்? நீ தான் காதலிக்க வில்லை என்றாயே; சரி போ, … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்