Monthly Archives: பிப்ரவரி 2010

21. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

கல்லூரியின் சுவரெங்கும் காதலன் காதலியின் பெயர்கள்; நம் பெயரில்லாத இடத்திலிருந்து துளிர்க்கிறது உன் பெயரையும் எழுதுவதற்கான ஆசை; உன்னை எழுதி ஏன் அங்கு வைக்கவேண்டுமென; எழுதாமலேயே வந்து விடுகிறேன், நான் கல்லூரியின் சுவர்களில் எழுதிடாத உன் பெயர் – எனக்குள் காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

20. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ஒன்று செய் நீயும் என்னை நினைத்துக் கொண்டேயிரு நானும் உன்னை நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்; குறுக்கே யாரேனும் வந்தால் கல் வாரி வீசு; பயித்தியமென்று சொன்னாலும் சொல்வார்கள். சொல்லட்டுமே, இல்லாவிட்டாலென்ன சேர்த்தாவைக்குமிந்த சமூகம்??? வெறும் சாதிக்கும் மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த மனிதர்கள் திரியுமிடம் – வாழுமிடமல்ல; அன்பை – நரபலியிட்டுவிட்டு அரைக் காசு கவுரவம் வேண்டி … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

19. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நெடுந்தூரம் நடந்துவந்து நெடிய நேரத்தை கால்கீழ் மிதித்து மிதித்தெரிந்து விட்டுத் தான் – உனக்காகக் காத்திருந்தேன்; இதோ இமைக்கும் பொழுதில் என்னைக் கடந்து – அதோ செல்கிறாய்; நீ போகும் வேகத்திற்கென் கண்ணீர் மொத்தமும் சாரை சாரையாய் – தெருவை நனைக்கையில் உனக்கென்ன குறைந்துவிடும் – நீ போ.. போ.. உன் மிதிபடலில் என் காத்திருப்பு … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

18. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காலம் காலமாகத் தான் காதலிக்கிறார்கள்; நீயும் நானும் மட்டும் எப்படியோ – எதிரியாகிப் போனோம் ஜாதி மதப் பேய்களுக்கு!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

17. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீயும் நானும் பேசிக் கொள்வதை காற்று நம்மிடம் சொல்வதேயில்லை; போகட்டும், நாம் ஒன்றாக சேரும் தினத்தில் கட்டி இறுக்கிய நம் நெருக்கத்தினால் – காற்றினை வெப்பம்கொள்ளச் செய்வோம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக