நித்தியானந்தா + நாம்

கிறுக்கு –
மனோபாவத்தின்
தந்திர வித்தைகளில்

மறைந்த வக்கிரத்தை
காவி மறைத்துக் கொண்ட
தைரியத்தில்

எதையோ பொய்யென்றும்
எதையோ உண்மையென்றும்
நம்பிவிட்ட
கண்கட்டப் படாத பொதுமக்களின்
குருட்டு நம்பிக்கையில்

காலம் காலமாய்
காம நெருப்பிட்டு உறங்கியவனின்
மோக மெத்தையில் –
எவர்வைக்கும் தீயும்
அவன் தலைமுடியை கூட
சுடவில்லை!
————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

8 Responses to நித்தியானந்தா + நாம்

  1. aniyayam's avatar aniyayam சொல்கிறார்:

    அந்தாள விடுங்கப்பா!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வெட்டாம விட்டது தான் தப்பு அநியாயம் அவர்களே. அந்த கொதிப்பு தான் எங்கு அவரை பற்றி எத்தனை பதிப்புகள் போட்டாலும் ஓடிவந்து மீண்டும் பார்க்கவும் படிக்கவும் வைக்கிறது. எத்தனை பிரேமானந்தாக்கள் வந்தாலும் நித்தியானந்தாக்காள் போனாலும், நம் விட்டு விட்ட தவறில் தான், மீண்டும் மீண்டுமாய் முளைக்கிறார்கள். வெட்டி தலையை இரண்டு நாளைக்கு ஊர் பார்வையில் வைத்துப் பார்க்க துணியட்டுமே அரசு; பிறகு ஓரானந்தாவும் எட்டி கூட ‘தவறாக’ப் பார்க்க மாட்டார்கள்.

      உலகமே அவரை பற்றி பேசி எழுதிக் கொண்டிருக்க நாம் எழுதி என்ன செய்ய என்று தான் அவரை பற்றி இதுவரை ஒன்றுமே எழுத நான் முன்வரவில்லை. ஆனால் அவரை பற்றி லெனின் கொடுத்த புகார்களும், அவைகளை தாண்டி வெறும் செய்திகளோடு ஓய்ந்து விட்ட நித்தியானந்தாவும், பிரேமானந்தாவை போல் என்றேனும் ஓர் தினம் சிறையில் உல்லாச வாழ்க்கை நடத்துவதாக படிப்போமோ என்றெழுந்த என் வருத்தத்திற்கு; தலைப்பை மட்டும் தான் நித்தியானந்த என்று வைத்திருக்கிறேன். இருப்பினும் நீங்கள் சொல்லி விட்டீர்களில்லையா இதோ.. விட்டுவிடுகிறேன். வருகைக்கு நன்றி அநியாயமே!

      Like

      • aniyayam's avatar aniyayam சொல்கிறார்:

        தெய்வம் அன்றே கொல்லும் , இது புதுமொழி அன்பரே….அதனால் நித்யா மட்டும் மரணத்துக்கு விலக்கா என்ன?
        தலையோடும் உடம்பும் அல்லவா மரணம் கொண்டு செல்லும்

        Like

      • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

        ஆம்; தோழரே, தவறு செய்பவர் ஒன்று திருந்தியாகவேண்டும் அல்லது வருந்தியாக வேண்டும்! உலகம் அகலக் கண் விரித்து எல்லோரையும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது. உலகின் பார்வையில் ஒழுக்கமுள்ளவன் ஓர் தினம் பாராட்டப் படுவான், ஒழுக்கமற்றவன் ஓர் தினமெனும் தண்டிக்கவே படுவான்.

        நித்யானந்தா மகா குற்றவாளி. தண்டிக்கப் பட்டார்; படுவார்.

        இருந்தும் நம் அரசு பணியாளர்கள், (பிரதமர் வரை அரசு வட்டத்திற்குட்பட்டவர்கள் தானே) தன் பணியினை செவ்வனே செய்ய முனைந்திருந்தால் இவனைபோன்றோர் ஒரு காலும் தப்ப மாட்டார். தப்பிக்கின்றனரே என்ற வருத்தம் மிக்க கோபமே நம் கவிதை, நித்யானந்தா + நாம்!

        தொடர்ந்து பேசுங்கள் தோழரே..

        Like

  2. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    வணக்கம் வித்யா.. நலமா? நீங்கள் சொல்வது போல் வெட்டினால் நிறைய தலைகளை வெட்ட வேண்டி இருக்கும். சரிதானே?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் அன்பு மனோ. மிக்க நலமென்றே ஏற்போம். என் சமுதாயம் எப்படி எப்படியோ சீரற்று கிடக்க முழு நலமென்று சொல்லமுடியவில்லை தான். நீங்கள் சொல்வதும் சரி தான், வெட்ட நிறைய தலைகள் உள்ளதால், வெட்டாவிட்டால் பரவாயில்லை; வெட்டும் கோபமாவது கொள்ளுங்கள். அந்த கோபத்திலாவது சற்று பயம் கொள்ளட்டுமிந்த ஆனந்தாக்கள்.

      கோபத்தில் அவர்கள் பயம் கொள்கிறார்களோ இல்லையோ; அவர்கள் மேல் நாம் காதல் கொள்ளுதலாவது குறையுமில்லையா?

      Like

  3. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    சிரிப்பாக உள்ளது ஆனால் சிந்திக்க வேண்டியது தான். நன்றி வித்யாசாகர்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; மனோ. நம் கடவுளின் மீது கொள்ளும் பக்தியை இவர்கள் மேல் காட்டுவது தவறு. நல்ல மனிதர்களின் மேல் மரியாதை காட்டலாம் அன்பு வைக்கலாம். நல்ல மனிதர் எவரும் தன்னை கடவுளுக்கு சமமாக ஏற்க மாட்டார்கள். தன்னை சரி என்று கருதுவதே தவறு. தன்னை தானே கடவுள் என்று பிதற்றிக் கொள்ளும் அற்பப் பிறப்புகள் எத்தனை தரிற்கு உட்பட்டவர்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். குரு மார்களை நம்பலாம்.. குருக்கள் கடவுளை பற்றி போதிப்பவர்கள் குருக்கள். தன்னையே கடவுளாக சிலை வைத்து கும்பிட சொல்வதும், தனக்கே அபிசேகம் செய்துக் கொள்வதும், மாலையிட்டு கடவுள் போல் பவனி வருவதும், பத்திரிகை விளம்பரம் செய்வதும், புகழ்ச்சி விரும்புவதும், விளம்பரம் படுத்துவதும், நன்கொடை வசூலிப்பதும் ஆசிரம விஸ்தாரம் செய்து தன் சக்தியை உலகிற்கு காட்ட முனைவதுமெல்லாம் எப்படி ஒரு துறவியின் செயலாக கருதுவது மனோ??? துறவே இல்லாத எல்லாம் ஆசைகளுக்கும்……….. எல்லாம் ஆசைகளுக்கும் உட்பட்டவன்ன்ன்ன் எதை கட்டுப் படுத்துவான் மனோ???

      அப்படி பட்டவனை எல்லாம் நாம் ஏன் குருவாக ஏற்கிறோம் மனோ?????????????

      எங்கே போயிற்று இதுபோன்ற கேள்விகளெல்லாம் நமக்குளிருந்து மனோ? சென்று குவியும் மக்களால் தானே சாமியை கீழே வைத்துவிட்டு தன் படத்தை மேலே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் மூடர்கள். அவர்களை எல்லாம் தூக்கி வீசாமல் பூஜித்துவரும் நம் தவறுகள் நீடிக்கும் வரை……………… ஆயிரம் லட்சம் கோடி ஆனந்தாக்கள்ள்ள்ள் பியாந்துக் கொண்டு தானிருப்பார்கள்!

      Like

Mano.. -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி