Daily Archives: மார்ச் 23, 2010

ஹைக்கூ – 125

என்ன அருமையாக ஆங்கிலம் பேசுகிறாள்… டமில் மட்டும் தகராறாம்; சிறுக்கியை – தமிழச்சியென்று மெச்சிக்கொள்ள ஒருவேளை – நான் இறந்தபிறகு என் உதடுகள் அசைந்துக் கொடுக்கலாம் அசையாமலும் போகலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 124

தொலைபேசியில் கத்தி கத்தி பேசினாலும் மனதின் சப்தம் யார் காதையுமே தொடுவதில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 123

பயித்தியம் பிடிக்காத நாட்களை – இப்படித் தான் எழுத்துகள் மென்று தின்றுவிட்டு தன்னை கவிதை என்று அறிவித்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 122

ஒவ்வொரு பிணமாய் வீழும்போதும் மனிதன் தன்னை சாகாவரம் பெற்றதாகவே நினைத்துக் கொள்கிறான்; மரணம் மட்டும் நிகழாதிருக்குமே யானால் மனிதன் கொள்ளும் முதல் நபர் கடவுளாகவும் இருக்கலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 121

செரிப்பதற்கு இனிப்பும் ரசமும் சோடாவும் குடிப்பவனுக்கு பசிப்பவனை பற்றிய சிந்தனை அற்றுப் போன இடத்திலிருந்தே முளைத்துக் கொள்கிறது உலகின் அத்தனை போராட்டங்களும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக