159 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

குடி அறுந்தாலும்
குடிக்கலாம்,
 
கொடி பறந்தாலும்
குடிக்கலாம்,
 
எவர் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் –
குடிக்கலாம்,
 
காரி முகத்தில் உமிழ்ந்தாலும்
குடிக்கலாம்,
 
ஏதேனும் –
ஒற்றை காரணம் சொல்லிக்
குடிக்கலாம்,
 
மானம் காற்றில் பறந்து
கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் – 
டாஸ்மாக்கிற்கா பஞ்சம்??
———————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக