Monthly Archives: மே 2010

34 கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்! கண்ணீரில் மை தீட்டி எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்! கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்! எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 புகைப்படப் பெட்டியில் சிக்காத வரலாறு!!

உலகத்தை – தன் ரசனையில் காட்டி உலகத்தின் பார்வையில் தன்னை மறைத்துக் கொண்டவர்கள்; வரலாற்று சுவடுகளை தன் வியர்வையில் நனைத்தெடுத்து வாங்கிய காசுக்கு வெறும் பெயரை மட்டுமே போட்டுக் கொண்டவர்கள்; இரவுபகல் அலைந்து திரிந்து உறவுகளின் பிரிவை கூட எடுக்கும் புகைப்படங்களில் அலசிப் பார்த்தவர்கள்; கழுத்தில் தொங்கும் புகைப்படப் பெட்டியின் கண்களில் தனை பார்க்கும் பொது … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புதிய புத்தகத்திற்கு உங்கள் அணிந்துரை வேண்டும்..

அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம், இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60 வெறும் கதைகேட்ட இனமே…

உள்ளே மின்னலாய் வெட்டி உள்புகுந்து – உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்; மறக்கமுடியாத அந்நாட்களின் இழப்பில் புதையுண்ட எம் விடுதலையின் வேகத்தை மீட்டெடுத்துவிடும் துணிவில் தான் இரவு பகல் கடக்கின்றோம்; அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின் குரல் தாண்டி – அம்மா……….யென அலறிய அலறலில் ஒன்று கூட உலகத்தாரின் மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று அனாதையாய் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

சிறகின்றி பறக்கும் துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து அழகுற்ற வான மதப்பில்.. நீண்டு வளைகிறது – வண்ணம் நிறைந்ததொரு ஓவியம், தூரல் மழையின் சிலிர்ப்பில் காது மடல்கள் அசைவுற – சிதறும் மழைத்துளிகளின் ஓசை இயற்கையின் ஜாலமாய் உள்புகுகிறது இசை, பசுமையை அள்ளிப் பருகும் மரங்களின் அசைவுகளில் – காற்று விளையாடி யுள்ளே – இதமாய் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்