Daily Archives: ஜூன் 24, 2010

(8) உன் புகைப்படத்தில் முகம் புதைத்து…

உன் – வருகைக்காய் காத்திருந்தே  புகைப்படங்களில் புதைந்தேனடி..,   உன் புகைப்படத்தின்  அழகினிலே என் மொத்தத்தையும் தொலைத்தேனடி..,   உன் முக அழகை தொட்டுப் பார்த்தே – இதயத்தை – ஈரமாக்கிக் கொண்டேனடி..,   உனில் – ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து நீயில்லாமலே உன்னோடு  வாழ்ந்தேனடி..,   நீ வந்து பேசிடாத  ஒரு வார்த்தைக்காய் – நகரும் நிமிடங்களை கூட  சபித்தேனடி..,   நாளை – நீ வரும் நாளிற்காய்   இன்றையை கூட  எதிர்த்தேனடி..,   என் மனசெல்லாம் பூத்த நீ  காதலியோ; தோழியோ; ஏதோ  ஒன்றென்று எண்ணிக்கடி   இல்லையேல் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | 1 பின்னூட்டம்

160 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

வெள்ளிப்பூக்கள் தங்கப் பலகை வைடூரிய கொண்டாட்டங்கள் மின்னுகின்றன தமிழர் பலர்  ஆங்காங்கே – வீழ்ந்த – சுவடுகளின் மீதேறி; ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

159 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

குடி அறுந்தாலும் குடிக்கலாம்,   கொடி பறந்தாலும் குடிக்கலாம்,   எவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் – குடிக்கலாம்,   காரி முகத்தில் உமிழ்ந்தாலும் குடிக்கலாம்,   ஏதேனும் – ஒற்றை காரணம் சொல்லிக் குடிக்கலாம்,   மானம் காற்றில் பறந்து கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் –  டாஸ்மாக்கிற்கா பஞ்சம்?? ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

158 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

இழிவு நிலை எச்சில் குடிக்கிறது,   எவன் சொன்னதும் சொல்லாததும் கூட வலிக்கிறது,   வந்தவர் போனவர் வாரி தூற்றுகிறார்,   நன்றி மறந்தும் நிறையவே பேசுகிறார் –   தட்டிக் கேட்டால் தவறென்கிறார்,   விட்டுப் பார்த்தால் பிரித்தே பேசுகிறார்,   எப்படியோ முடிவில் தன்னையும் தமிழரென்கிறார் ! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

157 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

கண்டதும் கேட்டதும் மெய்யோ? பொய்யோ??   ஆடலும் பாடலும் மெய்யோ? பொய்யோ??    ஆள்பவர் யாவரும் மெய்யோ? பொய்யோ??   அண்டமும் வீடும் மெய்யோ? பொய்யோ??   நானும் நீயும் மெய்யோ? பொய்யோ??   நகர்வும் மரணமும் மெய்யோ? பொய்யோ??   மெய்யும் பொய்யுமாய் மடிவதும்   பிறப்பதும் ஏனோ? ஏனோ?? ஏனோ???  ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக