ஓடும் பேருந்தில்
முன்னே நீ நிற்கிறாய்
பின்னே நான் உனையே
பார்த்துக் கொண்டு நிற்கிறேன்
யாரோ என்னை
பொருக்கி என்று சொல்வதும்
உனக்குக் கேட்டிருக்கலாம்
இருந்தும் நீ
திரும்பிப் பார்க்காமலே
தலைகுனிந்துக் கொண்டதில்
தோற்றுத் தான் போனது நம் காதல்!
—————————————————————
























