Daily Archives: ஜூலை 14, 2010

23 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

எத்தனையோ இலைகள் உதிர்ந்துக் கொண்டே இருந்தும்; ஏதோ ஒரு இலையில் மையம் கொண்டு மனசு விழாதென்று நம்புவதாகவே – தோற்கும் நிறைய பேரை பார்த்தும் நாம் மட்டும் தோற்கமாட்டோம் என்றே நம்புகிறது நம் காதல். நம் காதலின் வெற்றி சேர்தலில் மட்டுமல்ல நாம் பிரியாதலிலுமென்று எண்ணிக் கொள்வோம்!! ———————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22 எப்படியோ நிகழ்கிறது காதல்..

கோவில் திருவிழாவில் எல்லோரும் சாமி வருமென காத்திருக்கிறார்கள்; நானும் சாமியோடு நீ வருவாயென காத்திருக்கிறேன்! —————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

21 எப்படியோ நிகழ்கிறது காதல்..

நீயும் நானும் தெருவில் நடந்து செல்கிறோம். நீ விலகி விலகி நெருங்கி வருகிறாய்.. நான் உனை நெருங்கி நெருங்கி விலகிப் போகிறேன்.. எப்படியோ மாறி மாறி நெருக்கம் கொண்டு விடும் நம் ஸ்பரிசத்தில் – தெருவோரப் பூக்களாய் மலர்கிறது நம் காதலும்! —————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20 எப்படியோ நிகழ்கிறது காதல்..

காலங்களை கடந்தும் நிறைய மனசுகள் மாறாமலிருப்பதில்லை. மாறிப் போகும் போது மாறட்டும் என் மனசும். அதுவரை உனையே நினைத்திருக்க – உன் பார்வையை மட்டும் எனக்கு கடன் கொடு. உயிர்பிரியும் விளிம்பில் உனை மறக்கும் மனசு ஒருவேளை கிடைக்கலாம், அந்த கிடைப்பில் உன் பார்வைகளாவது மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!! ———————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

19 எப்படியோ நிகழ்கிறது காதல்..

இப்போதெல்லாம் நான் அதிகம் உன் நினைவோடு இருக்கிறேன்; உன்னை பற்றியே எண்ணுகிறேன்; உனை பார்ப்பதில் உன் அருகாமை கொள்வதில் முனைப்பாகிறேன்; காலத்திற்கும் நீ கிடைப்பாயா என்றே ஏங்குகிறேன்; கிடைக்காவிட்டால் என் நிலை என்ன என்றே உணராமல் எப்படி நிகழ்கிறதோ; இத்தனையும் உன்மேல்???!! ———————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக