உன் பள்ளிக் கூடத்து
வாசலில் வீழ்கிறது
என் பார்வை.
நீ வெளிவரும்
நேரமோ
என்று வாசல் நோக்கி நின்று விட்டேன்.
வெள்ளை சட்டை
நீள பாவாடை.
தேவதைகளை தோற்கடித்துவிட்டு
நீ நடந்து வருகிறாய்.
வயது தாண்டி
கற்பனை செய்ய துணியவில்லை
என் மனசு,
காதலிக்க மட்டும் செய்தது!
——————————————————-
























