ஒரு ‘கிலோ’ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்;
இரண்டு ‘கிலோ’ உப்பு
ஒரு ரூபாய்;
ஒரு ‘கிலோ’ பருப்பு
பத்து ரூபாய்;
பத்து ‘கிலோ’ அரிசி
நானூறு ரூபாய் – என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும் –
‘கிலோ’ தமிழ் என்றே தெரியப் பட்டுள்ளது!
————————————————————-
























