ஐம்பது ரூபாய்
கொடுத்து குடிப்பவன் கூட
ஐந்து ரூபாய் கொடுத்து
இட்டிலி சாப்பிட – மறுத்து
ஏழை என்கிறான்.
இட்டிலி பணக்காரத் தனம்
எனில் –
ஐம்பது ரூபாய் விஸ்கி?
கேள்வி கேட்கவில்லை
எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம்
பயன்படலில், படுத்துதலில்
விழுந்தது போல் –
ஏற்றத்தாழ்வு விரிசல்களும்
வெற்றுமை கோடுகள்!
—————————————————-
























