அரைகுடத்தின் நீரலைகள் – 20

னதை
உன்னால்
திறந்துவைத்திருக்க இயலுமெனில்
கோவிலொன்றும்
பெரிதில்லை
மூடிக் கொள்!
————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அரைகுடத்தின் நீரலைகள் – 20

  1. K. கல்யாணி's avatar K. கல்யாணி சொல்கிறார்:

    ஏன் வித்யா.. கொவிலன்றி மனதை திறக்க முடியாதென்று தானே இப்படி..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அப்படி தான் நம்புகிறோம் கல்யாணி. நானும் அப்படியே எண்ணம் கொள்கிறேன். கோவில்களை ‘மனிதனை மேன்மை கொள்ள செய்யும், மனதை சுத்தப் படுத்தும், மனிதத்தை வளர்க்கும் இடம்’ என்று கருதி தான் நிறுவுகிறார்கள். சில மூடர்களால் அது கொச்சைப் படுத்தப்படவும், திசை திருப்பப்படவும் ஆகிறது. கோவிலை நிர்மாணிப்பதின் எண்ணம்; நிர்மாணித்த பின் மனிதரில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. அந்த இல்லாதலில் முளைத்து விடுகிறது ஏளனங்கள். ஏலனத்தில் உடைபட்டு விடுகிறது; உண்மை நோக்கம்!

      போகட்டும்;

      நம் முனைப்பு கோவிலில் அல்ல; மனிதத்தில் மட்டுமே..

      மனதை திறப்பதில் மட்டுமே..

      ஒருவேளை கடவுளின் விருப்பம் கூட அதுதானோ என்னவோ?!!

      Like

  2. மனோஜ்'s avatar மனோஜ் சொல்கிறார்:

    ஆம், மனமே சிறந்த கோவில் ,….என்பதில் ஐயமில்லை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      கோவில் நம்பிக்கையை வளர்க்குமிடம் மனோஜ்; மனது நம்பிக்கை நிறையுமிடம்!

      நம்பினோர் கைவிடப் படார், அந்த நம்புதலுக்கு பலம் கோவில்! கோவில் வேண்டும், வேண்டாமென்றில்லை; அது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால், மனிதனை தாண்டி, மனிதனை வருத்தி, வேறொன்றுமே உயர்ந்துவிடாதென்று எண்ணம்!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி