Daily Archives: ஓகஸ்ட் 17, 2010

அரைகுடத்தின் நீரலைகள் – 15

ஜாதி மதம் இனம் ஏழை பணக்காரன் தொழில் பிடித்தல் பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தும் சார்ந்தும் கொள்கிறான் மனிதன்; மனிதம் தோற்கும் காரணி அங்கேயிருந்து முளைவிடுகிறது! ———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 14

காற்றுபுகும் புகும் இடைவெளிக்குள் புகுந்துவிடுவது போல் புகுந்து விடுகிறது எனக்கான சுயநலம்; அறுத்தெறிய இயலாமையில் வீட்டிலிருந்து உறவிலிருந்து நட்பு தாண்டி தேசம் தாண்டி கடவுள் வரை ஏற்பட்டது விரிசல்! ————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 13

ஏதேனும் ஒரு முகம் நினைவுபடுத்தி விடுகிறது உன்னை, ஏதேனும் ஒரு முகம் நினைவுபடுத்திவிடுகிறது என்னையும், ஆழ சிந்தித்தலில் எல்லோரும் எங்கோ ஓரிடத்தில் கலந்தே இருப்பதை உணரத் தான் காலம்; மரணம் வரை நீள்கிறது! —————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் -12

படிக்கும் காலத்தில் படிப்பதை – மனனம் செய்துக் கொண்டதில் வெற்றி கொள்கிறது தேர்வு; மனனம் மட்டும் செய்ததில் ஆரம்பமாகிறது தோல்வி! ——————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 11

உன்னையும் என்னையும் ஒன்றென எண்ணியே கைகோர்த்துக் கொண்டது மதமும் இனமும்; வேறுபடுத்திப் பார்க்கும் சுயநல பார்வையிலிருந்து உடைந்து போகிறது ஜனநாயகம்! ———————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்