Tag Archives: amma

இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

ஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக்  கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி  – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்! உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள்  பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..

1) தடியூனி நடக்கும் கனவு அது இடையே மரணம் வந்து வந்து காலிடறிச் சிரிக்கிறது.. காதுகளில் அழுபவர்கள் ஆயிரமாயிரம் பேர் – சற்று காதுபொத்திக் கேட்கிறேன்; என் மகள் அழுகிறாள், எட்டி உதைத்தேன் அந்தக் கனவை ஐயோ என்று எமன் கத்திய சப்தம்; எவனானால் என்ன என் மகளினி அழமாட்டாள்… ————————————————— 2) இரவுகளின் தனிமையில் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்