ஹைக்கூ – 116

வளின்
அமங்கலம் பூசிய
வெற்று நெற்றியின்
கோடி ஆசைகளை
விதவை என்னும்
ஒற்றை வார்த்தை
மறைத்துக் கொள்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 116

  1. சிவகுமார்'s avatar சிவகுமார் சொல்கிறார்:

    இன்றும் அப்படித்தான் வாழ்கிறார்களா? இன்றைய சூழலில் மறுமணம் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நான் பார்க்கும் உலகம் இன்னும் அப்படியே இருக்கிறதே. யாரோ ஒருசிலரின் மாற்றத்தை வேண்டுமெனில் உலகமார்ரம் எனக் கொண்டுவிடுவோம்; ஆனால் ஒரு சிலர் வாழும் வாழ்வின் வலி இந்த சமூகத்தை ஏக்கமாய் பார்க்காமலில்லையே. காரி உமிழ இயலா முகங்கள் எதிரே தானே நின்றுகொள்கின்றன. அவர்களால் உள்ளம் எரியும் வெப்பத்தில் ஒருவரை கூட சுடமுடியாமல் தனக்குள்ளேயே புழுங்கி போன சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும்; மறுமணம் ஏற்றுக் கொண்டுள்ளதை யாரேனும் சொல்ல புறப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலன்றி என் பக்கத்து வீட்டு லதா அக்காவை கூட காலத்திற்கும் வெற்று முகத்தோடு மற்றுமே பார்க்க இயலும் போல்!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி