ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு

ரு விதவையின் –
நெற்றி சுடும் பொட்டு;

பெண்ணின் அடையாளத்தை
சிவந்து காட்டும் பொட்டு;

வெற்றியின் உச்சத்தை
பறையறிவிக்கும் –
ஒற்றை திலகம் பொட்டு;

குடும்ப பெண்களின் அழகிற்கு
இன்னொரு –
ஆபரணம் துறந்த அழகு பொட்டு;

நெற்றிக் குளிர்ச்சியில் –
புத்தி திருத்தும் –
செஞ் சூரணம் பொட்டு;

ஸ்டிக்கரில் ஒளிந்து
மடிந்து போன –
கலாச்சார சீர்குலைவு பொட்டு;

பத்தோ இருபதோ காசுக்கு
பிழைப்பு நடத்தும் ஏழைகளின்
ஒற்றை வியாபாரம் பொட்டு;

உலக வளர்சிக்கிடையே
நீட்டியும்
சுருக்கியும்
குறுக்கியும்
வண்ண வண்ணமாய் ஒளிர்ந்துக் கொண்டாலும்

பழைய சாந்து பொட்டின் வாசனையால் –
நாசிகளை நனைத்துக் கொண்டே மறைகிறது – பொட்டு!
————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

4 Responses to ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

  1. munusivasankaran's avatar munusivasankaran சொல்கிறார்:

    இட்டுவிடும் விரலோடு ஒட்டிக்கொள்கிறது…..உறவு.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆழமாமான சிந்தனை உள்ள பதில். ஆம்; ஒட்டிக் கொண்டதில் கெட்டிப் பட்டும், ஒட்டி-விட்டதில் கேடுகெட்டும் தான் போகிறது உறவு. பொட்டு எதற்கும் காரணமில்லாமல் மனிதனை பார்த்து பார்த்துதான் சிவந்துபோகிறது போல்!

      உங்களை போன்றோரின் வரவில் பெருமை கொள்ளுமென் எழுத்துக்கள். மிக்க நன்றி சிவசங்கரன்!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி