20. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன்று செய்
நீயும் என்னை
நினைத்துக் கொண்டேயிரு
நானும் உன்னை
நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்;

குறுக்கே யாரேனும் வந்தால்
கல் வாரி வீசு;

பயித்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்.

சொல்லட்டுமே,

இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்???

வெறும் சாதிக்கும்
மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த
மனிதர்கள் திரியுமிடம் –
வாழுமிடமல்ல;

அன்பை –
நரபலியிட்டுவிட்டு
அரைக் காசு கவுரவம் வேண்டி
மகள்களையும் மகன்களையும் கொன்ற
ஜடங்கள் வாழும் –
மண் இது, பூமியல்ல
நம் மனசிங்கே கல்; கிறுக்கு;
கேட்டால் கீழ்தனமென்பார்கள்.

சொல்லட்டும் சொல்லட்டும்
காலம் அதோ –
காதலர்களின் பின்னே நகர்கிறது
நாளை ஜாதியை –
நாய் நரி மதிக்காது;

மனிதன் ஓர் நாள்
மனிதனாய் மதிக்கப் படுவான்,

அன்று நீயும் நானும்
காதலர்களாய் –
பேசப் படுவோம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

2 Responses to 20. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பின்னூட்டமொன்றை இடுக