Daily Archives: பிப்ரவரி 15, 2010

15. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ஒரு முறை உன் தலையிலிருந்து பூ – கீழே விழுகிறது; நீ – குனிந்து எடுக்கிறாய்; தலையில் வைப்பதற்குள் திரும்பி – இங்குமங்குமாய் பார்க்கிறாய்; என்னை பார்த்தாயா வேறு யாரேனும் – பார்த்தார்களா என்று பார்த்தாயா தெரியவில்லை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

14. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

வா. . வேண்டுமெனில் ஒரு சத்தியம் செய்கிறேன்; உன் அப்பாவும் என் அம்மாவும் சம்மதிக்கும் வரை உன்னை தொடக் கூட மாட்டேன்; சம்மதிக்கா விட்டாலும் விடவும் மாட்டேன்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

13. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பார்த்தாயா பார்த்தாயா இப்படித் தான் இல்லையென்று சொல்லிவிட்டு செல்லும்போது – திரும்பிப் பார்க்கையில் நம்பமுடியவில்லை உன் பொய்யை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

12. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

போடி இவளே.. நீயும் உன் காதலும் மன்னாங்கட்டியுமென சலித்தாலும் கால்கள் உன் பின்னேயும் மனசு உன் முன்னேயும் தானே கிடக்கிறது!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

11. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

மனசு – உன்கிட்டேயும் என்கிட்டேயும் இருக்கிறது தான்; கொடுக்க யோசிப்பதில் அறுகிறது காதல், அல்லது – நீள்கிறது காலம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக