32. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் தலையிலிருந்து
விழுந்த மலரை எடுத்து
காயாமல் பார்த்துக் கொண்டு
வந்தேன்;

பின்னொரு நாளில்
காய்ந்துத் தான் போனதந்த
மலர்,

மலரை எடுத்து வைத்ததும்
உன்னை காதலித்ததும்
முட்டாள் தனம்!.

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

2 Responses to 32. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உலகின் கோடான கோடி பேரின் உணர்வு காதல். அதில் ஒருவரில் யாரோ ஒருவருக்கான உணர்வு சிலநேரம் சிந்திக்கையில் வெட்கப் படத் தான் வைக்கிறது. என்றோ என் பதின் பருவ வயதின் துவக்கத்தில் ஏற்பட்ட ஒரு தோழமை உணர்வை கூட காதலாகவே பார்க்க எண்ணி மறுத்த மறுப்புகளில் தெளிந்தாலும்; காதலாக எண்ணிய கணம்; அர்த்தம்; வாழ்க்கை; காதலிப்பதன் காரணம் என்ன.. என்ன.. என்ன..என சிந்திக்க; இது தான் காதலா எனக் கூட உணர; சிந்திக்க திறனே அற்ற அத்தனை சிறிய வயதின் காதல், அந்த காதலுக்கென ஓடும் ஓட்டம்; அலையும் அலைச்சல்; அழுத அழை; பட்ட அசிங்கம் அத்தனையும் மறந்து அடுத்த வகுப்பில் சென்றதும் அதை தாண்டி வரும் காதலின் அவசரத்தில் எல்லாம் முட்டாள்தனமாகத் தான் படுகிறது மனோ. வருகைக்கு மிக்க நன்றி!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி