அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு! (உழைப்பின் உயர்வு)

வீட்டில் சோறில்லையெனில் தெருவில் சோறு. தெருவில் சோறு முடிந்ததும் வீட்டில் தூக்கம், அக்கம் பக்கத்துல பிட்டு போட்டா சிகரெட்டு, நல்லா தெரிஞ்சவனை நாலு நாள் தாண்டிப் பார்த்தால் கட்டிங்கு; உசார் பண்ணி பணம் பிடுங்கினா பேண்ட்சர்ட்டு; ச்சீ பொழப்பா இது? இதுக்கு நாண்டுக்குனு சாகலாமில்லையா???

ஆனால் சாகாத ஆசாமிகள் நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை ஒன்றுமே செய்திடாது தலையில் தூக்கிவைத்து வெட்டியாய் சுமந்துக் கொண்டு தான் சுழல்கிறது பூமி.

வீட்டிற்கு அருகில் ஒரு வெங்கு வெங்குன்னு ஒருத்தன், ஆளப் பார்த்தா கலெக்டர் கூட வணக்கம் சொல்லிடுட்டு போவார், அப்படி ஒரு தோரணை. கடகடன்னு எழுந்து குளிப்பான் துணிய எடுத்து மாட்டுவான் தெருமுனை கோவிலுக்கு பொய் விபுதி சந்தனம் பூசுவான் ரொம்ப அவசரம் அவசரமா போய் டீ கடைல உட்கார்ந்து ஒரு ஓசி டீ குடிப்பான், விர்ருனு வீட்டுக்கு போவான் கால்சட்டை மேல்சட்டை மாத்துவான்………. அதுக்கப்புறம் அவனை பார்க்கணும்னா பேருந்து நிலையத்துலையோ சந்தைலையோ எதனா கட்சி அலுவல்லையோ தான் பார்க்கமுடியும்.

தப்பி தவறி போற வழில பார்த்து எங்கடா வெங்கு போறேன்னு கேட்டுட்டீங்கான போச்சி “தோடா மாப்ள இங்க நாப்பதம்பது லட்சத்துக்கு ஒரு பிஸ்னஸ் புடிச்சிருக்கேன், எல்லாம் செட் ஆயிடுச்சி இன்னும் நமக்கு நேரம் தான் வரலைடா மாப்ள, நேரம் மட்டும் செட் ஆச்சின்னு வையேன் நாமல்லாம் அப்படி தான்” ன்னுவான். நல்லா தெரிஞ்சவனுக்கு எட்டி செவுள்ள அறையலாமான்னு இருக்கும். இது மாதிரி ஆளுக்கெல்லாம் கல்யாணம் ஆயி குழந்தை பிறந்து அது அவன் பேர பெருசா சொல்லி சுத்துற கதையெல்லாம் நம்ம சுத்தியே இருக்குங்க.

ஆனால் இவுங்களை எல்லாம் வளர்க்கிறது யாரு?

ஒரு தலைமுறை இப்படி திசைதிரும்பி போய் நாட்டை மனிதனின் வளத்தை ஈனச் சுவற்றில் முட்டி ஒழித்துக் கட்ட அனுமதிப்பது யாரு?

கட்டிங் கேட்டா கொடுத்து சிகரெட் கேட்டா கொடுத்து அஞ்சோ பத்தோ கொடுத்து அவன் சொல்ற கதையை எல்லாம் சரி சரின்னு கேட்டு கேட்டு அவனை உருப்புடாம ஆக்க இன்னொரு மறைமுகக் காரணமா இருப்பது யாரு?

நீங்களும் நானும் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? கட்டிங் கேட்டப்பையே நாலு பேரு எட்டி மிதிச்சிருந்தா அப்புறம் அவன் கேட்பானா? சுத்தி சுத்தி வரவனுக்கு சோறு போடாம விட்டிருந்தா அவன் சுத்தி சுத்தியே வந்திருப்பானா? சட்டைத் துணி எடுத்துக் கொடுத்து சிகரெட்டிற்கு பாக்கெட் மணின்ற பேருல காசை கொடுத்து அனுப்பி விடற பெற்றோர்களும், வீட்டுப் வேலை செய்து பணம் தர மனைவியும் உறவும் அக்கம் பக்கத்தாரும் இன்னமும் இன்னமும் நமக்குள்ள இருக்கத் தானே செய்றோம்???

ஐயோ பாவம் கேக்குறானேன்னு மனசிறங்கி செய்யுற நம் உதவி மனப்பான்மை தான் அவனை கொடிய சோம்பேறியா ஆக்குது. அங்கு தாங்க நாம் யோசிக்கணும். நல்லதுக்கு கேட்கிறானா கோடி ரூபா கூட கொடுப்போம். தவறான செலவுகள் செய்து தன்னையும் நாட்டையும் அழித்துக் கொள்ள கேட்க ஆரம்பிக்கும் ஒற்றை ரூபாவை கூட எவருக்கேனும் தரமறுப்போம்.

பிச்சையே கேட்டால் கூட இளைஞர்கள் என்றால் இது போன்ற வெட்டி ஆசாமிகள் என்றால் தர மறுத்து காரி உமிழுங்கள். செய்யுங்கள். ஒருமுறை செய்தால் மறுமுறை கேட்க மாட்டார்கள். நாலுபேரை காரி உமிழ்ந்தால் ஐந்தாவதாய் ஒருவன் வரமாட்டான். அவர்களுக்கு தேவையானதை அவர்களே பெற்றுக் கொள்ள தெரிந்துக் கொண்டால் கேட்பதை நிறுத்திக் கொள்வார்கள். கேட்பதை நிறுத்தி உழைக்க முன் வருவோருக்கு; அப்போது துணை நிற்ப்போம். அந்த சிலரால் நாளைக்கு பல தலைமுறை நிமிர்ந்து நிற்கும்.

கடக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் வைரம் வைடூரியத்தை விடவும் மேலென அவர்களுக்கு அவர்களின் உழைப்பினால் புரிந்துக் கொள்ள முனைவிப்போம். ஒருவரின் சோம்பேறித் தனம் மெல்ல மெல்ல நகர்ந்து அருகில் உள்ளவரையும் தன்னோடு சேர்த்து வீட்டையும் ஊரையும் நாட்டையும் அழிக்கும். உழைப்பு; உலகத்திற்கே நம்மை உயர்வாய் காட்டிக் கொடுக்கும் எனப் புரிவதில் ஏழ்மையிலிருந்து பிறரை ஏய்க்கும் குணம் வரை அவர்களிடமின்றி அற்றுப் போகும்.

சின்ன வயதிலிருந்து மாமா மாமா என்று அழைக்கும் ஒருவர் அப்படித் தான் வேலைக்கே போவதில்லை. அவர் என்றோ வைத்திருந்த ஒரு கம்பனி நஷ்டத்தில் மூழ்கி போனதை சொல்லி சொல்லியே காலத்தையும் தன் குழந்தைகளின் வாழ்வையும் வெட்டியாய் தீர்த்து வந்தார். வேறுவழியின்றி எத்தனையோ வருடத்திற்கு நான் தான் அவருக்கு பணம் அனுப்பி அவருக்கென குடும்பத்தையும் பார்த்துக் கொள்வேன். ஒரு கட்டத்தில் என் குடும்பமும் அவர் குடும்பமும் வளர்ந்துவிட்டது கொடுப்பது போதாதால் கேட்க ஆரம்பித்தார். கொடுக்க கொடுக்க கேட்பதால் நானும் கொடுப்பதை நிறுத்திக் கொண்டேன். கொடுப்பதை நிறுத்தியதில் கோபம் மூண்டது.

கோபத்தை பயன் படுத்தி (மாமா வீட்டில் சொல்லிவைத்து விட்டு) சண்டை வாங்கினேன். மாமாவை ஒரு விளாசு விளாசினேன். உன் மகளுக்கு திருமணம் செய்ய உனக்கு வக்கிருக்கா எனக் கேட்டேன். செய்துக் காட்டுகிறேன் என்றார். செய்து காட்டினால் மொட்டை அடித்து திரிகிறேன் என்றென். கோபத்தில் எங்கெங்கோ தேடி கடைசியில் ஒரு வேலையோடு வீட்டிற்கு வந்தார்.

ஒரு காலத்தில் தனி நிறுவனம் வைத்து நடத்தியவர் சிறு குடோனுக்கு செக்யூரிட்டி வேலைக்கு போக ஆரம்பித்தார். இரவும் பகலும் உழைத்து பிரமோசன் வாங்கினார். மறைமுகமாக பின்னிருந்து நானும் உதவி செய்து வீடு சற்று மாறியதில், வயதான காலத்திலும் வேலைக்கு போறாரே, இப்படி உழைக்கிறாரே என்ற மரியாதை தன் மகளுக்கு நல்ல வரனை கொண்டுவந்தது. உழைப்பின் அருமையை பறைசாற்றி ஜாம் ஜாமென நடந்த அவரின் மகளின் திருமணத்தில் எச்சில் இலை எடுத்துப் போட்டு அலங்காரம் செய்தது முதல் பெருமையோடு நானே அனைத்தையும் செய்துக் கொடுத்தேன்.

ஆக, சோம்பேறி தனம் ஒழிந்து உழைக்கக் கற்றுக் கொள்வதை போலவே; சோம்பேறி தனம் ஒழித்து உழைக்க பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் நம் வாழ்வின் இன்னொரு கடைபிடிக்கவேண்டிய முதல் படியெனக் கொள்வோம். காரணம், அவர்களுக்கு உழைக்க கற்றுக் கொடுத்து விட்டால். நீங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம். கொடுக்க அவசியமற்றுப் போனதில்; இருப்பதை வைத்து இன்பம் காணலாம்.

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்!. Bookmark the permalink.

8 Responses to அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு! (உழைப்பின் உயர்வு)

  1. Jai's avatar Jai சொல்கிறார்:

    sema comedy sir neenga… this post mirrors me 😦

    Like

  2. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    வாழ்வின் முறைகேடுகளையும் பற்றிப் பேசி முறை செய்யவும் குறைய வில்லை இந்த கட்டுரை. எடுத்து நடப்பதற்கான நிறைய சேதிகளை நாங்கள் உங்களிடமிருந்துக் கற்றுக் கொள்கிறோம். நன்றி தெரிவிக்கிறேன் வித்யா. வாழ்த்துக்களும்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      கற்றுத் தருவதற்கு எழுதவில்லை மனோ. அவரவர் சிந்தனை அவரவர்க்கு மேலானவை. சிந்திக்கத் தூண்டியிருப்பின் பெரு மகிழ்வு கொள்வேன். இந்த வாழ்வியல் கட்டுரைகள் என்ற தலைப்பில் வாழ்வின் நிறைய விஷயங்கள் பற்றி எழுத நினைத்துள்ளேன். உங்களை போன்றோரின் வாழ்த்தும் விமர்சனமும் இன்னும் என்னை செம்மை படுத்துமென நம்புகிறேன். எதை பற்றியெல்லாம் இன்னும் எழுதலாம் என்று கூட இன்றைய உலகநடப்பு பிரகாரம் நீங்களும் எனக்குத் தெரியப் படுத்தலாம். மிக்க நன்றி தங்களின் வருகைக்கு!

      Like

  3. chellammma vidhyasagar's avatar chellammma vidhyasagar சொல்கிறார்:

    arumaiyaana kattturai ovvuru sombarigalukkum uraikkum

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உரைக்கனும் செல்லம்மா. சோம்பேறிகள் தன்னை உழைக்கும் நிலைக்கு பழகிக் கொண்டால், நாடு போகட்டும்; வீடாவது உருப்படும். வீடுகளின் சிரிப்பொலியில் நாடு தானே முன்னேறும்!

      மறுமொழிக்கு நன்றி!

      Like

  4. விஜய்'s avatar விஜய் சொல்கிறார்:

    //ஆனால் சாகாத ஆசாமிகள் நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை ஒன்றுமே செய்திடாது தலையில் தூக்கிவைத்து வெட்டியாய் சுமந்துக் கொண்டு தான் சுழல்கிறது பூமி//

    இவ்வகை மானிடம் வாழத்தான் செய்கிறது. எந்த மஹாணின் அறிவுறைகளுக்கும் இடம் கொடுக்காது, மனம்தளாராது வாழும் மானிடம் அது.

    என்செய்ய..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      செய்யலாம். காந்தி சொன்னாரே; நமக்குத் தேவையான இரண்டு சட்டையோடு நிறுத்திக் கொண்டால் எஞ்சிய மூணாவது சட்டை இல்லாதவரை போய் சேரும் என்றதை போல். நல்லவைகளுக்கான முனைப்பை அதிகம் முடக்கி விட்டுவிட்டோமானால்; தீயதும், தீயோரும் தானே ஒழிவர் விஜய். உங்களின் சமூக அக்கறை போல் எல்லோரும் கொள்ளும் அக்கரையில் நன்மை தானே பிறக்கும்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக