39. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன்றும் போல
இன்றும் –
பூ வாங்க வருகிறாய்..

ஒவ்வொரு பூக்கடையாய்
சென்று –
ஏதோ கேட்கிறாய்,

வேறு பூ
கேட்கிறாயா –
விலை பேசுகிறாயா
தெரியவில்லை;

நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும் –

சற்று நேரத்திற்கு
கிடைக்காமல் தான் போகட்டுமே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக