41. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

தாவணியில் – நீ
எத்தனை அழகென்று
எல்லோருக்கும்
தெரிய வாய்ப்பில்லை தான்;

வானம் பரப்பிய
வெளிச்சத்திற்கிடையே நீ
மாடியில் இருந்து
கையசைக்கும் அழகு
எல்லோருக்கும் தெரிய
வாய்ப்பில்லை தான்;

ஜன்னல் ஓரம்
நின்று சிரித்து
தொலைபேசியில் அழைக்க
ஜாடை செய்து விட்டு
உள்ளே சென்று நீ
வெளியே வரும் வரை நான்
வாசலிலேயே காத்திருப்பேன்
வெளியே வந்து நீ –
ஏனழைக்கவில்லையென
ஜாடையில் சிணுங்குவாய் என
எல்லோரும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை தான்;

கையில் நானெழுதி
உன்னிடம் காட்டாத பெயரும்
புத்தகமெல்லாம் நீ
எழுதிவைத்த என் பெயர்களும்

கோவிலில் யாரும் வராத
நேரம் பார்த்து –
நீயும் நானும் சென்று
உன் பேரில் நானும்
என் பெயரில் நீயும் செய்த அர்ச்சனையும்

ஒரே வண்ணத்தில் அணிந்த
ஆடையும்,
ஒரே நேரம் பார்த்து
பள்ளிக்கு ஒன்றாகக் கிளம்பியதும்

திரும்பி வரும்போது
தெருவெல்லாம் –
பேசிக் கொண்டே வரமறுத்து
பார்த்துக் கொண்டே வந்ததும்

படித்து படித்துவிட்டு
நீ கிழித்தெறிந்து விட்ட என்
கடிதங்களும்
இன்றுவரை கிழிக்காமல் வைத்திருக்கும்
உன் காதல் கவிதைகளும்

உன் கால் பதிக்கும் ஓசையும்
நான் வாய்விட்டு அழைக்காமலே
நீ திரும்பிப் பார்க்கும்
மன ஒற்றுமையும்

இரவும் நம் தூக்கமும்
மட்டுமே அறிந்த நம்
கனவுகளும்

தெருக் கம்பத்தில்
உன் ஒரு பார்வைக்காய் காத்து
நின்றதும்
வீட்டு வாசலில் யாரையோ
தேடுவது போல் –
யாருக்காகவோ காத்திருப்பது போல்
எனக்காக நீ வந்து நின்று
எனைப் பார்த்துக் கொண்டே
வீட்டினுள் சென்றதும்

நீர் நிலம் காற்று வானம்
பூமி அறிந்த நம் காதலை
எல்லோருமே அரிய வாய்ப்பில்லைதான்;

இப்படி –
யாருமே அறியாத காதல்
உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த காதல் –
உனக்கும் எனக்கும்
அற்றுப் போனதை –
வருடங்கள் பல தொலைத்தத பின்பும்
மனசு நினைக்கத் தான்
செய்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

6 Responses to 41. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. vijays's avatar vijays சொல்கிறார்:

    fantasticccccccccccccccc

    Like

  2. விஜய்'s avatar விஜய் சொல்கிறார்:

    //வீட்டு வாசலில் யாரையோ
    தேடுவது போல் –
    யாருக்காகவோ காத்திருப்பது போல்
    எனக்காக நீ வந்து நின்று
    எனைப் பார்த்துக் கொண்டே
    வீட்டினுள் சென்றதும்//

    //வருடங்கள் பல தொலைத்தத பின்பும்
    மனசு நினைக்கத் தான்
    செய்கிறது//

    ம‌ன‌து உள்ள‌வ‌ரை இது ஒயாது…

    Like

  3. Karthik's avatar Karthik சொல்கிறார்:

    நன்றாக உள்ளது

    Like

விஜய் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி