Monthly Archives: பிப்ரவரி 2010

பிரிவுக்குப் பின் – 25

நீ நான் என்பதில் – அதிக வேற்றுமையில்லை; பெண் ஆண் என்பதைத் தவிர!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 24

பெரிய பெரிய அதிசயங்கள் – இப்படித் தான் நிகழ்கின்றன; நீயும் நானும் நேருக்கு நேர் சந்தித்தோம் கனவில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 23

உலகின் – ஏதோ ஒரு மூலையில் உனை விட்டுப் பிரிந்து எங்கோ – கடை கோடி தூரத்தில் அலைகையில் மனம் – ஏதோ ஒரு பெண்ணின் பார்வையையாவது திருடித் தான் கொள்கிறது; ஆனால், உனக்கான இடம் மட்டும் இதயத்திலிருந்து உயிர் வரை சற்றும் குறையாமல்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 22

இன்று சம்பளம்! வாங்கிய உடனே உனக்கனுப்பினேன் அம்மாவிற்கு அனுப்பினேன் அக்கா வீட்டிற்கும் – தங்கச்சி சீதன பணமும் அனுப்பினேன் அண்ணன் குழந்தைகளுக்கு ஏதேதோ கேட்டிருந்தார் வாங்கியனுப்பினேன் எல்லாம் முடித்துவிட்டு வந்து படுக்கையில் வீழ்கையில் – அப்பாடா என்றொரு நிம்மதி; அவைகளை எல்லாம் தாண்டி – தனிமை இரவின் தவிப்பில் – தலையணை நனைத்த ஒரு சொட்டுக் … Continue reading →

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

கடைபிடி; முதல் படி! (கோபம்)

நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள் வந்து நிற்பதுமா வாழ்க்கை? படுத்த உடன் தூக்கம் வருவது வாழ்க்கை. பசித்து உணவு உட்கொள்வது வாழ்க்கை. சொந்தம் கூடி மகிழ்ந்ததில் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 4 பின்னூட்டங்கள்