படைப்பாளிகளுக்கு வணக்கம்,
ஒரு மகிழ்வான செய்தியுடன் உங்களை அணுகுவதில் மன நிறைவு கொள்கிறேன். புதிதாகத் துவங்க உள்ள “வலைமொழி இதழ்” விரைவில் வெளிவர உள்ளது. இரவு தூக்கத்தை தொலைத்தும், தமிழின் பால் ஆர்வம் கொண்டும், இச்சமூகத்திற்கு எதையேனும் செய்யத் துணிந்த ஆற்றாமையை; சமூக சீர்கேடுகளால் கொந்தளித்தெழுந்த உணர்வுகளை வலையில் எழுதியும் வரும் படைப்பாளிகளின் சீரிய படைப்புக்களை சேகரித்து ஒரு தரமான இதழாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அறிய முயற்சியை தோழர் இஷாக் முன்னெடுத்து தமிழ் அலை பதிப்பகம் வழியாக வெளியிட கலந்தாய்ந்துள்ளார். அதற்கான படைப்புகளை தோழமை உறவுகளிடமிருந்து வெகுவாய் எதிர்ப்பார்த்தும் உதவ முன்வருவோரின் கரம் கொண்டு எழவுமே இம்மடல் அனுப்பப் படுகிறது.
புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்ற பண்முகத் தன்மையான படைப்புகள் வரவேர்க்கப் படுகின்றன. புனைப் பெயரில் எழுதுபவராயின், படைப்புகளை அனுப்புபவரின் முழு விவரத்தையும் சேர்த்தனுப்புவது அவசியமெனக் கருதுகிறோம். படைப்புகளை valaimozhi1@gmail.com , editor@vidhyasaagar.com போன்ற முகவரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். படைப்புகள் தேர்வுக் குழுவின் தேர்விற்கு உட்பட்டதென்பதையும், தெரிவித்து இம் மாபெரும் முயற்சிக்கு துணை நிற்க வேண்டி, மிக நன்றிகளுடன் விடைகொள்கிறேன்.
வித்யாசாகர்
குவைத்

























தோழர் கீழ்க்கண்ட தளங்களிலிருக்கும் படைப்புகள் குறிப்பாக http://kayalmakizhnan.blogspot.com தளத்தில் உள்ளவை தகுதியுடைய பதிவுகள் ஏதேனும் இருப்பின் பயன்படுத்திக் கொள்ளவும்
மகிழ்நன்
எனக்கான நாடு உருவாகும்
வரை நான் அகதி (சென்னை)
http://periyaryouth.blogspot.com
http://kayalmakizhnan.blogspot.com
LikeLike
நன்றி மகிழ்நன் செய்வோம், குறிப்பாக தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புக்களை அனுப்புவது சிறப்பு. காரணம் இது இதழாக வெளிவர இருப்பதால் இது போல் நிறைய மின்னஞ்சல்கள் வர சாத்தியமுண்டு இல்லையா. எனினும் நட்பு கருதி முயற்சிக்கிறேன். நீங்களும் அங்ஙனம் முயற்சியுங்கள்.
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
LikeLike
சரிங்க தோழர்……..
நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்…..
தகுதியானதாக தோன்றினால்…பரிசீலனை செய்யுங்கள்..
மகிழ்நன். பா
http://periyaryouth.blogspot.com
http://kayalmakizhnan.blogspot.com
LikeLike
மிக்க நன்றி மகிழ்நன்!!
LikeLike
வணக்கம்
நல்ல முயற்சி வாழ்த்துகள்..
LikeLike
மிக்க நன்றியையா.. தங்களை போன்றோரின் வாழ்த்துக்களால் பலமுறுவோமென்றே.. நம்புகிறோம்!!!
LikeLike
முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
LikeLike
மிக மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும் மன்சூர்!
LikeLike
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் வித்யாசாகர்.
கண்டிப்பாக படைப்புகளை அனுப்புகிறேன்.
விழியன்
LikeLike
மிக்க நன்றி விழியன். தங்களை போன்றோரின் படைப்புக்களால் சிறக்கட்டும் ‘வலைமொழி இதழும்’. இது ஒரு கூட்டு முயற்சி தான், வெற்றியென்றாலும்; அது எல்லோருக்குமான வெற்றியெனக் கருதுவோம்!!
LikeLike
வாழ்த்துக்கள்..
அகில்
LikeLike
வாழ்த்திற்கு மிக்க நன்றி.. அன்பிற்குறிய அகில்!!
LikeLike