கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

 

 

 

 

 

 

 

 

 

ஆஹா…. கண்கொள்ளா காட்சி..

கவிதைக்கு –
கவிதையோடு திருமணம்..
 
எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு 
சிரிப்பென்னும் மோதிரம்..
 
அன்பு தாங்கிய மனதிற்கு
ஆரணங்கு பரிசு..
 
தமிழ் போற்றும் புலமைக்கு
தமிழச்சி துணையாக..
 
சமூகம் சுமந்த புத்திக்கு
இல்லற வரவேற்பு..
 
நல்லறம் பேசும் நாவெல்லாம்
காதலினி பா..’வாய் ஓத..
வாழிய வாழிய வாழிய அன்பிற்குறிய சகோதரா…
 
னிவரும் காலங்கள்
எழிலும் வளமுமாய் பூத்து
நற்செல்வங்கள் பதினாறும் பெற்று
நல்லாசைகளெல்லாம்  நிறைவேறி
நாளும்; நாலும்;  நாடும்; பாரும் போற்ற
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு!
 
பேரன்புடன்..
 
உலக உயிர்களின் சார்பாகவும் –
வித்யாசாகர்
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , . Bookmark the permalink.

10 Responses to கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

  1. மன்னார் அமுதன்'s avatar amuthan சொல்கிறார்:

    வித்யாசாகர் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்…. வாழ்த்துவதற்கும் உங்கள் இலக்கியத் தளத்தில் எமக்கு இடம் ஒதுக்குவதற்கும் பெரிய மனம் வேண்டும்… அது உங்களிடம் உள்ளது…. இப்படி எம்மை மகிழ்விப்பீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை…. நினைக்காததை நீங்கள் செய்து மகிழ்வித்திருக்கிறீர்கள்…

    நன்றிகள்

    மன்னார் அமுதன்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      பள்ளம் தேடி தான் நீர் நிறையும் அமுதன். அன்பிருக்கும் இடத்தில் தான் அன்பும் சுரக்கும்.

      சகோதரிக்கும் வாழ்த்தினை தெருவியுங்கள்..

      தூர பார்க்கையில் தெரியும் மகிழ்வான அன்பில்; நெருங்கிப் பார்க்கயில் சில குறையும் இருக்கலாம், தெரியலாம், உறுத்தலாம். எதுவாயினும், இது தான் வாழ்வென ஒருவரிடத்தில் மற்றொருவர் மிக்க நம்பிக்கை கொண்டு, நேரும் சிறு தவறுகளை மன்னித்து, குறைகளை மறந்து மீண்டும் மீண்டும் கொள்ளும் அன்பு வாழ்விற்கான பாது காப்பு ஆயுதமென கொள்க!

      Like

  2. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நம் வேர்ட்ப்ரெஸ் நண்பர்களின்றி, மொத்த உலகமும் நம் கவிச் சகோதரன், சமூக எழுத்தாளன், தமிழ் பற்றாளன் திரு. மன்னார் அமுதனை வாழ்த்தட்டுமென்றே; மின்னஞ்சலில் அனுப்பும் வாழ்த்தினை – இங்கு பதிந்தேன் தமிழ்தோட்டம். மிக்க நன்றி உங்களின் வாழ்த்திற்கு!

      Like

  3. thanabalasingam's avatar thanabalasingam சொல்கிறார்:

    வித்யாசாகர் நீங்கள் அமுதனுக்கு வழங்கிய வாழ்த்து படித்தேன். என்னால் என் அன்புக்குரிய அமுதனுக்கு அப்படி ஒரு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லையே என ஆதாங்கப்பட்டேன். .நான் கனடா வந்தபின்னர் வாசிப்பது குறைந்துவிட்டது. காரணம் வேறு பல பளுக்கள்.., அதனால் நிறையவே ஆளுமை மிக்க உறவுகளை தவறவிட்டுள்ளேன். அதில் நீங்கள்ளும் அடங்குகிறீர்கள். மன்னித்துவிடவும். இனிமேல் தவறவிடமாட்டேன். இப்போது எனக்கு அவசர உலகின் அவசரம் இல்லை.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      பரவாயில்லை ஐயா. அமுதனுக்கு தங்களின் அன்பு நிறைந்த மனது புரிந்திருக்கும். நீங்கள் பெரியவர், உங்களை இதுவரை சென்றடையாதலில் நானே வருத்தத்திற்குரியவனாவேன். இனிமேல் உங்களுக்கு நெருக்கமாக இருக்க எழுத்தும் தமிழும் அன்பினால் குழைந்து கொள்ளுமென மனசு நம்புகிறது. நேரம் கிடைக்கையில் பேசுங்கள். உங்களை போன்றோரின் அக்கரையில் கண்ணீரின்றி கால ஏட்டில் பதியட்டும் எனை போன்றோரின் உழைப்பும் படைப்பும்!

      மிக்க நன்றிகளையா…, //மன்னித்துவிடவும்// தங்களின் இந்த முதிர்ந்த வயதிலும் கொள்ளும் பணிவு எனக்குமான படமாகும்!

      Like

  4. தங்க. முகுந்தன்'s avatar தங்க. முகுந்தன் சொல்கிறார்:

    இல்லறம் என்னும் நல்லறத்தில் இணையும் தம்பதியினருக்கு நாமும் வாழ்த்துகிறோம்.

    Like

  5. uumm's avatar uumm சொல்கிறார்:

    கவிதைக்கும்..காதலுக்கும் வாழ்த்துக்கள்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      இனிக்கும் தமிழுக்கும் வாழ்த்திற்கும் நன்றியறிவிக்கிறேன் உமா. தங்களின் ஆசியும் அவரின் இல்லறத்தை நல்லறமாக்க இணைந்துகொள்ளும் என்பதில் ஐயமில்லை!

      Like

பின்னூட்டமொன்றை இடுக