‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!

  

ணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள்.

அதும் ‘குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை’ என ஆங்காங்கே விளம்பரம் வேறு. மீரா வெகு ஆவலாக அந்த அலுவலை நோக்கி வந்தாள். குடும்ப அழகிற்கு ஒரு உதாரண முகம் மீராவிற்கு. சுண்டினால் சிவக்கும் நிறமில்லை, ஆயினும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான உடலும் பார்வையும் கொண்ட அழகி மீரா.

அவளின் சான்றிதழ்களை எல்லாம் பார்த்துவிட்டு, எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நிற்கும் மான்குட்டியை, மலைப்பாம்பொன்று பார்ப்பது போல் பார்த்தான் அவன்.

“கத்தாமா’வா வரியா?”

“கத்தாமா…..????”

“என்ன கத்தாமான்னா எளக்காரமா இருக்கா? அப்போ நீ போலாம்..”

“சார் சார்.. நான் பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்..”

“அதனாலதான் உன்னை உள்ளே அனுப்பலாம்னு பார்த்தா நீ கத்தாமாவான்ற..?”

“எனக்கு கத்தாமான்னா என்னன்னே தெரியாதுங்க”

“அப்படியா விஷயம், அது கெடக்கு விடு, அதை நான் பார்த்துக்குறேன், நீ கண்டிப்பா செலக்ட் ஆயிடுவ உள்ள போ..”

“நான் செலக்ட் ஆயிடுவேனா..!!! உண்மையாவா?”

“ஆமாம்மா.., சந்தேகமே வேணாம், நீ பாஸ்பொர்ட கொடுத்துட்டு அதோ அங்க போயி உட்காரு. இன்டர்வியூவுக்கு கூப்பிட்டாங்கன்னா.. உள்ள போ..,கொஞ்சம் தாழ்வா பேசு, ஒரு அரபி ஆள் தான் இருப்பான். எது கேட்டாலும் எஸ் சார்., எஸ் சார் னு சொல்லு.. உனக்காக நான் ஸ்பெசலா உள்ள வருவேன். நான் பார்த்துக்குறேன் போ..மா போ பயப்படாத..”

“ரொம்ப நன்றிங்க சார். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. எனக்கு தெய்வம் மாதிரி நீங்க”‘

“ஆமாம்.. ஆமாம்.. நிறைய பேருக்கு நான் தெய்வம் மாதிரி தான்” சிரித்துக் கொண்டான் அந்த சண்டாளன். மீரா சற்று நேரம் வெளியே அமர்ந்திருக்க அந்த அறையிலிருந்து அழைப்பு வந்தது.

“மீரா….”

“தோ..இருக்கேன்..

“உள்ளே வாங்க”

உள்ளே போனாள்.

“நீங்க தான் மீராவா..?!!” அந்த அரபி ஆள் கேட்டான்.

“ஆமா சார்”

“ரொம்ப அழகா இருக்கீங்க” ஆங்கிலத்தில் சொன்னான் அந்த அரபி. கொச்சையாக பார்ப்பது தெரிந்தது. ‘கடனெல்லாம் நிறைய இருக்கு மீரா…, பெரியவனுக்கு பீஸ் எல்லாம் வேற கட்டனும்’ உள்ளிருந்து ஏதோ ஒரு குரல் கேட்டது.

“ரொம்ப நன்றி சார்..” ஆங்கிலத்திலேயே பதில் சொன்னாள்

“எந்த வேலை விட்டாலும் செய்வீங்களா?”

“சார்.. நான் பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.., எனக்கு கணினியில் நல்ல வேலைகள் தெரியும்..”

அந்த அரபி ஆள் ஏஜண்டை திரும்பி நாக்கில் எண்ணமோ தேன் சொட்டுவது போல் பார்த்தான். ‘குட்டியை நல்லா தான் புடிச்சிருக்க’ என்பது போல் இருந்தது அவனின் பார்வை.

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆமா சார். இரண்டு குழந்தைகளும் இருக்காங்க”

“உங்க புருஷன்??”

“அவருக்கு இதயத்துல ஏதோ பிரச்சனையாம். சொல்லாமையே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க சார். அவர் இறந்து இரண்டு வருஷம் ஆச்சு”

‘அச்சச்சோ…. ‘ என்று ஏஜண்டை பார்த்தான் அந்த அரபி ஆள். வசதியா போச்சு என்பது போலிருந்தது அந்த பார்வையின் அர்த்தம்.

“சரி,, எவ்வளோ சம்பளம் வாங்குறீங்க..?”

“இங்க வெறும் ஆப்பரேட்டரா தான் இருக்கேங்க சார், வேற நல்ல வேலை கிடச்சா இன்னும் நிறைய தருவாங்க.”

அந்த அரபி ஆள் திரும்பி ஏஜெண்டை பார்த்தான். “அதாம்மா எவ்வளோ வாங்கறிங்க இப்போ. அவர் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க” என்னமோ அவனுக்கு தெரியாமல் இவர் தமிழில் சொல்லி, உதவி செய்வதை போல் நடித்தான் அந்த ஏஜென்ட்.

“மன்னிக்கணும் சார், மூனாயிரம் பிளஸ் வாங்குறேன்” எங்கு இன்டர்வியுல தோத்துப் போயிட்டன்னு சொல்லிடுவாங்களோ ன்னு ஒரு பயம் அவளுக்கு. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு ” குழந்தைங்க தேர்ச்சி பெற்று மேல படிக்க வந்துட்டாங்க, பீஸ் நிறைய ஆகுது, விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சிங்க சார்”

“சரி…. உனக்கு பத்தாயிரம் சம்பளம் தரேன் போதுமா…?”

‘கடவுளே!!! என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும். கடனெல்லாம் அடைச்சிடுவேன். என் குழந்தைகள நல்லா படிக்க வைக்கலாம்…’மனதில் நினைத்து சந்தோசத்தில் பொங்கினாள் மீரா..’ சரியென்றோ இல்லையென்றோ ஏதும் சொல்லாமல் மௌனமாக யோசித்ததாள், அவளுக்கு சம்பளம் போதவில்லையோ என்று நினைத்துக் கொண்டார்கள் அவர்கள்..

“என்னமா யோசிக்கிற….???? சரி.. பன்னிரண்டாயிரம் போதுமா?”

மீரா சற்று சுதாரித்துக் கொண்டாள். அரபிக் காரனையும் அந்த எஜென்டையும் மாறி மாறி பார்த்தாள். “நான் பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்..”

“எல்லாம் வேலையும் செய்வியா?”

“கண்டிப்பா செய்வேன் சார்”

“என்ன சொன்னாலும் கேட்பியா?”

ஒரு பெண்ணிடம் கேட்கக் கூடாதா கேள்வி. ஒரு பெண் சம்மதித்துக் கொள்ளக் கூடாதா இடம். ஆனால், அவள் வறுமை அவளை தலை ஆட்ட வைத்தது.

“கேட்பேன் சார்..”

“அங்க வந்ததும் ஊருக்கு வரேன்னு எல்லாம் வந்து நிக்க மாட்டியே?”

“நிக்க மாட்டேன் சார்..”

“ரெண்டு வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாதம் விடுப்பு தான் கிடைக்கும்” அவளை அவர்களுக்கு புரிந்துப் போனது. அவளின் ஆர்வத்தை மிக நன்றாக பயன்படுத்திக் கொள்ள துடித்தன அந்த இரண்டு மிருகங்களும். அவள் சற்று பாவமாக

“ரெண்டு வருடத்துக்கப்புறம்; ஒரு மாதம் தான் விடுப்பா?” என்றாள்.

“சும்மால்ல, சம்பளத்தோட லீவு கிடைக்கும்.ஒழுங்கா சொல்ற மாதிரி எல்லாம் நடந்துக்குனா ராணியாட்டம் இருக்கலாம்”

ராணி யென்பதன் அர்த்தம் மீராவிற்குப் புரிய வில்லை. துள்ளிக் குதிக்கும் சந்தோசத்தோடு அவர்களைப் பார்த்தாள்.

“எத்தனை கிலோ எடை இருப்ப?”

“அறுபத்தி மூணு கிலோ சார்”

“உயரம்?”

“169 செண்டி மீட்டர்”

“பாடி அளவு எவ்வளோ?”

“பாடி..??!!” அவள் சற்று அதிர்ந்தாள். “ஏன் அதலாம்?”

“அங்க அதலாம் கேட்பாங்கமா..” அந்த கைக்கூலி பேசியது.

“பதினைந்தாயிரம் சம்பளம் போதுமா???” அரபி ஆள் கேட்டான்.

“பதினைந்தயிரமா!!!? போதும்.. போதும்…”

“பதினைந்தாயிரம் உனக்கு பெருசு தானே???”

“ஆமா.. ஆமாம்..”

அத்தனைக்கும் தலையாட்டினாள் மீரா. காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டாள். எல்லாமே அரபியில் மட்டுமே எழுதப் பட்டிருந்தது. அதையெல்லாம் பதினைந்தாயிரம் மறைத்துக் கொள்ள, எண்ணி இருபதே நாட்களில் விசா வந்தது. அடுத்த ஒரு வாரத்தில் விமானமேறினாள்.

காலம் ஒரே மாதிரியா இருக்கு, கெட்டது வர மாதிரி நல்லது வரதும்; நல்லதுவர மாதிரி கெட்டது வரதும் வாழ்க்கையா போச்சி, கேட்டா விதி என்னும் உலகம். ஆனால் அப்படி ஒரு காலம் மீராவிற்கும் வந்தது.

அருகருகே இருக்கையில் அம்மா அப்பா கூட பெரிதாக தெரிவதில்லை. தூரம் சென்று விட்டால் அக்கம்பக்கத்து வீடு கூட கண்ணீருக்கு காரணமாகி விடுகிறது. மீராவின் கண்ணீருக்கு நிறைய காரணமிருந்தது. என்ன தான் விமானமேறி விட்டாலும், நெஞ்சு கனத்தது. இரண்டு பிள்ளைகளும் மாறி மாறி மடியை கட்டிக் கொண்டு அழுதது நினைவிலேயே இருந்தது.

விமானத்தில் இருந்தவர்கள் அவளின் சோக முகத்திற்கான காரணத்தை கேட்பதையெல்லாம் விட்டுவிட்டு பீர் வாங்கிக் குடிப்பதிலும் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்பதிலும் மும்முரமாக இருந்தார்கள். ஒரு ஐந்து மாதக் குழந்தை இடைவிடாமல் அழுதுக் கொண்டே இருந்தது. இவளுக்கும் தன் குழந்தைகளின் நினைவு நீங்குவதாக இல்லை. நினைத்து நினைத்து அழுதாள். சாப்பிட கொடுத்த உணவுகளை கூட உண்ணாமலே திருப்பிக்கொடுத்தாள். நெஞ்சு கனத்தது மீராவிற்கு.

“அம்மா அம்மா.. போகாதேம்மா..” பிள்ளைகள் கெஞ்சியது நினைவிலேயே இருந்தது.

“உன்னை விட்டு நாங்க எப்படிம்மா இருப்போம்” சின்னவள் அழுதது நெஞ்சை உளுக்கியது. தாங்க முடியவில்லை அவளால். தொண்டை விக்கி விக்கி வர தலையை கவிழ்ந்துக் கொண்டு அழுதாள். தேம்பினாள். இப்படியே இறங்கி ஓடி விடலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் எப்படி முடியும், எதுவாயினும் சந்தித்தேயாக வேண்டிய சூழலில் தானே புறப்பட்டிருக்கிறேன், வேறென்ன செய்ய இந்த பாழும் உலகில் தனியே வாழும் ஒருபெண் நான். எல்லோரும் இருந்தும்; யாரும் இல்லாத அனாதை. காண்போருக்கு வெறும் உடலாக மட்டும் தெரியும்; விதவையாயிற்றே நான்.

அதும் இளம் விதவையாயிற்றே விடுவார்களா? கொஞ்சம் மயக்கமாக பேசினால் விழுந்து விடுவாள், ஏதேனும் பணம் கொடுத்து விலை பேசி விடலாமென, சர்க்கரையை மொய்க்கும் சாக்கடை ஈக்களுக்கிடையே வாழ்பவள் ஆயிற்றே நான். வாழ்க்கையையே போராட்டமாக கொண்டு இரவு பகலை தொலைப்பவள். இதில் ஒரு பெண் குழந்தை வேறு வைத்து எப்படி கரை சேர்ப்பேனோ’ என்றெல்லாம் சிந்தனையும் அழுகையுமாக விமான பயணத்தின் நேரம் கடந்தது.

குழந்தைகள் பேசியது, அவர்களை ஆஸ்டலில் சேர்த்தது என எல்லாம் நினைவுதனில் ஊறிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்தவன் அவளின் தோளில் கை வைத்தான்.

“ஹலோ..” என்றான்

அவள் திரும்பி முறைத்துவிட்டு தலைகவிழ்ந்துக் கொண்டாள். அவன் மீண்டும் தோளில் தட்டினான்.

“ஹலோ ஐ’யம் பவன், கோயிங் டு குவைத். அண்ட் யூ???” பேசிக் கொண்டே கைகளை நீட்ட, மீரா அவன் கை நீட்டியதை அலட்சியம் செய்து விட்டு… “நான் லண்டன் போறேன், போதுமா” என்றாள் கோவமாக.

‘ஹோ.. நையிஸ், ரியளி யூ ஆர் சோ கியூட்” அவன் பல்லை காட்டியதிலிருந்து வழிந்த காம ஆசைகள் ‘அவன் கையில் வைத்திருந்த மதுக் குவளை வரை, நிரம்பி வழிவது அவளுக்கு தெரியாமலில்லை. விருட்டென எழுந்து ஏரோஸ்டஸ்சை அழைத்தாள், இடம் மாற்றிக் கேட்டு வேறு இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். நேரங்கள் கரைந்ததில் விமானம் தரை இறங்கியது.

ங்கு இறங்கி எந்கு போவது? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. எங்கு கண்டாலும் எல்லாமே அரபியில் மட்டுமே எழுதப் பட்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக இவளும் போனாள். ஒரு ஆள் இடைமறித்து ‘குவைத்.. குவைத்..’ என்று கத்த, ஆம் என்று சொல்லி இன்னும் நான்கைந்து பேராக அவன் பின்னால் போக, வழியில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மூலம் இது துபாய் வழி பயணம் என்றும், தற்போது துபாயில் இருக்கிறோம் என்றும், இனி இங்கிருந்து குவைத் போகவேண்டும் என்றும் தெரிந்துக் கொண்டாள். முன்னரே போர்டிங் போட்டு வாங்கியிருந்ததால் ஓரிரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு ‘வேறொரு குவைத் விமானத்தில் ஏறி ஒரு வழியாக அமர்கையில், வயிறு கிள்ளி பசியெடுத்தது.

இது அரை மணிநேரப் பயனம் மட்டுமே என்பதால், விமானத்தில் உணவு சேவை இல்லை என்று சொல்லி பழச்சாறும், சான்விட்ச்சும் கொடுத்தார்கள். பிடித்தும் பிடிக்காமலும், பாதி தின்று மீதி பாதியில், ‘பசியையும் சேர்த்தெரிந்தாள். விமானம் ஒருவழியாக தரையிறங்க, எல்லோரையும் ஓரிரு பேருந்தில் ஏற்றி விமான நிலையத்திற்கு அழைத்துவந்து கொண்டிருந்தார்கள். பக்க இருக்கையில் அமர்ந்து சுத்தி சுத்தி பார்க்கிறாள் மீரா.

இதயத்தை யாரோ, வெட்டி இரண்டாக போடுவது போல் இருந்தது. அகன்று விரிந்திருந்த பாலைவனம் மணதிற்குள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. பேருந்திலிருந்து இறங்கி இமிக்ரேசனை நோக்கி நடந்தாள். கூட்டமாக வந்து நிற்க, ஒரு அரபி ஓடி வந்து ‘எல்லா.. எல்லா..’ என்று கத்தினான். இரண்டு மூன்று பெண்களை இழுத்து அங்கே போவென தள்ளிவிட்டான். அதில் ஒருத்தி ஏதோ சொல்ல, இழுத்து தனியாக நிற்க வைத்துவிட்டான். உள்ளே சுளீரென வலித்தது அவளுக்கு. அடிமை என்றால் என்ன அர்த்தம் இருந்திருக்கும், சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது எதுவரை உள்ளடக்கம்? என்றெல்லாம் யோசித்திடாத புத்திக்கு, அந்த அரபி போலிசின் செயல் மிக வலித்தது.

பயந்து பயந்தே நின்றிருந்தாள். அருகே நின்றிருந்த இன்னொரு பெண்மணி தமிழ் போல தெரிந்தது. ஆனால் கண்களை சுற்றி கருவூலம் பூத்திருக்க, பேசுவதற்கு யோசித்தாள். இருந்தும் வேறு வழியில்லையே என நினைத்துக் கொண்டு..

“நீங்க தமிழா?” என்றாள்

“ம்ம்..”

“நீங்களும் இப்போதான் முதல் முறையா குவைத் வரீங்களா?”

“எட்டு வருசமா இங்க தான் இருக்கேன்”

“எட்டு வருசமா? எப்படி இருக்கீங்க இங்க எட்டு வருஷம்? இப்படி நடந்துக்குறாங்களே? இங்க எல்லோருமே இப்படி தானா?”

“எல்லோரும் இல்லை. ஆனா அதிக பட்சம் பேர் இப்படி தான். இவுங்களை பொறுத்த வரை நாமெல்லாம் அடிமை. நீயும் உன்னை அப்படியே நினைச்சிக்கோ. இல்லைனா ரிட்டன் பிளைட் இஸ் பெட்டெர்”

“ஐயோ…”

“ஏன் .. ஏன்.., பயப்படாதீங்க, உங்களுக்கெல்லாம் ஒன்னும் அவ்வளவு பிரச்சனை இருக்காது. எங்களை மாதிரி கத்தாமான்னா தான் பிரச்சனை”

“கத்தாமா!!!? நானும்…” நிறுத்திக் கொண்டாள்.

“குவைத்துல கத்தாமா’வா மட்டும் வந்துடக் கூடாதுங்க. அதிலும் சம்சாரிங்க வரவே கூடாதுப்பா!!!”

“ஏன்!!!???”

“அதிர்ச்சியா இருக்குல்ல. ஆம்பளை துணை இருந்தா அப்படி மதிப்பானுங்க. அதே வீட்டுவேலை செய்றவன்னு தெரிஞ்சா அவ்வளவு தான், பச்சை வேசியாக்கிடுவானுங்க நம்மளை. சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்குனா, கூத்தியாளுக்கு ஒரு படி மேலே இருக்கலாம், மறுத்தோம்னா ‘நாய விட கேவலம் நாம தான்..”

உள்ளே ஐயோவென்றுக் கதறினாள் மீரா. கீழே உடகார்ந்து ஓ..ன்னு கத்தலாமா என்றிருந்தது அவளுக்கு. அதற்குள் மற்றொரு அரபி அருகே வந்து எல்லா.. எல்லா. ரோ ரோ என்று கை காட்டி போ போ என்றான். பயந்து பயந்து முன்னே போனாள். எப்படியோ எல்லாம் ஒருவழியாக முடிந்து மூட்டை கவலைகளையும் பயத்தையும் சுமந்து வெளியே வந்தாள்.

த்தனை பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை என்றாலும், ஏதோ வெளிநாடு போல் காட்சியளித்தது குவைத் விமான நிலையம். தெய்வத்தை தேடுவது போல் அந்த ஊரில் ஆளெடுக்க வந்த அரபியை தேடினாள். அவளுக்கென்று இங்கு தெரிந்த முகம் அவன் மட்டுமே என்பதால், அவனை கண்டால் சற்று மனதிற்கு அலாதியாக இருக்குமென்று நினைத்திருப்பாள் போல்.

அவள் யாரையோ தேடுவதை பார்த்து விட்டு, வேறொருவன் வந்து யாரை தேடுகிறீர்கள், தொடர்பு எண் ஏதாவது இருக்கிறதா என்று கேட்க, அந்த அரபி ஆளின் அலைபேசி எண் கொடுத்து அழைக்க, அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்க சொல்லி, அரை மணி நேரத்திற்கெல்லாம் அங்கு வந்துவிட்டான்..

“வெல்காம்… வெல்காம் மீரா…., ஹொவ் இஸ் ட்ரிப்? என்றான். கை கொடுத்தான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அமைதியாக தலையாட்டி விட்டு அவன் பின்னாலேயே போக. கடல் மாதிரி நின்றிருந்த ஒரு பெரிய காரில் ஏறினான். தன்னையும் ஏறி முன் பக்கத்தில் அவனுக்கருகில் அமர சொன்னான். மனசு பக்கென்றது. வண்டி பாலைவனங்களை கடந்து ஒரு பெரிய கட்டிடங்கள் நிறைந்த நகரத்தில் நுழைந்தது.

இது தான் குவைத் சிட்டி’பார்த்துக் கொள் என்றான் அவன். அவளுக்கு கட்டிடங்கள் எல்லாம் பார்க்க, சற்று ஏதோ நல்ல இடத்திற்கு வருவதாக எண்ணத்   தோன்றியது. தெரியாத் தனமாக புடவையை கட்டிக் கொண்டு வந்திவிட்டாள். புடவை வேறு அவ்வபொழுது கீழிறங்க, அவன் திரும்பி திரும்பிப் மாராப்பையே பார்த்தான். அவள் முந்தானை இழுத்து சுற்றிக்கொண்டு சற்று தூரமாக ஒதுங்கியே அமர்ந்திருந்தாள். வண்டி நகரத்தை கடந்து ஒரு ஒதுக்குப் புறமான பாலைவனப் பிரதேசம் போன்ற இடத்தில் நுழைந்தது.

நெடிய நீண்ட பாலை வனத்தில் ஆங்காங்கே சில வீடுகள் மட்டுமே இருந்தன. இரண்டு ஆள் உயரத்திக்கு மண் சுவர் எழுப்பியும், சில வீடுகள் அரண்மனை போலவும் ஒன்று விட்டு ஒன்றாக இருக்க, ஒரு வீட்டில் சடாரென வண்டி நின்றது. அந்த அரபி கீழிறங்கி மீராவையும் இறங்க சொன்னான். அவள் கீழிறங்கியதும். அவள் தோல் மீது கை போட்டு, நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி பல் இளித்தான். மீரா அவன் கையை தட்டிவிட்டு அமைதியாக தலைகுனிந்து தூர விலகி நின்று கொண்டாள். கோபமும் பயமும் அவளுக்கு எல்லோரின் மீதும் ஒருவாறாகவே இருந்தது.

வீட்டிலிருந்து, உடம்பெல்லாம் கருப்பு அங்கி மூடி இரண்டு ‘பெண்கள் ஓடிவந்து அவளை உள்ளே அழைத்து போனார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோருமாக அமர்ந்து ஏதேதோ பேசினார்கள். அந்த அரபி ஆள் சிகரெட்டினை மாற்றி மாற்றி பிடித்துக் கொண்டே இருந்தான். இடை இடையே இவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டான். அந்த இரண்டு பேரில் ஒருத்தி எழுந்து வந்து மீராவை வேறு ஒரு அறைக்கு கூட்டி சென்று ‘இனி நீ இங்கு தான் தங்க வேண்டும் என்று காட்டினாள். இரண்டடுக்காக நான்கு கட்டில்கள் இடப் பட்டிருந்தது அந்த அறையில். ஒரு மேல் படுக்கையை காட்டி ‘அது தான் உன் இருக்கை என்றாள்’ கூட்டிவந்தவள்.

அரை முழுதும் ஏதோ சில தவறான வாடைகள் அப்பட்டமாக அப்பி இருந்தது. எப்போது வேண்டுமானாலும் எந்த ஆம்பளை வேண்டுமாயினும் வந்து தங்கிக் கொள்ளும் ஒரு போக்கு சிதறிக் கிடந்த துணிகளையும் சிகரெட் துண்டுகளையும் காண்கையில் மீராவிற்கு புரிய வைத்தது. இன்னொருத்தி வந்து இந்தா இது தான் இனி உன் உடுப்பென இரண்டு நைட்டிகளை கொடுத்தாள். மீரா ‘இல்லை வேண்டாம், நான் துணிகள் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்ல, அவள் சற்று கோபமுற்று, ஏதோ அரபி மொழியில் கத்தினாள்.

உடனே அந்த ஆளெடுக்க வந்த அரபி உள்ளே வந்து ‘என்ன’ என்று கேட்க அந்த கருப்பங்கி போட்டவள் ஏதோ கத்தி கத்தி சொல்ல அவன், ம்ம்.. வாங்கு, வாங்கி போட்டுக் கொள் என்று மிரட்டி சொன்னான். அவள் சற்று அதிர்ந்து ‘வேண்டாம் பகலில் நான் நைட்டி எல்லாம் உடுத்தமாட்டேன், என்னிடம் வேறு துணிகள் இருக்கின்றன என்று ‘தான் கொண்டுவந்திருந்த புடவையை எடுத்துக் காட்ட, அவன் அவளின் முந்தானையிலிருந்து விலகியிருந்த மார்பில் நேராக கைவைத்து, விருட்டென அவளின் புடவையை உருவி, பச்சையாக இடுப்பை பிடித்து, பார்த்தியா…. , இதலாம் இங்கே தெரியக் கூடாது புரியுதா….’ என்றான். மீரா அவனை முறைத்துப் பார்த்து கத்த, அவன் அவளுடைய முந்தானையை பிடித்து உருவி விட, மீரா திமிறி அவன் கையை தட்டிவிட்டு அலறி சற்று தூர போய் நின்றாள். வீரிட்டுக் கத்தினாள். அவன் அருகே வந்து அவளின் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை விட்டு சப்தம் வரக் கூடாது நிறுத்து நிறுத்து என்று சொல்லி மீண்டும் அடிக்க கை ஒங்க…, நைட்டியை வாங்கி, போட்டுக் கொள்கிறேன்.. விட்டு விடுங்கள்.. போட்டுக் கொள்கிறேன் விட்டுவிடுங்களென அவள் கதற, அவன் அரபி மொழியில் கத்தி பேசிக் கொண்டே வெளியில் போனான்.

அந்த அறையில் இருந்தவர்கள் சிலர் பெண்கள் சிலர் ஆண்கள். எல்லோருமே அவளருகே வந்து, அவரவர் மொழியில் என்னென்னவோ ஆறுதல் போல சொன்னார்கள். அவளுக்கு ஒன்றுமே மண்டையில் ஏறவில்லை. ஓவென்று கத்தி கத்தி அழுதாள். அழுது வடிந்தக் கண்ணீரில் இரவு நகர்ந்துக் கொண்டிருந்தது. விடியற்காலை மணி நான்கென்று சொல்லி, ஒரு அலாரம் அடிக்க, அருகே படுத்திருந்தவன் எழுந்து அவளை எழுப்பினான். இப்போது தான் கண்ணயர்ந்து தூங்கியது போல் இருந்தது அவளுக்கு. சீக்கிரம் எழுந்து போய் குளி, சமையலுக்கு ஆள் வேண்டுமென்றான் அவன்.

சமையலா???? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. கண்ணை கசக்கிக் கொண்டு தன்னை எங்கிருக்கிறோம் என்பதை சற்று உறுதி படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனை யாரென்று கூட தெரியவில்லை அவளுக்கு. ‘நான் பி.எஸ். சி கம்ப்யூட்டர் சயின்ஸ்’ நான் சமையல் வேலைக்கெல்லாம் வரவில்லை என்றாள் அவள்.

“அதலாம் முதிர் வந்ததும் பேசிக்க, இப்போ வா…” என்றான் அவன்

“முதிரா?? அது தான் அவன் பெயரா?”

“முதிர்னா… முதலாளி. தலைவன்-ன்னு அர்த்தம். அவன் பெயர் அகமத்” என்றவன் சொல்லி முடிக்க இரவு கருப்பங்கி உடுத்தி வந்த அவள் வந்து என்னாச்சு என்ன கேள்வி இங்க, மணி நாலாச்சில்ல என்று சத்தம் போட்டாள். அதற்குள் அருகிலிருந்தவள்.. எழுந்திரு போ.. போ.. என்று சைகை போல் காட்ட.., மீரா விறுவிறுவென ஓடி குளித்து வேறொரு நைட்டியை மாட்டிக் கொண்டு சமயலறைக்கு ஓடி.., சொல்லும் வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பிக்க, ஓட்டுனர் ஒருவன் வந்து ‘வா இன்னைக்கு உனக்கு மெடிக்கல் இருக்கு போகணும் என்றழைக்க. துணி மாற்றி வருகிறேன் என்று கேட்டாள், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தான் இங்கு நம் உடை. கத்தாமா’ன்னா இது தான் உடுத்தணும் போய் வா.. என்றாள் உடன் இருந்த இந்தோனேசியா காரி ஒருத்தி.

இரவு நடந்தது நினைவில் வர, எதிர்த்து பேச திராணியின்றி, அப்படியே வயிற்றின் மீதெல்லாம் நனைந்திருந்த ஈரத்தை கையில் தட்டிவிட்டு கொண்டு அவனோடு சென்று வாகனத்தில் அமர்ந்தாள். வாகனம் புறப்பட்டது. வாகன ஓட்டி ஒரு பெங்காளி, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவன். ஏதேதோ அவளிடம் பேசிக் கொண்டே வந்தான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சற்று கண்மூடி உறங்கிப் போனாள்.

ஒரு இரண்டுமணி நேரப் பயணத்திற்கு பிறகு, வண்டி ஓரிடத்தில் நின்றது. இடம் வந்து விட்டது இறங்கு ‘என்றான் அந்த பெங்காளி ஓட்டுனர். அவளோடு கூடவே வந்து கூடவே இருந்து எல்லாவற்றையும் அவனே முடித்து கொண்டான். கடைசியாக எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்று சொல்லி, மற்றொரு கூடத்திற்குள் அழைத்துச் சென்று விட.., அங்கு ஒரு மளையாளி பல்லிளித்துக் கொண்டு “வரு வரு.. தமிழா?? நீங்க தமிழ் பொண்ணு தானே?” என்று கேட்க இவள் ஆம் என்று தலையாட்டினாள். அதற்குள் அவன் அவள் மேல் கை வைத்து “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உடம்பெல்லாம் நல்ல உடம்பு தான். உள்ள வாங்கோ நான் பாசாக்கி அனுப்புறேன்” என்று சொல்ல செருப்பு பிஞ்சிடும் என்றாள் இவள் நல்ல தமிழில் அழுத்தமாக.

அதற்குள் அவன் ஹிந்தி மொழியில் ஏதோ சொல்லி கத்திவிட்டு, நான் உன்னை பெயில் ஆக்கி விடுவேன்.. நீ கத்தாமா தானே, எங்கே உன் விசா கொடு” என்று கேட்டு கையில் வைத்திருந்த விசாவை வாங்கிக் கொள்ள. அவளுக்கு கைகால் நடுங்கித் தான் போனது. அக்கம் பக்கத்தில் வட்டிக்கு வாங்கியும், மீதியாகவும் கடைசியாகவும் இருந்த தாலி சரடினை அடகு வைத்தும், மீதி இருபதைனாயிரத்தை இங்கு வந்து தருவதாக சொல்லியும் மொத்தம் அறுபதனாயிரம் பணத்திற்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் அந்த ஏஜென்ட் விமான சீட்டையே கையில் கொடுத்திருந்தான். பதினைந்தாயிரம் சம்பலமாச்சே எப்படியும் நான்கு மாதத்தில் அடைத்து விடலாமென்னுமொரு தைரியத்தில் தான் இத்தனையையும் செய்தாள். இப்போது இவன் பெயில் என்றதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அதற்குள் இன்னொரு நர்ஸ் ஒருவள் உள்ளிருந்து வந்து வா.. வா வந்து ஆடையை கழற்று என்றாள்.

“ஐயோ… ஏன்?”

“நீ கத்தாமா தானே???”

“தெரியாது”

“கத்தாமான்னா தெரியாமையா கொய்த்து வரையும் வந்துட்ட, எங்க உன் விசா கொடு.. , ஆமாமாம், நீ கத்தாமா தான் போ.. உள்ள போ.. எக்ஸ்ரே எடுக்கணும், பிசிக்கல் செக்கப் பார்க்கணும், துணி எல்லாம் கழற்று, அங்க பார் அதோ ஒரு உறை ஓன்னு இருக்கு பார் அதை மாட்டிக்கோ..,”என்று சொல்லி, அவசர அவசரமாக அவள் கைகாட்டிய இடத்தில் அந்த உறை இருந்தது. எடுத்துப் பார்த்தாள். மார்பகத்தில் ஒரு ஜன்னல் போல் வைத்த உரை அது. மாட்டிக் கொண்டு உள்ளே போக, அவள் என்னென்னவோ வேறு நோய்களை பற்றியெல்லாம் கேட்டாள், எக்ஸ்ரே எடுத்தாள், எல்லாம் முடித்து வெளியே வருவதற்குள்; தலையே சுற்றுவது போலாகி விட்டது மீராவிற்கு.

திரும்பி வருகையில் அந்த பெங்காளி ஓட்டுனருக்கு, மீராவிற்கு ஹிந்தி தெரியவில்லை என்று புரிந்துவிட, கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கலந்து ஏதேதோ பேசினான். கொஞ்சம் ஆறுதலும் சொன்னான். இங்கெல்லாம் இப்படித் தான் என்றான். அதிலும் கத்தாமா என்றாள் மதிக்கவே மாட்டார்கள் என்று வருந்தினான். கத்தாமாவாக பெண்கள் வரவே கூடாதென்றான். குவைத்தில் குடும்பப் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பணிப்பெண்ணாக வரும் கத்தாமா’க்களுக்கு இல்லை என்றான்.

கத்தாமா என்பதன் அர்த்தம் வேலைக்காரப் பெண் என்றாலும், சூழ்நிலை காரணமாக வந்துவிடுகின்ற நிறைய பெண்கள், நிறைய அரபியின் வீடுகளில், அடிமை என்றே கொள்ளப் படுவதை மீராவினால் தற்போது உணர முடிந்தது. அதிலும், தெருவில் இறங்கி கடக்கையில் எங்கேனும் வெளியில் செல்கையில் கூட இதே நைட்டியிலேயே போவதற்கு மீரா மிக நாணித் தான் போனாள். தெருவில் ஆங்காங்கே நிற்கும் பிற நாட்டவரும், பிற மாநிலத்தவரும் மீராவை பார்க்கையில் ஆங்.. கத்தாமா தானே என்று ‘தன் மனைவியை பார்ப்பது போல, மார்பை தனியாகவும், மேலிருந்துக் கீழாகவும் கொச்சையாக பார்ப்பது உடலில் நெருப்பை வைப்பது போலிருந்தது.

யார் கண்ணை பிடுங்கி எங்கே போட்டுவிட இயலும், எல்லாம் தலைவிதி என நொந்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் வந்தாள். மூன்றாயிரத்திற்கே வக்கில்லாத நாய்க்கு பதினைந்தாயிரம் தேவையா??? நொந்து தனக்குள்ளே குமுறிப் போனாள். வீடு வர வர தடக் தடக்கென்றிருந்தது. கடனாக வாங்கியிருந்த நாற்பதனாயிரம் ரூபாய் பணமும் எமன் போல வந்து எதிரே நின்றது.

வீடு வர, மலைத்து போய் இறங்கினாள் மீரா. வீட்டிற்குள் வந்ததுமே நிறைய வேலைகள் அவளுக்கென காத்திருந்தன. ஆளாளுக்கு புது ஆள் வேறு என்பதால், இதை எடு, அதை செய், அங்கே போ, இங்கே வாவென ஓடியாடி களைத்துபோய் அப்பாடா என வந்து இருக்கையில் அமர மணி பன்னிரெண்டாயிருந்தது. நாயடித்துப் போட்டது போன்ற அசதியிலானாள் மீரா.

எப்போது யார் வந்து நிர்ப்பார்களோ, யார் வந்து எங்கு கை வைப்பார்களோ என்ற பயம் வேறு ஒரு புறமிருக்க, ஒரு இரவு ஒரு பகல் மட்டுமே கடந்திருப்பதை உணர்கிறாள் மீரா. இன்னும் இரண்டு வருடம்!!!! நினைக்கவே பயமாக இருந்தது. ஊரிலிருந்து வந்து எத்தனையோ வருடங்கள் கழிந்து விட்டதை போல் மனம் கனத்தது அவளுக்கு. இடையே திடீரென நினைவுகளில் வெட்டிய ஒன்றாக குழந்தைகளின் நினைவு வர, ஐயோ கடவுளே, என் பிள்ளைகள் எங்கிருக்கோ என்ன செய்கிறார்களோ.. என்றெண்ணி அவர்களின் புகைப்படத்தை பார்க்க எடுக்க, முன்பே உறங்க வந்த ஒருத்தி எழுந்து விளக்கை அணைத்துவிட்டாள்.

ஒன்றும் பேச வழியில்லாமல் வாயில் துணி பொத்தி, வந்த அழையை அடக்க, இன்னொருத்தி எழுந்து விளக்க்கிட்டுவிட்டு, போ.., போயி குளித்துவிட்டு வா, அதுவரை விளக்கெரியும், சீக்கிரம் போ என்று சொல்ல. எழுந்து துணிகளுக்கிடையே குழந்தைகளின் படத்தையும் மறைத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடிவந்து நின்று, கதவை அடைக்கையில் மனது உடைத்துக் கொண்டு வர ஓ….வென கத்தி அழுதாள். குழந்தைகளின் முகம் பார்த்து பார்த்து அழுதாள். சற்று நேரம் பார்த்துவிட்டு, அறையில் விளக்குகள் அணைக்கப் பட்டன. வாசலில் ஒரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

பயமும் கவலையும் கண்ணீருமாய் இறைவா…’யென வாய்பொத்தி நிற்கிறாள் மீரா. அந்த அரபி முதிர், அகமத் அவளின் அறைக்கு சென்று அவளை எங்கே என்று கேட்கிறான். அவர்கள் ஏதோ சொல்ல, குளியலறை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறான். மீரா இனி இழக்கப் போகும் மானத்தை; இழுத்து இழுத்து மூடிக் கொண்டு, கண்ணீரில் மறைந்த குளியலின் சப்தமாக நின்றிருந்தாள்.

———————*——————————*———————

கதை அன்றே முடிந்து தான் போயின. நாட்கள் வாரங்கள் வருடங்களென காலம் வெகு தூரம் வரை கடக்கிறது. வருடங்கள் பல கடந்த பின், ஊருக்கு வருகிறாள் மீரா. ஊரில் சில நாட்கள் மட்டும் தனக்கான நாட்களை குழந்தைகளோடு வாழ்ந்து விட்டு மீண்டும் புறப்பட்டு விதியின் பயணமாக குவைத் வருகிறாள்.

ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் குவைத் போகும் கத்தாமா’வாகிய, மீராவின் கண்களை சுற்றி பூத்திருந்த கரு வலயத்தின் காரணத்தை, காலம் தன் சதியால் மறைத்துக் கொண்டுதான் விட்டது. ஊரில், தன் பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்களென்னும், ஒற்றை நம்பிக்கையை மட்டும் உயிராய் வைத்துக் கொண்டு.. விமான நிலையம் கடந்து வெளியே வர, அந்த அரபி முதிர், அகமதின் ஓட்டுனர் ஒருவன், மீராவை அழைத்துப் போக வாசலில் காத்துக் கிடந்தான்.

அவள் வந்ததும் வண்டி புறப்பட, காலம்; நிறைய பேரின் பின்னே, ஒருதலைபட்சமாக ‘ஒரு சோகமான கதையை வைத்துக் கொண்டு வண்டியை துரத்தியவாறு ஓடியது. மீராவின் கண்களில் வெறுமையை தவிர வேறொன்றுமே இல்லாதவளாய் கண்களை மட்டும் ஆழ்ந்து மூடிக் கொண்டாள்.

———————————————————————————————————————————————————
முற்றும்

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

55 Responses to ‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!

  1. மனோஜ் சொல்கிறார்:

    இதயம் கனக்க வைத்த கதை…..
    மீராவின் பாத்திரம் கல்லையும் கரைக்கிறது….
    விதவை பெண்களின் அவதியை….அதிலும் இளம் விதவையின் கொடுமையை சித்தரித்த விதம் நெஞ்சை தொடுகிறது…
    வெளிநாட்டு மோகம் ஒழிய வேண்டும்….வெறும் பணத்திற்காக இருந்தால்….
    “கண்களில் ஈரம்”, “கனத்த இதயம்”, “கத்தாமா வாழ்கை”…..
    அருமையான கதை….வாழ்த்துக்கள் தோழரே….
    தங்கள் படைப்பிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்…..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மனோஜ்,இத்தனை பெரிதாக இருக்கிறதே, யார் படிப்பார்களோ என்றுகூட நினைத்தேன். ஆனால், இதை விட சிறிதாக அடக்க முடியாத பெரும் சோகம் அவர்களின் கதை. தினமும் வேலையில் இருந்து வீடு வரும் பொது சாரைசாரையாய் வேலைக்காக இந்தியா, இந்தோனேசியா, நேபால், பிலிப்பின்ஸ் என பல நாடுகளிலிருந்து வந்து குவியும் பெண்கள் வெகுவாக கூடுகின்றனர். அவர்களின் முகத்தில் அப்பட்டமாக அப்பிக் கிடக்கும் வலிகளை காண்கையில் எப்படி எப்படியெல்லாம் வலிக்க வாழ்கிறார்களோ என்று நினைத்துக் கொள்வேன்.

      அவர்களின் நிலையை இங்கு எட்டு வருடமாக இருப்பவன் என்பதால் யூகிக்க முடியும். தவிர நண்பர்கள் சொல்லியும், அப்படி சிலர் அடைபட்டு எங்கேனும்சந்திக்கையில் பேசியும் நிறைய கேட்கிறோம். அங்ஙனம் நேற்று வீட்டின் இரண்டு கட்டிடம் தள்ளி நடந்து வருகையில், ஒரு சகோதரியின் முகமும்,அந்த நைட்டியும் என்னை கலங்கடித்தது. நம் சகோதரியோ அல்லது நம் வீட்டுப் பெண்களோ இப்படி போக அனுமதிக்குமா மனசு என்றெல்லாம் வந்த வருத்தத்தில், வரும் போதே ரிசப்சனில் அமர்ந்து எழுதி, பிறகு நேற்றிலிருந்து பட்டை தீட்டி, இன்றே தட்டச்சு முடிந்து பதிந்த சூடான கதை இது மனோஜ்.

      வலிகள் கலந்தது தான் வாழ்க்கை,வலியே வாழ்க்கையாக அமைந்து இப்படி ஏதேனும் ஒரு சகோதரி இக்குவைத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு இக்கதை சமர்ப்பனமாகட்டும்!!

      Like

      • மனோஜ் சொல்கிறார்:

        அப்பெண்கள் வாழ்க்கைக்கு என் கண்ணீரை சமர்பிக்கிறேன்…..
        நீங்கள் அந்த உணர்வை எழுதிய விதம் அருமை….
        மேலும் வளர வாழ்த்துக்கள்…

        Like

      • வித்யாசாகர் சொல்கிறார்:

        மிக்க நன்றி மனோஜ், உணர்வுகளுக்கு அதிர்வுண்டு. அதிர்வுகளுக்கு ஒரு சக்தி உண்டு. மனோசக்தி. எல்ல்லோரும் ஒன்றாக அவர்களுக்காய், அவர்களின் நலத்திற்காய் வேண்டிக் கொள்வோம்!

        Like

      • M.B.OLI MOHAMED சொல்கிறார்:

        I Feel very much Mr.Vidya

        Like

      • வித்யாசாகர் சொல்கிறார்:

        தங்களின் கருத்திற்கு மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும். இது கதைக்காய் எழுதியதல்ல; வலியை கதையாக்கியது!

        Like

  2. vetha langathilakam. சொல்கிறார்:

    மனம் சோர்கிறது கதையை வாசிக்க. ஆண்களின் இறைச்சித்தனம் தான் காரணம். நான் கதைகள் வாசிப்பது குறைவு. நிர்ப்பந்தத்தில் தான் வாசித்தேன். வாழ்த்துக்கள். முன்பு எக்கச்சக்கமாக கதைகள் வாசித்தேன். இப்போது சுவை மாறிவிட்டது. கவிதை, கட்டுரைகள் தான் பிடிக்கும். மெயிலிற்கு நன்றி.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிமா. பொதுவாக ‘இறைச்சி தனம்’ என்றும் சொல்லலாம். இங்கு ஒரே வீட்டிலிருந்து ஒன்பது பெண்கள் சேர்ந்து ஒரு ஆண் ஓட்டுனரை ஆளாளுக்கு இணங்க சொல்லி அவர் முடியாமல் ஓடிவந்து நாங்கள் பணம் சேகரித்து ஊருக்கனுப்பிய கதை எல்லாம் கூட உண்டு. தவறுகள் நிகழ்கிறது. தவறினை யார் செய்தாலும் தவறென்ற கோட்பாட்டினை மட்டும் கொள்வோம். ஒருசாராரை பற்றிய குற்ற சாட்டல்ல இது. சுத்தி பார்வையை செலுத்தினால் கண்ணில் படுபவர்களை காட்டிக் கொடுக்க எழுதுகோல் அஞ்சி சிலரை மறைத்துக் கொண்டதில் ஆண்கள் வில்லனான கதை இது அவ்வளவு தான். இந்த கதை அப்படி ஒருபாத்திரத்தை கொண்டுள்ளது அவ்வளவு தான், இன்னும் எழுதாத கதைகள் நிறைய உள்ளது.

      எப்படியோ நீங்கள் கதைகள் நிறைய படிப்பீர்களோ என்றோ, அல்லது இந்த ஒரு நிகழ்வினை தங்களுக்கு அறிவிக்கவோ நினைத்தேன். இனி கவிதைகள் கட்டுரைகள் போடுகையில் தெரியப் படுத்துகிறேன்மா. மிக்க நன்றி!

      Like

  3. krpsenthil சொல்கிறார்:

    இது உண்மைக்கதை என்று தெரிகிறது.. நான் அமீரக நண்பர்கள் வழியாகவும் இத்தகைய கதைகளை கேட்டிருக்கிறேன்.. மனசு விட்டுப் போய்விடுகிறது..
    எத்தனை பெண்கள்.. எவ்வளவு கொடுமைகள்… பிள்ளைகளுக்காக பழகிக் கொள்கிறார்கள்.. இதற்கு மேல் எழுத முடியவில்லை..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் செந்தில், இது ஒரு வலி தான். நிறைய பேரை பார்த்ததில்,உள் வாங்கியதில் எழுதியது. கண்டிப்பா வேறு நாடுகளில் இப்படி இருப்பார்களோ என்னவோ ஆனால் அரபு நாடுகளில் நிறைய பேர் இருக்கிறார்கள். பெண் என்றில்லை, ஆண் ஓட்டுனரில் கூட அவதியுறுவோர் ஏராளாம். அவர்களுக்கெல்லாம் விடிவு என்பது வெளிநாட்டு மோகம் ஒழிப்பதன்றி வேறில்லை.

      நல்ல வேளைகளில் வந்து நன்றாக இருப்பவர்களும், அதே அரபி வீடுகளில் மிக நல்ல முறையில் ஒரு உறவு போல, வீட்டில் ஒருவராக இருப்பவர்களும் உண்டு. குவைத்தியில் மிக நல்ல மனிதர்களும் உண்டு. அவர்கள் இதுபோல அழகான பெண்களை தேடுவதில்லை. சில வீடுகளில் பெரியவர்கள் சரியென்றாலும் பிள்ளைகள் தவறாக இருப்பதும் ஒரு கொடுமை தான். யார் சரியில்லை என்றாலும் ‘அம்மிக்கு நான்கு பக்கம் அடி என்பது போல’ மொத்தத்தில் பாதிப்பவர்கள் இந்த கத்தாமாக்களே!!

      Like

  4. நடராஜன் சொல்கிறார்:

    வித்யா!

    கத்தாமா கதையை
    மையில் எழுதினீர்களா?
    கண்ணீரில் எழுதினீர்களா?
    உள்ளம் ஒரே இடத்தில்
    உட்கார்ந்து அழுகிறது!
    இந்த வேதனைகள் குறைய
    இறைவன் அருள்புரியட்டும்!
    வெல்க உங்கள் விரல்கள்!

    -நட்புடன் நடராஜன்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உண்மை தான் தோழர். மேலே வீட்டிற்கு வந்தால் சிந்தனை களையுமே என கதையை வரவேற்பரையில் அமர்ந்து எழுதினேன். எழுதி முடிக்கையில் எனக்கே மனம் கனத்து தலைவலியே வந்தது. அவர்களின் நிலையை பிறர் அறியா விட்டாலும் இங்குள்ளவர்கள அறிதலில் அவர்களுக்கான ஒரு ஆறுதலான பார்வை ஏற்படாதா என்றும், இனி இப்படி ஒரு மோகம் கொண்டுவரும் பெண்களுக்கும் இந்த கதை ஒரு பாடமாக இருக்கட்டுமே என்றும் எழுதிய கதை. கதையில் கண்ணீரே எழுத்தானது உண்மையே தோழர்!

      Like

  5. vetha langathilakam. சொல்கிறார்:

    இங்கு தனக்கு ஒரு குடும்பத்தை நிர்வகிக்க பொருளாதாரம் சரி, தன்னால் முடியும் என்றால் தான் வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ ஆரம்பிக்கிறார்கள் , இங்கு நான் குறிப்பிடுவது வெள்ளையரை. நாமும் அந்த சிந்தனை ஓட்டத்தை எமக்குள் திடப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும். வாழ வழியின்றித் தானே கத்தாமாவாகப புறப்பட்டாள் மீரா?

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; அந்நிலையை அகற்றுவோம், நல் சிந்தனைகளை வளர்ப்போம், எல்லாமே ‘நாமாக சேர்ந்த சமுகத்தின் கையில் தான் அனைத்துமே உள்ளது. நாம் புரிதலை ஏற்படுத்திக் கொண்டால், நாம் மாற்றாத்தை ஏற்படுத்தி நல்லதொரு சமுகத்தை ஏற்படுத்த துணிந்தால் எல்லாம் படி படியாக நாளடைய்வில் மாறும்’ என்று சொல்லவே, ஒரு வலியை உதாரணமாக காட்டவே இப்பதிவு!

      Like

  6. சரோ சொல்கிறார்:

    என்ன சொல்வது …..இதயத்தில் இரத்தம் கசிகிறது…துடைக்க கூட மனமில்லை.இப்படியும் ஓர் ஊர் இருக்கிறதா? இதுமட்டுமா? தமிழன் எங்கு போனாலும் இப்படிதான் வாழ்வு கெட்டு துடிக்கிறான்.வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடாம் ஆனால் அவன் சென்ற பாதையெல்லாம் செருப்பைவிடக் கேவலமாக நடத்தப் படுகிறான்….ம்ம்ம்ம் என்ன செய்வது வாங்கி வந்த வரம் அப்படி போழும்….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆதிக்கத் தலையில் இன்னும் அரபி எனும் ஒரு ஒற்றை கொம்பு முளைத்துவிட்டதிங்கே அவ்வளவுதான். மற்றபடி மேலாதிகம் தலை தூக்கிய நிறைய இடங்களில் இதுபோன்ற கொடுமைகள் மறைமுகமாக வெளியில் தெரியாமல் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

      ஒரு காலம் உண்டு. ஒரு பதின்மூன்று வருடங்களுக்கு முன் முதல் முதலாக இந்த அரபு நாடுகளுக்கு வந்த காலம், ஓமானிய தேசத்தில், இவர்களின் மொழியோ உணர்வோ புரியாமல் ஏதோ கத்துகிறார்கள் என்பதை மட்டும் மனதில் நினைத்து நடுங்கிய நடுக்கம்; இருபத்தோரு வயதில் பதிந்த பதிவு; எட்டு வருடத்திற்கு முன் குவைத்திற்கு முதன் முதலாக வந்த போது இமிக்ரேசனில் ஒரு அதிகாரி பெண்களை குறிப்பாக ஏழ்மை தோற்றத்தோடு வரும் கத்தாமாக்களை போ.. போ.. என்று விரட்டியதும் மனதில் வடுக்களாகவே உள்ளது சரோ. அவைகளின் ஒரு மொத்த வடிவம் இது.

      மொத்தத்தில் சுதந்திரம் என்றால் என்ன, என்பதை இப்படி கூனி குறுகி போகையில் மனது உணராமல் இல்லை சரோ..

      Like

  7. சரோ சொல்கிறார்:

    “மீராவைப் போல் இன்னும் எத்தனையோ வீராக்களும் மலேசியாவிற்கு பல வண்ணக் கனவுகளுடன் வருகிறார்கள்..

    ஆனால் நம்பி வந்த இனத்திடமே அவர்கள் அல்லல் படும் கொடுமையை யாரிடம் சொல்வது. தமிழனுக்குத் தமிழனே அடிமைகளாகித் தவிப்பதை தமிழ்நாட்டிலிருந்து உணவகங்களில் பணிபுரியும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களிடம் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும். தமிழர்கள் மொழியால் தான் ஒன்று பட்டுள்ளார்களே தவிர இன்னும் மனத்தால் அல்ல என்பது தான் உன்மை…

    இவர்களைத் திருத்த இன்னும் எத்தனைப் பெரியார்கள் தோன்ற வேண்டுமோ…?

    வாழ்த்துக்கள் வித்யா…கதைச் சிறப்பு!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பார்த்திருக்கிறேன் சரோஜினி. மலேசியாவில் ஒரு பழைய பாத்திரத்தில் மழைதண்ணி பிடித்து குடிக்கும் ஒரு வயோதிக தமிழர்கள் மனதை கிள்ளி எரிந்து போன நாட்களும் உண்டு. எங்கெங்கோ என்றோ கண்ட சிறு சிறு நிகழ்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வலித்த தடம் தான் இந்த ஒற்றை கத்தாமா.. கதை!

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரோஜினி!

      Like

  8. Ratha சொல்கிறார்:

    பத்திரிகைகளில் படித்துள்ளேன் பணிப்பெண்களாக
    செல்வோர் படும் கொடுமைகளை…நீங்கள் நேரிலேயே கண்டுள்ளீர்கள்..வலிக்கின்றது..
    பெண்களின் ஆற்றாமை , பொருளாதார சிக்கல், உயர்ந்துகொண்டே செல்லும் வாழ்க்கை செலவு., முதுமை கால பயம்..எல்லாம் காரணிகள்..
    சிறு கதையை பாராட்ட மனமில்லை..எதற்குமே தீர்வு காண முடியாத தேசம்., இதற்கா கண்டுவிடப் போகிறது…??

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம், ராதா. தெளிவான சிந்தனை. தேசம் செய்ய இயலாது கூட என்று எண்ணுகிறேன் ராதா. நாமாக சிந்தித்து நம்மை சற்று வளப் படுத்திக் கொள்ளளாம், நாளடைவில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம், அப்போது தேசத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.

      தேசத்திற்கே போதிக்க நிறைய பாடமிருக்க தேசம் நமக்கெங்கே செய்யும் ராதா? நாம் தான் நம்மை, நம்மோடுள்ளவர்களை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ளல் வேண்டும் போல்!! செம்மை படுத்திக் கொள்ள வேண்டும், பிரர்கருதியும் சிந்திக்க வேண்டும்.

      என்னிடம் நிறைய சகோதரிகள் இங்கு வர கேட்பார்கள், வேலை பாருங்கள் என்று சொவார்கள். ஒருவேளை என் மீது அவர்களுக்கு கோபம் கூட இருக்கும். ஆனால் நான் அவர்களுக்கு அங்கேயே வேலைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். இங்கு வந்தால் இப்படி சில அபாயங்கள் நேரலாமென சொல்லி கொடுத்துள்ளேன். அப்படி ஒரு புரிதலை ஏற்படுத்தி நம்மால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்ய முற்படுகையில் மாற்றம் நாளடைவில் ஏற்பட மாற்றம் உள்ளது ராதா!

      Like

  9. சமீரா பேகம் சொல்கிறார்:

    நல்ல கதை. ஆனால் இது உண்மையா..???

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நடக்கும் மற்றும் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதிய கற்பனை பாத்திரம் மீரா.

      மீராவிற்கு நடக்கும் கொடுமைகள் போல், சில அரபு நாடுகளில், சில அரபியின் வீடுகளில் வேலை செய்யும், சில வேலையாட்களுக்கு நடப்பது மிக்க உண்மை சமீரா பேகம்!!

      Like

  10. தெம்மாங்கு தென்றல் செந்தில்குமார் சொல்கிறார்:

    அய்யா வணக்கம் தாங்களின் இந்த எழுத்துப் பயனம் இன்னும் வெகுதூரம் தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்……….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு வணக்கம் பெரு நட்பிற்குரிய செந்தில். எப்படி, உங்களின் இனிய குரல்வளம் போல, தெம்மாங்கு பாட்டுக்களை போல வளம் பெற வேண்டும் என்கிறீர்களா? மிக்க நன்றி செந்தில். உங்களின் இசை பயணமும் மிக்கதொரு நன்மதிப்பை பெறட்டும். இசை வானில் போற்றதொரு நட்சத்திரமாய் மின்ன என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!

      Like

  11. Shanthy சொல்கிறார்:

    ‘கத்தாமா’ ஒரு பெண்ணினின் கதை, வாசித்தேன்.

    மிகவும் நன்றாக இருந்தது. //அருகில் இருக்கும் போது
    அம்மா அப்பா கூட பெரிதாக தெரிவதில்லை. ஆனால்,
    தூர இடம் இருக்கும் போது பக்கத்து வீட்டுகாரர் கூட
    கண்ணீருக்கு காரணம் ஆகிவிடுவார்கள்// இதை வாசிக்கும்
    போது உண்மையாகவே என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
    உண்மை தான், அதை அனுபவிப்பவர்களுக்த் தான் அதன் வலி
    புரியும்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் சாந்தி, தாயை பிரிவது, பிள்ளைகளை பிரிவது போல, நாட்டை பிரிவது பெரும் வலி என்றே சொல்லலாம்.

      என் “பிரிவுக்குப் பின்” எனும் கவிதை தொகுப்பின் ஒரு கவிதையில், ‘நான் விட்டுவந்த மரம் கூட, என் நினைவில் வந்து வாட்டிடுதே’ என்பது போல் ஒரு வரி அமைத்திருப்பேன். காரணம் குழாயடியிலிருந்து மரத்தடி வரை, மாடியில் மல்லாந்து படுத்து வானில் எண்ணிய நட்சதிரம் வரை, சில்லென்று வீசிய அந்த காற்று வரை எண்ணி எண்ணி நான் வருந்தியதுண்டு. அந்த வருத்தம் கூடுதலாக ஊரில் இருந்து வந்த முதல் ஓரிரு வாரத்தில் பொதுவாக எல்லோருக்குமே அதிகம் இருக்கும் என்பதாலும், மீரா முதல் முதலாக வீட்டை, ஊரினை, விட்டு வந்தவள் என்பதால் அதை மேற்கோளிட்டு காட்டி எழுதி இருந்தேன் சாந்தி. மிக்க நன்றி!

      Like

  12. thamilarasi சொல்கிறார்:

    இக் கதைஜில் ஒவ்வொரு வரிகளும் நீங்களே அக்கொடுமைகளை
    அனுபவித்தது போன்று எழுதிஜிருக்கிங்க.ரொம்ப நல்ல இருக்கு ஒரு அவலை
    பெண்ணின் நிலைஜை அழகாக சித்தரித்து இருக்கிங்க.இன்றும் எத்தனைஜோ பெண்களின்
    கண்ணீருக்கு அர்த்தமே தெரியாமல் சுழன்று கொன்று இருக்கின்றது இப்பூமி.அதில் உங்க கதையும்
    நல்லதொரு எடுத்துக்காட்டு.மேலும் உங்க எழுத்து திறன் வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள் நண்பா

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்கதொரு நன்றி தமிழ். கதை சொல்லியாக பயணிக்கையில் வலிகள் கொண்டு செல்லப் படுகின்றன. உண்மையிலேயே இங்கு சில நிகழ்வுகளை கண்டு மனம் நொந்ததுண்டு. என் நண்பரின் உறவுக்காரர் ஒருவர் அங்ஙனம் வெகுவாக அவதியுறுவதாகவும், அவர் என்னிடம் சற்று ஆறுதலாய் அவருக்கு பேசுங்கள் என்றும் சொன்னார். அவர் அவ்வீட்டில் மகிழ்வூந்து (கார்) ஓட்டுனராக பணி செய்கிறாராம். நானும் அவரை அழைத்து பேசினேன், ஆறுதல் அடைந்ததை போல் உணர்ந்தேன், தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டேன், காலையில் நாலு மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும் நிறைய கார் கழுவ இருக்கிறது, முடியாது என்று சொன்னாலும் அரபி அடிப்பான், என்றெல்லாம் பேசும்போதே.., அண்ணா annaa அவன் அரபி வரான், பிறகு பேசுகிறேன் என்று வைத்துவிட்டார்.

      நான் சில மணித்துளிகள் ஒன்றும் செய்ய இயலாதவனாக அமர்ந்துக் கொண்டேன். அவர் குவைத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ளார். நான் எங்கோ இருக்கிறேன். இருப்பினும் எல்லோருமே அக்ரீமென்டிற்கு உட்பட்டவர்கள். யாரை யார் சென்று கேட்டிடவும் அத்தனை உரிமையோ சம்மதமோ இல்லை. வேறென்ன செய்வது. இது போல் யாருக்கும் நிகழ வேண்டாம் இறைவா என்று வேண்டிக் கொண்டேன். மீண்டும் அழைக்க வேண்டும். யாரேனும் நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் பார்க்கவேண்டும்.

      இதுபோல் நிறைய கதைகள் இங்கு உண்டு தமிழ். நாங்களெல்லாம் மிக நல்ல சுதந்திரமாக இருப்பதும், நலமாக வாழ்வதுமே கூட எண்ணி எனக்கு உறுத்தும். ஆனால் இது பதினெட்டு வருட உழைப்பின் பயன் என்பது வேறு.

      என்னை கேட்டால், நிறுவனம் அல்லாது வீட்டில் வேலை செய்ய எனும் பட்சத்தில், அதுபோல் எல்லாம் அவசரப் பட்டோ அல்லது தீர விசாரிக்காமலோ வருவதை தவிர்க்கலாம் தமிழ்!

      Like

  13. ruby சொல்கிறார்:

    கத்தமாவை போல் இன்னும் எத்தனை பெண்கள் எந்த உலகில் உள்ளார்களோ ////////// உருக்கமான கதை ……

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் ரூபி, இது ஒரு பார்வை. அவ்வளவு தான். உலகெங்கிலும் உணவிற்கும் உடைக்கும் உறவு காக்கும் பொருட்டும், பெண்மை காக்கும் போருட்டுமாய் பெண்கள் உறும் அவதிகள் ஏராளம். அதுபோன்ற வெளியில் தெரியாத கொடுமைகளை ஒரு கற்பனை போக்கிலாவது காட்டி அவர்களுக்கான இரக்கத்தை மிச்சமாக்கி மனிதம் சுரக்கச் செய்யும் ஒரு முயலவே இதுபோன்ற கதைகள். மிக்க நன்றி ரூபி..

      Like

  14. வித்யாசாகர் சொல்கிறார்:

    வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

    வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!

    நன்றி விருதை பாரி மற்றும் வினவு.

    Like

  15. MAHALAKSHMI சொல்கிறார்:

    வெளிநாடுகளுக்கு போற பெண்கள் இப்படியும் கஷ்டப்படுறாங்க என்பதை இந்த கதை படித்த பிறகு தன புரிந்து கொண்டேன். மனசு கஷ்டபடுகிறது….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம்மா, வெளிநாடுகளில் வேலைக்கென்று வரும் பெண்களின் துயரமிது. அதிலும் குறிப்பாக வீட்டு வேலைக்குவரும் பெண்களின் துயரம். யாரும் தன் ஏழ்மையின் காரணமாகக் கொண்டு வந்து இப்படி அவதிப் பட்டுவிடக் கூடாதேயென்று சற்றுக் கூடுதல் வலியோடு எழுதப் பட்டுள்ளது.

      சமிபத்தில் கூட முன்புனம் கதையை படித்திருந்த மனோஜ் எனும் சகோதரர் மீண்டும் தற்காலிகமாக ஓர்நாள் அழைத்து உங்கள் கதை போலவே ஒரு பெண்ணிற்கு நிகழ்ந்துள்ளதேன்று செய்தியில் கண்டேன் என்றார். அவர்களுக்கெல்லாம் விடிவு யார் யார் கையில் இருக்கிறதோ….

      இறைவனே துணை என்று சொல்வதை விடவோ வேண்டுவதை விடவோ வேறு யாரை குற்றம் சொல்லியோ வேண்டியோ நிற்பேனோ!!!!!!!!!!!

      Like

  16. MAHALAKSHMI சொல்கிறார்:

    உங்கள் படைப்புகளை வரவேற்கிறேன்…….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தங்களின் வரவேற்பில், இலக்கிய பதிவான கத்தாமாக்களின் கண்ணீர்; வாழ்வு நிலையிலிருந்து அகன்று நிற்க எண்ணுவோம்! அங்ஙனமே ஆளுமை செலுத்துவோம்.

      மிக்க நன்றி சகோதரி!!

      Like

  17. MAHALAKSHMI சொல்கிறார்:

    உங்கள் அடுத்த படைப்பை தெரியபடுத்தவும் சகோதரரே…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிமா.., அடுத்து “அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்” முழுக்க முழுக்க காதல் கவிதை தொகுதி.

      “விடுதலையின் சப்தம்” முழுக்க முழுக்க ஈழக் கவிதைகள் மட்டுமே நிறைந்த தொகுப்பு

      “வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை” தெருவில் நம் கண்முன்னே கடந்து போகும் பார்வையிழந்தோர், விதவை, குழந்தையர்றோர், பிச்சைக்காரன், மனைவியிழந்தோரென அனைவரின் வலிகளை மட்டுமே பதிவு செய்துள்ள கவிதை தொகுப்பு.

      “கண்ணடிக்கும் கைதட்டும் ஆனால் கவிதையல்ல” பழைய கவிதைகளின் தொகுப்பு.

      “Dream Cradle ” என கனவு தொட்டிலிலிருந்து மொழிபெயர்க்கப் பட்ட ஆங்கில நாவலென ஐந்து படைப்பும் ஒன்றாக இம்மாதக் கடைசியில் வெளிவர இருக்கிறது.

      Like

  18. MAHALAKSHMI சொல்கிறார்:

    தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரரே..

    Like

  19. ranimohan சொல்கிறார்:

    இது கதையல்ல இங்கு கத்தமாக்கலாக
    இருக்கும் பெண்களின் மாற்றி அமைக்க பட்ட
    விதி தான்!
    விதியை மாற்ற யாராலும் முடியாது என்று யார் சொன்னது …..
    தாய் நாடு விட்டு,வெளிநாடு வரும் பல பெண்களின் விதியை
    வெகு எளிதில் மாற்றிகொண்டிருகிறது அவரவரின் பரிதாபத்திற்குரிய
    சூழ்நிலைகள்!
    இதை படித்த பிறகாவது பெண்களின் இந்த பரிதாபத்திற்குரிய சூழ்நிலைக்கு
    காரணமானவர்கள் திருந்த வேண்டும்.(எழுத்து வடிவம் அருமை)

    தமிழ்நிலா .

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      சரியாக சொன்னீர்கள் நிலா..

      தெருவோரம் இச் சகோதரிகள் நம்மை கடந்து போகையில் பரிதாபம் எஞ்சி நிற்க, தவிர்க்கமுடியாமல் பார்த்து, வெளியில் தெரியாமல் இப்படி அவதியுறும் பல பெண்களின் வலியை; அவர்களின் முகத்தில் படித்த வலியைத் தான் இங்கே கதையாக்க முயன்றேன்..

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!!

      Like

  20. ranimohan சொல்கிறார்:

    இது கதையல்ல இங்கு கத்தமாக்களாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் மாற்றி அமைக்க பட்ட
    தவறான விதி தான் இது.

    விதியை மாற்ற யாராலும் முடியாது என்று யார் சொன்னது? தாய் நாடு விட்டு, வெளிநாடு வரும் பல பெண்களின் விதியை
    வெகு எளிதில் இங்கு மாற்றிவிடுகிறது அவரவரின் பரிதாபத்திற்குரிய அவர் சூழ்நிலைகள்!

    இதை படித்த பிறகாவது பெண்களின் இந்த பரிதாபத்திற்குரிய சூழ்நிலைக்கு காரணமானவர்கள் திருந்த வேண்டும்..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தோழி,

      ஆம்; கத்தாமாக்களாக வரும் இங்கு வரும் நம் பெண்களை நிறுத்திவிடும், நிறுத்தி அவர்களின் வறுமையை போக்கி விடும் பணக்கார தேசமோ, அதற்கு மாற்று வழி தேடும் அரசோ நம்மிடம் இல்லை. எனவே, வறுமையில் நொந்து வரும் அப்பெண்களின் உணர்வரிந்து நடந்து கொள்ள நாம் தான் நம்மை பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்..

      மிக்க நன்றி.. ராணிமோகன்.. அவர்களே!

      Like

  21. alex_raju சொல்கிறார்:

    மேலும் ஒரு அவர்களின் சோகம் என்னவெனில் நீங்கள்கூறிய அந்த அரபிக்காரனின் பார்வையைப்போன்றே அவளின் சொந்த ஊர்காரர்களின் பார்வையும் இருப்பது…

    தங்கள் படைப்பிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்…..

    Like

  22. pattukkottai sathya சொல்கிறார்:

    Ayya vanakkam! vaazhkkaiyin nitharsanatthai pirathipalikkaatha ilakkiyap padaippu ethuvum ilakkiyamaakak karuthappaduvathillai! Oru sirantha ilakkiyamaanathu sirukathai vadivil eppadi irukka vendumoa atthakaiya ilakkanatthudan thankalathu intha “Gaddhama” Sirukathai amainthullathu! naanum kuwaithil vaazhkiravan enbathaal inkulla veettu panipenkal etthakaiya thuyarankalukku aalaakindranar enbathu nanku theriyum! Ada antha kuwaitikalai vidunkal! Nammavarkal athuvum thamizharkal silare appenkalai paaliyal bimbankalaai mattum paarpathuthaan ennai poandra samooga nalan virumbikalaiyum kavalai kolla seikirathu! thankalathu intha sirantha padaippai padikka nernthu athan thaakkathil avarkalil silarathu manam maari nalvazhiyil nadanthaal athuve ikkathaikkaana vegumathiyaakak kollalaam! paraattukkal palakodi!- Neghizhchchiyudan Pattukkottai sathya

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சத்யா, தங்களின் கருத்திற்கும், நம் எழுத்து மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும், பற்றிற்கும்!

      நீங்கள் சொல்வதும் ஒருபக்க சரிதான். அவர்களின் கண்களை பிடுங்கியெறிய சக்தியிலா கைகளுக்கு, அவர்களை எண்ணியும் அவர்களின் வாழ்வு நிலையை எண்ணியும் இரக்கப்படும் மனதின் அவஸ்த்தை மட்டும் எப்படியோ புரிந்தேத் தொலைக்கிறது. அவர்களையும் விட்டு விலகியே நிற்கிறேன், கட்தாமாவைப் பற்றி எழுத முடிந்தது; அவர்களைப் பற்றி அவர்களின் உடல்பசிக் கொடுமை பற்றி எழுத வேண்டும். எழுதியேனும்; கத்தாமாக்களின் வலியை அவர்களின் கண்களில் திணித்தேனும்; இவர்கள் நம் சகோதரிகளடா என்று புத்தியில் உரைக்க சம்மட்டியின்றி அடித்தேனும் சொல்லவேண்டும். கத்தாமாக்களை நம் வீட்டுப் பெண்களைப் போல் பார்க்க சொல்லித் தர வேண்டும். அப்படிப் பார்க்கும் ஆண்களுக்கு இதுபோன்ற படைப்புக்களை சமர்ப்பித்துத் தர வேண்டும்!!

      Like

  23. வணக்கம் உறவுகளே,

    கத்தாமா கதை சவுதியில் உள்ள ஒருவரால் புத்தகத்தில் பிரசுரிக்கப் பட்டு இப்போது திரைப்படமாக வந்துள்ளது. அதன் கதையும் நம் கதையும் ஒன்று என்றால்; யார் நம்புவர்? எப்படியோ, வேறு வேறாயினும் அவரே செய்திருப்பினும் கூட நம் சிந்தனை; நம் கதை வென்றது..

    http://en.wikipedia.org/wiki/Khaddama

    கதை சவுதியிலிருந்து வேறு ஒரு படைப்பாளியின் பெயரில் மலையாளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. 2010 – இல் அவர் எழுதியதாக. அப்போது தான் நாமும் எழுதினோம். பிப்ரவரியில் படம் வந்து எல்லோரையும் அழவைக்கிறதாம். சரியான ஓட்டமாம். உழைப்பு எழுத்தயினும் பிறரால் எடுத்துக் கொள்ளப் படுகிறதா? அல்லது ஒரே சிந்தனை ஒத்து நடைமுறை வாழ்க்கையினை இலக்கியத்தினாலும் வெல்கிறதாத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் கண்டு நகர்ந்துக் கொண்டிருக்கும் காலமே சாட்சி!! எனில், காலமே பதிலையும் தரவேண்டும்..

    Like

  24. சா. கி. சுப்ரமணியன். சொல்கிறார்:

    ‘கத்தாமா’ ஒரு பெண்ணினின் கதை, வாசித்தேன். நெஞ்சம் வலிக்கிறது.ஏன் மீராவை மறுபடியும் குவைத் செல்லவைத்தீர்கள் ?
    சா. கி. சுப்ரமணியன்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      கதை சிலநேரம் தனதான பாத்திரங்களை தனக்குத் தேவையானபடியே ஆட்டுவித்துக் கொள்கிறது ஐயா. அப்படிப் போனவர்களை மீரா அடையாளம் காட்டுபவளாகவும், வேண்டுமெனில் தடுத்து நிறுத்துபவளாகவுமேயிருப்பாள்..

      Like

  25. துளசி கோபால் சொல்கிறார்:

    நேற்றுதான் கத்தமா மலையாள படம்(காவ்யா மாதவன்) பார்த்தேன். உங்கள் ‘கதை’யும் நினைவுக்கு வந்து மனதை வாட்டியது:(

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றியும் வணக்கமும் ஐயா.. சிந்தனை பரவும் திக்கெட்டும் எழுத்து மானசீகமாய் வெல்லுமென்று நம்பி அத்தனையில் நிறைந்துப் போகிறேன். உங்களைப் போன்றோரின் அன்பும் வாழ்த்தும் உடன் பயணித்தலும் மேலும் நகர பலம் சேர்த்துவிடுகிறது..

      Like

  26. செந்தில்குமார் ராஜூ சொல்கிறார்:

    கத்தாமாக்களின் கண்ணீர் கதையை கத்தாமாவே எழுதியது போல் உள்ளது வலியை வாங்கி எழுதியுள்ளீர்கள்
    உங்கள் எழுத்து நடையும் என் வளைகுடா அனுபவமும் கதையின் தளத்திற்கே கொண்டு சென்றது நான் படித்தேன் என்று சொல்வதை விட காட்சிகளாகவே பார்த்தேன் என்றுதான் சொல்வேன் உங்கள் எழுத்து நடை அற்புதம் மேலும் வளைகுடாவில் பணிபுரிந்து கொண்டே கதையும் எழுதுவது எவ்வளவு கடினம் எனது தெரியும் இங்குள்ள பணிச்சுமைகளுக்கு இடையே எழுதுவது அத்தனை எளிதல்ல ஏனென்றால் ஒருவாரம் முன்பு முகநூலில் இந்த இணைய இணைப்பை பார்த்து விருப்ப பட்டியலில் சேர்த்து இன்றுதான் நேரம்கிடைத்தது படிக்க
    ஆனால் அன்றே படித்துவிட்டு வந்து பின்னூட்டம் இடுவதாக சொன்னேன் இயலவில்லை தாமதத்திற்கு வருந்துகிறேன் நல்ல கதை இதை விட ஆழமாக ஒரு பணிப்பெணின் அவலத்தை அவளே எழுதியது போல் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் அது எந்தளவு பாதித்துள்ளது என்பதை என் மனதின் கனம் உணர்த்துகிறது
    வாழ்த்துக்கள் உங்கள் எழுத்தாக்கம் மென்மேலும் மேன்மையடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
    எனக்கு பெரிதாக கதைகளை விமர்சிக்க தெரியாது பொதுவாக அருமை நல்லா இருக்கு என கடந்துவிடுவேன் ஆகையால் என் கருத்து கோர்வையாக இருக்க வாய்ப்பில்லை புரிந்துகொள்ளவும்
    நன்றி! வணக்கம்!
    வாழ்க தமிழ்!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்கள் அன்பிற்கு நன்றி.. நேரத்திற்கு நன்றி.. அழகுதமிழில் எழுதப்படும் அத்தனையும் இனிமை. அதற்கும் நன்றி.. இதைவிட வேறென்ன வேண்டும் மெத்த மகிழ்ந்தேன் திரு. செந்தில்குமார் ராசு..

      வாழ்க..

      Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி செந்தில். பிடித்ததைச் சொல்ல ஆடம்பர வார்த்தை அத்தனை பெரிதாக ஒன்றும் அவசியமில்லை. பிடித்திருக்கு என்றுச் சொன்னாலே போதும்.. மகிழ்ந்தேன்.. வாழ்க..

      Like

  27. ஸ்டான்லிராஜ் சத்தியநேசன் சொல்கிறார்:

    இதயம் வலிக்கிறது. அரபு நாடுகளில் நடக்கும் நிஜமான கதை

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி