ஒவ்வொரு முறை
கண்ணாடிக் குவளையில்
தண்ணீர் ஊற்றும் போதும் –
விஸ்கியின் சிவந்த நிறம்
குவளையிலிருந்து இதயம் வரை
நிரைகிறதாம்; நண்பன் சொன்னான்.
எனக்கு, எங்கோ யாரோ
சாப்பிடாமல் பட்டினியில் உயிர் விட்ட
ஒரு சோற்றுப் பொட்டலத்தின் விலை
பத்தோ இருபதோ –
நினைவிற்கு வந்தது!!
———————————————————-
























