5 உடைந்த கடவுள்!!

ரெல்லாம்
இருந்த குளங்கள்
பிளாட் போட்டு
விற்பனையாகி விட்டது;
 
ப்ளாட்டிற்குள்
ஸ்விமிங் புல்
கட்டியாகி விட்டது;
 
ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து
நினைத்துக் கொள்கிறோம் –
குளக் கரையின் சில்லென்ற காற்றை,
 
ஸ்விம்மிங் புல்
சிரித்துக் கொண்டது.
குளக்கரை நம் கைவிட்டு
எங்கோ போனது.
 
தோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை
வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம்
நாம் மட்டும்!
————————————————————
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 5 உடைந்த கடவுள்!!

  1. sivasankaran's avatar sivasankaran சொல்கிறார்:

    //ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து
    நினைத்துக் கொள்கிறோம் –
    குளக் கரையின் சில்லென்ற காற்றை//

    சில்லென்ற வார்த்தையில் செருகப்பட்ட கவிதை…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நடப்பதை எல்லாம் உடனுக்குடன் பார்க்க இயலாத தூரத்தில் உள்ளோம். பார்ப்பதை உடனே சூடாக சொல்லிடாத பதத்தில் உள்ளோம். சொன்னாலும் உதறிவிடுபவர்களில் காணாமல் போகிறோம். போகட்டுமென கடைசியாய், இயன்றதை மட்டுமே செய்கிறேன்.

      நன்றென்றதில் நன்றியுமானேன் ஐயா!

      Like

பின்னூட்டமொன்றை இடுக