13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ன் கைகடிகாரப் பட்டையின்
உள்ளே சொருகி வைத்திருந்த
புகைவண்டியின் அனுமதி சீட்டு
கீழே விழுந்து விடுகிறது.

நீ எடுக்காமலே
புகைவண்டியிலிருந்து
இறங்கிப் போகிறாய்.

நான் தவற விட்டு விட்டாயோ
எப்படியேனும் –
எடுத்துக் கொடுப்பது போல் உன்னை
அருகில் வந்து பார்த்து விடலாமென
எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன்.

நான் அருகில் வந்ததும்
நீ சிரித்துவிட்டு –
நான் தானே போட்டு வந்தேன்
ஏன் எடுத்து வந்தீர்கள் என்றாய்.

நான் சற்று முழிக்க
அங்கேயே சென்று போடுங்கள்
ஒரு நல்ல சேதி வருமென்று நீ சொன்னாய்.

ஓடி சென்று அங்கே போட்டேன்
என் அலைபேசியில் ஒரு
குறுந்தகவல் வந்தது,

குறுந்தகவலில் அந்த சீட்டை
பிரித்துப் பார் என்றிருந்தது,

ஆவலோடு
பிரித்துப் பார்க்கிறேன்
நீ என்னை –
காதலிப்பதாய் எழுதி இருந்தாய்….
—————————————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

  1. sivasankaran's avatar sivasankaran சொல்கிறார்:

    உங்கள் திருமண வாழ்த்து கவிதையின் மறுபகுதி.

    இவர்கள்….
    குறுந்தகவல் செய்தியினால் -மனம்
    ஒருங்கிணைந்த காதலர்கள்..!

    நாளும் பொழுதும் இவர்கள்
    நடத்துகின்ற நாடகத்தில்-என்
    காதில் ஒன்றிரண்டு
    கவனமின்றி விழுவதுண்டு…

    அடுத்தவரின் ரகசியம்தான் -நமக்கு
    அடிக்கரும்பு சுவையாச்சே….
    அகப்பொருளை பாடாத
    இலக்கியமும் குறைவாச்சே…

    “காலை வணக்கம், எழுந்திருங்கள்! 1

    என்
    கனவு போர்வையினை கவனமாக மடியுங்கள்! 2

    வேலை அவசரத்தில் வியர்வை துடைப்பதற்கு -என்
    கைபேசி சினுங்கல் கைக்குட்டை தாராதா…3

    உமது
    மாலை செய்தி என் தலையில்
    மல்லிகைப்பூ சூடாதா…4

    தூர இருந்தாலும் எனது
    துண்டுசெய்தி துப்பட்டா விசிராதா…5

    காலின் வெடிப்பினிலே எனது
    கைப்பேசி மணியோசை
    களிம்பெடுத்து பூசாதா…6

    நான்
    உறங்கும் பொழுதிற்கு
    உறங்கா உயிருக்கு உமது
    கள்ள செய்தி கன்னத்தில் உரசாதா…7

    பெற்றோரின் ஆசிகளும் பெரியோரின் வாழ்த்துகளும்
    கொட்டும் பூமழையாய் நமை குளிர்விக்க வாராதா…8

    என்று…இவர்கள் நாளும் பொழுதும் நடத்துகின்ற காதல்தான்
    நற்றிணை காதலிலும் நனிசிறந்த காதலென்பேன்…”

    இது உங்களுக்காக முன்பே எழுதியது. வடிவம்தான்
    கொஞ்சம் மாறிவிட்டது…

    Like

  2. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    அன்றென்றில்லை, இன்றும் அவளில்லாத பொழுது நான் இல்லாத பொழுதென்றே எண்ணுகிறேன் ஐயா. செல்லம்மா என் வாழ்வின் வரம். அவள் பார்க்க மாட்டாளெனில் இன்னும் இங்கே நிறைய பதியலாம், பார்ப்பாளென்பதால், அந்த நாட்கள் புதைந்த “பிரிவுக்குப் பின்’ னினை இங்கே துணைக்கழைக்கிறேன்.. http://vidhyasaagar.com/2010/03/29/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-48/#comments

    மீதிய உணர்வினை, எழுத்து ஆங்காங்கே உள்வாங்கியே கொள்கிறது. உண்மையிலேயே, அந்த உணர்வை இங்கு பதிந்துக் கொள்ள வேண்டுமெனில், ஒரு மாதத்தில் மட்டும், அந்நேரம் குவைத்திலிருந்து நான் அனுப்பிய குறுந்தகவல்கள் 2400 -க்கு மேல், அவள் அனுப்பியது அதற்கும் மேல். ஒரு மாத என் அலைபேசி கட்டண செலவு மட்டும், 25 ,௦௦௦ க்கும் மேல்.

    அது தவிர அந்த குறுந்தகவல்கள் அத்தனையையும் எழுதி வெளியிட்டால்.. எத்தனையோ ஐக்கூ புத்தகங்கள் போடலாம். உயிருள்ள ஐக்கூக்களில், எங்களின் காதலின் ரகசியங்கள் எல்லோரின் பார்வையிலும் உயிர் பெற்றுக் கொள்ளுமோ என்று விட்டுவிடுவோம்.

    வீட்டில், இரு வீட்டு பெற்றோர்களும், அண்ணனும் மட்டுமே பார்த்து முடிவு செய்து, புகைப்படத்தில் நிறைந்து போய், இறைவனின் ஆணை என்று ஏற்று நேராக மூன்று நாள் விடுப்பில், நிச்சய தாரத்த மண்டபம் சென்றிறங்கி, முதன் முதலாய் அவள் முகம் பார்த்த அந்த சிரிப்பின் ஜோளிப்புகள்; இன்றும் கூட மனதில், நினைவில், காதலாய் காதலாய் பூப்பூக்கின்றன.

    அதொரு காலம் என்று விட்டுவிட வேண்டாம்.. அதே காதல்; சற்று மாறிய காலத்தில், கூடுதல் உரிமையோடு, யதார்த்த புரிதல்களோடு, இன்றும் அதே உல்லாச படகுதனில்… வாழும் ஒவ்வொரு கணப் பொழுதுகளையும் இனிக்க இனிக்க கடக்கிறோம் என்பதே கடவுளின் அன்பிற்கு உரியது போல்.

    அதலாம் போகட்டும், அந்நேரமெல்லாம் நான், தம்பி பாலாவிற்கும், சற்று கூடுதல் ரகசியமாய் உங்களுக்கும், தம்பி பாரிக்கும் தந்த தொல்லைகளை கூட இப்படி அழகாக கவியில் வடித்துள்ள பாங்கில் தான் ஐயா; உங்கள் வரிகளின் ரசிகனானேன் நான்!!

    தங்கள் அன்பிற்கு; இறைவனுக்கே நன்றி. எல்லாம் நல்லதும்; அவன் செயலன்றியும் ‘என் வாழ்வில் வேறொன்றுமில்லை!

    Like

  3. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    “காலை வணக்கம், எழுந்திருங்கள்! 1

    என்
    கனவு போர்வையினை கவனமாக மடியுங்கள்! 2

    வேலை அவசரத்தில் வியர்வை துடைப்பதற்கு -என்
    கைபேசி சினுங்கல் கைக்குட்டை தாராதா…3

    உமது
    மாலை செய்தி என் தலையில்
    மல்லிகைப்பூ சூடாதா…4

    தூர இருந்தாலும் எனது
    துண்டுசெய்தி துப்பட்டா விசிராதா…5

    காலின் வெடிப்பினிலே எனது
    கைப்பேசி மணியோசை
    களிம்பெடுத்து பூசாதா…6

    நான்
    உறங்கும் பொழுதிற்கு
    உறங்கா உயிருக்கு உமது
    கள்ள செய்தி கன்னத்தில் உரசாதா…7

    பெற்றோரின் ஆசிகளும் பெரியோரின் வாழ்த்துகளும்
    கொட்டும் பூமழையாய் நமை குளிர்விக்க வாராதா…8

    ஹஹாஆஆஆ…………………:)

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி ராதா.., மழைக்காக ஏங்கும் விவசாயிகளுக்கு என்றேனும் பெய்யும் தூறல் போல் வருகிறீர்களா…, நலமேனில் மகிழ்ச்சி. இப்படி ரசிக்க அன்றைய நாட்களின் பதிவுகளில் நிறைய உண்டு. பதியவே அவகாசம் குறைகிறது, அதையும் தாண்டி சமூகம் எஞ்சி நிற்ப்பதால். எனினும்,, ஆங்கங்கே கவிதைகளினூடே கலந்தே இருக்கும்.

      அதிலும் நீங்கள் மகிழ்ந்த வரிகளை போல், ஆயிரமாயிரம் இருந்தாலும், இது மேலும் ஐயா முனு.சிவசங்கரனின் கவி திறனே.. அவருக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி