பள்ளி வாசலில்
விற்கும் நெல்லிக்காய் என்றால்
உனக்கென்ன அவ்வளவு
விருப்பமா’ என்றேன்.
இல்லையே
அப்படியெல்லாம் இல்லையே’ என்றாய்.
அடிக்கடி வருகிறாயே
வெளியே’ என்றேன்.
நான் நெல்லிக்காய்
வாங்கி போய் சாப்பிட்டதே
இல்லை’ என்றாய்.
அப்படியா..
பிறகு ஏன் ஒருநாளைக்கு
அத்தனை முறை வந்து போகிறாய்’ என்றேன்
நெல்லிக்காய் விற்கும்
கிழவி மீது காஆஅ….தல் என்றாய்’ கோபமாக
அப்படியா
காதலிக்க கூட செய்வாயா?
அதும் போயும் போயும் அந்த கிழவியையா’ என்றேன்…
உன்னை……………. என்று
கை ஓங்கி எனை அடிக்க வருகிறாய்
நான் சிரித்துக் கொண்டே ஓடுகிறேன்..
நீ என்னை சிரித்துக் கொண்டே துரத்துகிறாய்..
உனக்கும் எனக்குமான காதல்
வழியெல்லாம் இரைந்து..
ஊரெல்லாம் பன்னீர் தெளிக்கிறது!!
———————————————————–
























