உனக்காக
காத்திருந்த தருணங்கள்
எனை கொண்று போட்ட கவலையில்
கடந்து –
விடைகொள்கின்றன;
உனை மனதில் சுமக்கும்
கனம் கூட சுடும் தீயென
தவிக்கையில் –
காத்திருப்பு ஒரு சுடும்
நெருப்படி பெண்ணே.
கீறி அறுத்து இதயத்தில்
இருக்கும் உன் முகம் காட்ட
துடிக்கின்றேன்,
வார்த்தைகளால் உடைத்தாவது
உன் நினைவுகளை-
கவிதைகளால் வடிக்கின்றேன்,
யாரிடமும் சொல்லாமல்கூட
உன் அன்பிற்கு மட்டுமே
தவிக்கின்றேன்..
என்றேனும்; எனை நீ தேடும்
ஒரு பார்வைக்கே – இன்னும் இன்னுமாய்
உயிர் வைத்து திரிகின்றேன்!!
—————————————————
























